தானியேலின் எழுபது வாரங்கள் Jeffersonville, Indiana, USA 61-0806 1காலை வணக்கம், நண்பர்களே. இந்த மகத்தான செய்தியாகிய தானியேலின் எழுபதாவது வாரத்தைப் பற்றி விளக்குவதற்காக எடுத்துக்கொண்ட ஊக்கமான பெருமுயற் சியைத் தொடருவதற்காக இன்று காலையில் மீண்டும் இக்கூடாரத்தில் திரும்பி வருதலானது ஒரு சிலாக்கியமாகும்... இந்த உஷ்ணமான பகல் வேளையிலே அநேகர் கூடி வந்திருக் கிறதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆயினும், அமருவதற்கு இட வசதியை அளிக்க எங்களால் இயலாமற் போனது குறித்து நாங்கள் வருந்துகிறோம். இவ்வாறு மக்கள் இடமில்லாமல் நெரித்துக் கொண்டு இருப்பதும், சுற்றிலும் நின்று கொண்டிருப்பதை பார்க்கும்போது நம்மால் ஒன்றும் செய்யக் கூடாத அளவுக்கு மிகவும் இக்கட்டாக இருக்கிறது. நீங்கள் பெற்றிருக்க வேண்டிய அளவுக்குக் கூட சௌகரியமாக இல்லாத நிலையிலே, புரிந்து கொள்வதற்கு இச்சூழ்நிலை கடின மாக இருக்கிறது. ஆனால் எங்களால் முடிந்த அளவு யாவற்றையும் விரைவிலேயே செய்வோம். இன்றைக்கு நான் உங்களை சிறிது கூடுதலான நேரம் இங்கே இருக்க வைத்துவிடுவேனென்றால், அதற்காக நீங்கள் மன்னித் துக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் இந்த செய்தியை நன்கு மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டிய வேளை இதுவே. இச்செய்தியை திட்டவட்டமாக நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, இதை நாம் மூன்று பிரிவாக பிரித்து ஒழுங்குபடுத்தினோம். 2இங்கே காணக்கூடியதாக இருக்கிற இந்த சபையார், இச்செய்திகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வொலி நாடாக்கள் உலகம் பூராவிலும் அனுப்பப்படுகின்றன என்பதை அறி வீர்கள். இவ்வொலி நாடாவைப் போட்டுக் கேட்பவர்களுக்கு நான் ஒன்று கூறிடவிரும்புகிறேன்; என்னவெனில், நீங்கள் இருந்தாலும் சரி, நான் கூறும் இவ்வுபதேசங்களில் சில வற்றோடு நீங்கள் மனம் ஒவ்வாமல் இருக்கக் கூடும். ஆனால் சகோதரரே, நான் உங்களுக்கு கூற விரும்புவது என்னவென் றால், நீங்கள் இதைக் காண்கிறவிதமாக அதை எனக்கு நீங்கள் விளக்கிக் கூறலாம், ஒருவேளை அது நான் விசுவாசிப்பதிலும் முரண்பட்டதாக இருந்தாலும், நீங்கள் கூறுபவைகளுக்கு நான் செவி கொடுக்க மகிழ்ச்சியாயிருப்பேன். 3அகில உலகிலும் காணப்படும் கிறிஸ்துவின் சபைக்கு பக்திவிருத்தி உண்டாகுதலுக்காக என்ற என் இருதயத்திலுள்ள நோக்கத்தின்படியே தான் இச்செய்திகளை நான் தேவனுடைய வார்த்தையிலிருந்து கொண்டு வருகிறேன். நாம் கடைசி காலத் தில் வாழ்கிறோம் என்று நான் நிச்சயமாகவே நம்புகிறேன். இதை நான் விளக்கிக் கூறுவதற்காக நான் எடுத்துள்ள இந்த நன் முயற்சியில், நான் விசுவாசிப்பவைகளை யார் மேலும், எந்த வகையிலாகிலும் திணிக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்குக் கிடையாது, அதைப் பற்றி குற்றமுள்ளவனாக நான் இருக்க வில்லை என்பதை நான் அறிவேன். 4அநேக சமயங்களில் மக்கள் ஒலி நாடாக்களின் வாயிலாக செய்திகளைக் கேட்டுவிட்டு, “நான் அந்த விஷயத்தோடு முரண் பட்டிருக்கிறேன். அவருக்கு வேத வாக்கியம் தெரியவில்லை'' என்றெல்லாம் கூறுகின்றனர். நல்லது, அது ஒருவேளை, உண்மையாயிருக்கலாம். அது உண்மையல்ல என்று நான் கூற மாட்டேன்; ஆனால் எனக்கோ, நான் அதைப் பற்றி ஆராய்ந்து படிக்கிறேன். யாருடைய வார்த்தைகளையும் நான் எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலும், மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைக் குறித்துப் படித்து, அவர்கள் கூறியவைகளைப் பற்றி மெச்சுகிறேன். எவராவது ஏதாவது கூறினால், அதை நான் மெச்சுவேன். ஆனால் பிறகு நான் அதை தேவனிடத்தில் எடுத்துச் சென்று, ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் அவ்விஷயம் வேதத்தோடு பொருந்தி இருக்கிறது என்பதை நான் விளக்கிக் கூற முடியும் என்கிற வரையிலும் நான் அங்கே காத்திருப்பேன். அப்பொழுது நான் அது சரியானதாக இருப்பதற்கு எங்கோ அருகாமையில் உள்ளது என்று நான் அறிவேன். உங்களுக்கு சரியென்று இருக்கக்கூடும். அவைகளில் அங்கே தான் என்னைப் பொருத்தமட்டில், அது சரியான கோட்டை விட்டு - விலகி இருப்பதாக இருக்கும். நீங்கள் தவறாக இருப்பதாக கருதுபவைகளில், அது என்னைப் பொருத்தமட்டில் வழி விலகாமல் இருப்பதாக இருக்கும். இவ்வாறு எதிரும் புதிருமாக இருப்பதுண்டு. 5இன்று காலையில் இங்கே கூடி வந்திருக்கிற இந்த அருமை மக்களையும், இவ்வொலி நாடாக்களைக் கேட்பவர்களையும் நாங்கள் பாராட்டுகிறோம். செய்யப்பட்டவைகளெல்லாம் தேவ னுடைய இராஜ்யத்திற்கென்றே உள்ளவைகளாகும். உலகம் பூராவிலும் அருமையான அநேகம் நண்பர்கள் எனக்கு உண்டு. அவர்களை நான் மிகவும் மெச்சுகிறேன். அவர்களோடு நான் நித்தியத்தை கழிக்க முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். எந்தவிதத்திலும் அந்த மக்களை வஞ்சிக்க வேண்டும் என்பது என் இருயத்தில் துளிக்கூட கிடையாது. ஆனால் அவர்களுக்கு என்னவெல்லாம் என்னால் உதவ முடியுமோ அவைகளை நிறை வேற்றுவதே எனது எண்ணம். தேவனுடைய ஜனங்களை நடத்துவதற்கு உள்ள ஞானத்தை தரும்படி சாலொமோன் ஜெபித்தது போல் தான் என் உள்ளத் திலும் நான் உணருகிறேன். அதுவே என்னுடைய உத்தமமான ஜெபமாகும். 6ஊழியத்தில் இங்கே என் கூட்டாளிகளாயிருக்கிற சகோதரர் கள், சகோ. மெர்ஸியர், சகோ. ராய் பார்டர்ஸ், சகோதரன் நெவில் என் குமாரன் பில்லி பால்; ஜீன் இங்கே எங்கோ இருக் கிறார், டெடி இன்னும் ஏனைய சகோதரர்கள், எனக்கு உதவியாக இருக்கும்படி வருகின்ற அவர்களையெல்லாம் நான் மெச்சுகிறேன். சகோதரன் லியோவுக்கு சமீபத்தில் உண்டாயிருந்த தரிசனத் தைப் பற்றி - அதை அவர் ஒரு சொப்பனம் என்று அழைத்தார்எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு இராத்திரியிலே நாங்கள் முதன்முதலாக சந்தித்தபொழுது - அவர் ஆகாயத்தில் மிக உயரத்திலே, ஒரு பெரிய கூர் நுனிக்கோபுரம் இருப்பதை பார்த் தாராம். நான் அதன் மேல் எங்கோ நின்றுகொண்டு பிரசங் கித்துக்கொண்டிருக்கிறேனாம். அதெல்லாம் என்ன என்பதை காண்பதற்காக அவர் அங்கே ஏறினாராம். அந்த கூர்நுனிக் கோபு ரத்தின் சிகரத்தின் மேல் வந்தடைந்தபோது அங்கே தொலைவில் ஒரு தாம்பளத்தைப் போன்று, வெள்ளியைப் போல் பிரகா சிக்கும் ஒளியானது காணப்பட்டது என்று அவர் கூறினார். நான் அங்கே நின்று ஜனங்களுக்கு பிரசங்கித்துக்கொண்டிருந்ததாக அவருக்கு அதில் காணப்பட்டதாம். அப்பொழுது அவர் எனது கவனத்தைக் கவர்ந்ததினால் நான் அவரது பக்கமாக திரும் பினேனாம். அவர் என்னிடம் “நீர் அங்கே எவ்வாறு போய் சேந்தீர்கள்?'' என்று கேட்டார். ''நான் அங்கே எவ்வாறு வந்தடைய முடியும்?'' என்றும் கேட்டிருக்கிறார் அந்தச் சொப் பனத்தில். அதற்கு நான், ''லியோ, ஒரு மனிதனும் இங்கே வர முடியாது. தேவன் தான் ஒரு மனிதனை இங்கே கொண்டு வர வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் இங்கு வரக்கூடாது. நீங்கள் கீழே இறங்கிப்போய், இதைச் சத்தியம் என்று கண்டு கொண்ட தன் பிறகு, கீழே இருக்கிற மக்களுக்கு அதைப் பற்றி சாட்சியாக, அது சாத்தியமாயிருக்கிறது என்று கூறவேண்டும்'' என்று நான் கூறினேன். சகோதரன் லியோ, எவ்வளவு காலத்திற்கு முன்பாக அது ஏற்பட்டது? அநேக ஆண்டுகளுக்கு முன்பாக அல்லவா? அநேக ஆண்டுகள். அது முதற்கொண்டு, அவர் அந்த ஊழிய மானது தேவனிடத்திலிருந்து வந்ததாகும் என்று மக்களுக்கு சாட்சியாகக் கூறிக்கொண்டிருக்கிறதில் அவர் உண்மையுள்ள வராக இருந்து கொண்டிருக்கிறார். அது என்னிடத்திலிருந்து வந்ததாக இருக்க நான் விரும்பவில்லை. அது என்னிடத் திலிருந்து உண்டானதாக இருக்குமானால், அப்பொழுது, அது நன்றாக இருக்காது, ஏனெனில் ஒரு மனிதனில் நன்மை யாதொன்றும் இல்லை என்பதைக் கவனித்தீர்களா? அது தேவனிடத்திலிருந்து வந்ததாக இருக்கவேண்டும். 7இப்பொழுது நான் சுற்றிலும் பார்த்தபொழுது... நேற்று மதியம் நான் எனது நண்பரான சகோதரன் வெஸ்ட் அவர்க ளோடு கைகுலுக்கினேன். இதுவரையிலும் அவரை நான் இக்கட்டிடத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆம், இதோ நான் இக்காலையில் அவரை இப்பொழுது காண்கிறேன். எவ்வளவு தொலைவிலிருந்து மக்கள் இங்கு பிரயாணம் செய்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? மிகத் தொலை விலுள்ள அலபாமாவிலிருந்து ஞாயிறு ஆராதனைக்காக நீண்ட பிரயாணம் செய்து இங்கே வருகிறார்கள். சகோதரன் வெல்ஷ் ஈவான்ஸ் அவர்களை கடந்த ஞாயிற்றுக் கிழமை இங்கே காணத் தவறினேன். இன்றைக்கு அவர் இங்கே வந்திருக்கிறார் என்று யாரோ கூறினார்கள். அவர்களெல்லாம் ஜியார்ஜியாவிலுள்ள டிஃப்டன் என்ற இடத்திலிருந்து காரில் பிரயாணம் செய்து இங்கே வருகிறவர்களாய் இருக்கிறார்கள். அந்த சகோதரனின் கூட்டாளிகளெல்லாரும்கூட இங்கே அமர்ந்திருக்கிறார்கள். அநேகர்... சகோதரன் பாமர் ஜியார்ஜி யாவிலுள்ள மேகானிலிருந்து வந்திருக்கிறார். சகோதரி அங்ரன், இன்னும் ஏனையோர் பின்னால் உட்கார்ந்திருக்கிறார்கள். டென்ன ஸிலுள்ள மெம்ஃபிஸ் என்ற இடத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் சிந்தித்து பாருங்கள்... ஏனையோர் வேறு பல இடங்களிலிருந்து வந்திருக்கிறார்கள். தொலைவிலுள்ள தெற்கு கரோலினாவிலிருந்து வந்த ஒரு பெண்மணியை சற்று நேரத்திற்கு முன்புதான் சந்தித்தேன். 8இப்பொழுது, சிக்காகோவிலிருந்து இன்னும் வெவ்வேறு இடங்களிலிருந்தும் வந்திருக்கிறதான மக்களை ஒவ்வொருவராக நான் இங்கே பார்த்துக்கொண்டே வந்தேன். அவர்கள் யாவரும் இந்த ஒரு ஆராதனையில் கலந்து கொள்வதற்காகவே, நூற்றுக் கணக்கான மைல் தூரத்திலிருந்து கார்களில் பிராயணம் செய்து வந்திருக்கிறார்கள். இங்கே இவ்வளவு தூரம் வந்து அந்த செய்தியைக் கேட்பதற்கென்றே அவர்கள் தங்கள் பிள்ளைகளுக் கென்று உள்ள பணத்தை மேசையிலிருந்து எடுத்துச் செல வழித்துக் கொண்டு இங்கே அவர்கள் வந்து சேருகிறார்கள். இங்கு வரும்போதோ, அவர்களுக்கு அமருவதற்கு இருக்கை கள் இல்லை, குளிர்சாதன வசதி பொருத்தப்படாத அறைதான் உள்ளது, அதில் அவர்கள் நின்று கொண்டிருக்க வேண்டிய தாயுள்ளது. வியர்வையைத் துடைத்துக்கொண்டு நின்று கொண்டிருக்க வேண்டியதாய் அவர்களுக்கு இருக்கிறது. இந்நாட்களில் ஒன்றில் அமைதியான இந்த வான வெளிக்கப் பால் அவர்கள் போகத்தக்கதான ஒரு ஸ்தலம் அவர்களுக்கு இருக்கவில்லையென்று நீங்கள் என்னிடம் கூறக் கூடுமோ? அவர்கள் உண்மையுள்ளவர்கள். அம்மக்கள் தசமபாகம் செலுத்துவார்கள். அவர்கள் இவ்வளவு தூரம் வருகிறது மாத்திர மல்ல, அவர்கள் எனக்கு தசம பாகங்களும் காணிக்கைகளும், கர்த்தருடைய ஆலயத்தினுள் கொண்டு வந்து, எது நீதியாயிருக் கிறதோ அதை செய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள். அவ்வித மான உத்தமமான மக்களை தேவன் அபரிமிதமாக ஆசீர்வதிப் பராக. தேவனுடைய இரக்கமும் கிருபையும் அவர்களோடு இருப்பதாக. 9என்னுடைய நண்பர் சார்லீகாக்ஸ் அவர்களையும், இன்னும் தெற்கு கென்டக்கியிலிருந்து வரும் ஏனையோரையும் நான் காண்கிறேன். நீங்கள் எங்கு பார்த்தாலும், வெவ்வேறு இடங் களிலிருந்து மக்கள் வந்திருக்கிறதை நீங்கள் காணலாம். இதோ இங்கே ஒரு இளைஞர் அமர்ந்திருக்கிறார். அவரது பெயரைக் கூற எனக்கு இயலவில்லை. நான் அவரை சிக்காகோ வில் சந்தித்தேன். ஆனால் நீங்கள் இங்கிருந்து வெகு தூரத் திலுள்ள ஊரில் இருக்கும் ஒரு வேதாகம பள்ளியிலிருந்து வந்திருக்கிறீர்களல்லவா? மிளெசரியில் உள்ள ஸ்ப்ரிங்ஃபீல்ட் என்ற ஊரில் உள்ள அசெம்ப்ளி ஆப் காட் வேதாகமப் பள்ளி லிருந்து, ஆம் நல்லது, இந்த சிறிய பழைய சபைக்கு, பல்வேறு இடங்களிலிருந்து வந்திருக்கிறார்கள் என்பதை பாருங்கள் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு நகர வட்டகைக்கு அப்பால், அந்த ஏழாவது வீதியிலே, அந்தக் காலை யிலே நான் மூலைக்கல்லை வைத்ததை எண்ணிப் பாருங்கள். நான் அப்போது திருமணமாகாத இளைஞனாயிருந்தேன். மக்கள் எல்லாவிடங்களிலுமிருந்து வந்து இங்கே நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறதாக நான் ஒரு தரிசனத்திலே கண்டேன். நான் பிரசங்க பீடத்திற்கு பின்னால் நின்று கொண்டு மிகவும் மகிழ்ச்சியுற்ற மனிதனாக அப்போது இருந்தேன். அப்போது தான் அவர் என்னிடம், ஆனால் இது உன்னுடைய கூடாரமல்ல'' என்று கூறினார். ஆகாயங்களுக்கு கீழாக அவர் என்னை அமரப்பண்ணினார். வேதாகமத்தின் தாளிலே எழுதப் பட்டு அம்மூலைக்கல்லில் வைக்கப்பட்டிருக்கிற மீதமுள்ள காரியங்களை நீங்கள் அறிவீர்கள். 10உங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். “நல்லது, நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்'' என்று கூறுவது மிகவும் குறைவுள்ளதாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன். நான் உங்களை நம்பு கிறேன். தேவனைப் பற்றி உங்களுக்கு இருக்கும் அனுபவங்களை நான் விசுவாசிக்கிறேன். ஒரு புருஷனோ அல்லது ஒரு ஸ்திரீயோ தாங்கள் என்னவிதமான துணிகளை அணிந்திருக்கிறார்கள் என்பதைக் காண்பிப்பதற்காக நூற்றுக்கணக்கான மைல்கள் தூரம் பிரயாணம் செய்து இங்கு வந்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. இல்லை, தங்களை மற்றவர்கள் பார்க்கவேண்டு மென்பதற்கான நோக்கங்கொண்டு அவர்கள் இங்கே வரவில்லை. அவர்கள் இங்கே வருகிறார்கள், ஏனெனில் அவர்கள் ஆழமான உண்மையுடன், தங்களுடைய ஆத்தும இரட்சிப்புக் காகவே இங்கு வருகிறார்கள். என்னுடைய ஜெபம் என்ன வெனில்; ”தேவனே, எனக்கு உதவி செய்யும். அவர்களுடைய உத்தமத்தில் பாதியளவாவது எனக்கு இருக்க உதவி செய்யும், அதைக் கொண்டு நான் அவர்களுக்கு என் முழு இருதயத்தோடு என்னை நோக்கியவாறு ஊழியம் செய்திடட்டும்'' என்பதே. 11இன்று காலையில் நீங்கள் காண்கிறதான இச்செய்தியைப் பற்றி இங்கே கரும்பலகையில் வரையப்பட்டுள்ளது. நான் என்ன பிரசங்கிக்கப் போகிறேனோ அதைப் பற்றி பேசிக் கொண்டே போகையில் உங்களுக்கு அதை விவரிப்பதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இந்த “தானியேலின் எழுபது வாரங்கள்'' ஒரு பெரிய பாடமாக உள்ளது. இந்த வாரம் முடிவில் ஏறத்தாழ இரண்டு பகல்களும் இரண்டு இரவுகளும் நான் அதைப் பற்றி ஆராய்ந்து கொண்டேயிருந்து, சத்தியமானதை உரைப்பதற்குரிய சரியான வார்த்தைகளைக் கண்டு கொள்வதற்காக ஈடுப்பட்டிருந்தேன். அவைதானே வேதாகமம் முழுவதோடும் ஒத்திருக்கவேண்டும். ஏதோ ஒரு சிறிய வேத வாக்கியத்தைக் கொண்டு அதை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியாது. அந்த அளவில் மட்டும் அதைப் புரிந்து கொண்டு, ”இதைத்தான் இது கூறுகிறது“ என்று கூறிட முடியாது. அதன் பிறகு, திரும்பி வந்து, ”ஆனால் இங்கே இதைக் கூறுகிறது. இதற்கு முரணாக இருக்கிறது“ என்றும் கூற முடியாது. அவ்வாறு அது இருக்க முடியாது. எல்லா சமயத் திலும், ஒரே விதமானதைக் தான் அது கூறிட வேண்டும். அவ்வாறு இல்லாவிடில் நீங்கள் தவறாயிருப்பீர்கள். அவ்விதமாகத் தான் அதைக்குறித்து போதித்திட நான் முயன்றிருக்கிறேன். 12இப்படியிருக்க, ஒலி நாடாக்களைக் குறித்துக் கூறிட விரும்புகிறேன். உலகத்தின் பல்வேறு பாகங்களிலுள்ள எனது சகோதரரர்களின் குறை கூறுதல்கள், என்னுடைய செய்தி ஒலி நாடாக்களைக் குறித்து மிகப் பெரிய அளவில் உள்ளது. தேவனு டைய கிருபையினாலே நாம் உலகத்தோற்றத்திற்கு முன்னரே முன் குறிக்கப்பட்டிருக்கிறோம் என்று நான் விசுவாசித்து அதை உபதேசிக்கும் வகையைக் குறித்துத் தான் அக்குறை கூறுதல்கள் உள்ளன. என்னுடைய பெந்தெகொஸ்தே சகோதரர்களே, உங்களு டைய அபிப்பிராயங்கள் நற்கிரியைகளினால் இரட்சிப்படைதல் என்ற கொள்கையைச் சார்ந்ததாக (legalist) இருக்கிறது என்று நான் அறிவேன். நான் கூறுபவைகள் உங்களுடைய அபிப் பிராயங்களை குலைப்பதாக உள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால் ஒரு கிறிஸ்தவ சகோதரன் என்ற முறையில், உங்களு டைய முழங்கால்களில் உங்கள் வேதாகமங்களோடு தேவ னுக்கு முன்பாக நின்று, அதைப் பற்றி உங்களுக்கு விளக்கிக்கூறிடு மாறு தேவனை நோக்கிக் கேட்க நீங்கள் கரிசனை கொள்ள மாட்டீர்களா? நீங்கள் அதைச் செய்வீர்களா? நற்கிரியைகளினால் இரட்சிப்படைதல் என்ற உங்களுடைய கொள்கையை எடுத்துக் கொண்டு ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் உள்ளவைகளோடு சரியாக சம்மந்தப்படுத்திக் காட்டுவீர்களா? 13சர்பத்தின் வித்தைக் குறித்தோவெனில் அதுதான் மக்களைக் கொன்று விடுகிறது. அநேக மக்கள் அதை விசுவாசிப்பதில்லை. ஆனால் நீங்கள் ஆதியாகமத்தில் வாசித்தால் சர்ப்பத்திற்கு வித்து உண்டு என்று வேதம் கூறுகிறது. 'சர்ப்பத்தின் வித்துக்கும் ஸ்திரீ யின் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்'' என்று கூறுகிறது. ஆகவே சர்ப்பத்திற்கு ஒரு வித்து உண்டாயிருந்திருக்கிறது. சர்ப்பத்தின் வித்து ஆவிக்குரியதாக இருந்தது என்று சொன்னால், அப்போது, இயேசு ஒரு மனிதனாக இருக்கவில்லை என்றாகி விடும், ஆகவே ஸ்திரீயின் வித்தும் ஆவிக்குரிய பிரகாரமாகாத் தான் இருந்தது என்றாகிவிடும். அவர்கள் இருவருக்குமே வித்துக்கள் உண்டு. அந்த பகையானது இன்னமும் இருக்கத் தான் செய்கிறது. சர்ப்பத்திற்கு ஒரு வித்து உண்டாயிருந்தது. நீங்கள் உங்களது வேதாகமத்தை எடுத்துக்கொண்டு தேவனுக்கு முன்பாக பயபக்தியுடன் முழங்கால் படியிடுவீர்களானால், அப்போது தேவன் நிச்சயமாக அதை உங்களுக்கு வெளிப் படுத்துவார் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லையென்றால், கடிதத் தின் மூலமோ அல்லது நேர்முகப் பேட்டியின் மூலமோ அல்லது வேறெந்த வகையில் உங்களுக்கு என்னால் உதவ முடியுமோ, அவ்வாறு உங்களுக்கு சிறப்பாக உதவிட நான் எந்த வேளையிலும் உங்களுக்குக் கிடைக்கக் கூடியவனாக இருக்கிறேன். நிச்சயமாகவே அது ஒரு மனிதனை இரட்சிப் பதுமில்லை, அல்லது ஒரு மனிதனை ஆக்கினைக்குள்ளாக்கு வதுமில்லை என்பதை நாம் உணருகிறோம்; ஆனால் மக்கள் காண வேண்டு மென்பதற்காக நாம் மிகவும் பிரயாசப்படும் அந்த விஷயத்தின் பேரில் அது வெளிச்சத்தைக் கொண்டு வருகிறது. அது வெளிச்சத்தைத்தான் கொண்டு வருகிறது. இங்கு காணும் வகையில் உள்ள சபையாக கூடியுள்ள வர்களே, நான் இதை ஒலிநாடாக்கள் நிமித்தமாகக் கூறுகிறேன். அதைப் புரிந்து கொண்டீர்களா? இந்த ஒலிநாடாக்கள் எவ்விடங்களுக்கும் செல்லுகிறது. 14இத்திருவசனத்தின் ஆக்கியோனை நாம் அணுகும் முன்னர், சற்று நாம் நமது தலைகளை வணங்குவோமாக. இங்கே சபையில் உள்ளவர்களில் எத்தனை பேர்கள் தேவையுள்ளவர்களாயிருக் கிறீர்கள்? “ஓ, தேவனே, நான் தேவையுள்ளவனாயிருக்கிறேன், என்மேல் இரக்கமாயிரும்'' என்று மாத்திரம் கூறுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இந்த ஒலிநாடாவைக் கேட்ப வர்களே, நீங்கள் இதைக் கேட்கையில், தேவன் உங்களது வேண்டுதலை அருளிச் செய்வாராக. 15எங்கள் பரமபிதாவே, நாங்கள் நன்றியுள்ள ஜனங்களாக இருக்கிறோம், ஆயினும், தகுதியற்றவர்களாயிருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்று காலையிலே உமது கிருபாசனத்தை அணு குகிறோம். ஏனெனில் நாங்கள் வரும்படி அழைக்கப்பட்டுள் ளோம். 'என் நாமத்தினால் பிதாவை நீங்கள் கேட்டுக் கொள்வ தெதுவோ அதை நான் செய்வேன்'' என்று இயேசு கூறினார். இப்பொழுது அது சத்தியமாயிருக்கிறதென்று நாங்கள் அறிகிறோம். இங்கே கூடியுள்ள இச்சபையிலும் இவ்வொலிநாடாக்கள் போகும் எப்பிரதேசத்திலும், இதற்கு செவி கொடுக்கிற பல்லாயிரக்கணக்கான மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் உண்டாயிருக்கக்கூடும். பிதாவே, நாங்கள் மறுபடியும் பிறக்கும் பொழுது, எங்களுடைய ஆவியானது உன்னததிலிருந்து பிறந்ததாக இருக்கும். அது தேவனின் ஆவியாகிய பரிசுத்த ஆவியாக எங்கள் மேல் இருக்கும். எங்கள் மேல் இருக்கும் அந்தப் பரிசுத்த ஆவியானவர் சர்வ வல்லமையுள்ளவராயிருந்து நாங்கள் நடை பெறவேண்டுமென வாஞ்சிக்கும் எதையும் செய்யக்கூடியவராக இருக்கிறார் என்பதை நாங்கள் உணருகி றோம். பரம பிதாவே, தேவனுடைய இராஜ்யத்தின் மகிமைக் காக, இந்த எல்லா ஜெப விண்ணப்பங்களும், வாஞ்சைகளும் இன்று காலையில் எங்களுக்கு அருளப்படத்தக்கதாகவும், எங்களுடைய வியாதிகள், பெலவீனங்களிலிருந்து நாங்கள் விடு விக்கப்பட்டு குணமடையவும், எங்கள் முழுப் பெலத்தோடு எங்கள் தேவனை சேவிக்கத்தக்கதாகவும், அந்த ஆவியான வருக்கு எங்களது விசுவாசத்தை நீர் விடுவிக்க வேண்டுமென்று நாங்கள் உம்மை வேண்டிக் கொள்கிறோம். 16இன்றைக்கு, நாங்கள் அறிந்து கொள்ளும்படி எங்கள் செவி களைத் திறந்தருளும். இந்த மகத்தான கேள்வியை மக்கள் மத்தியில் கொண்டு வந்து அதைக் குறித்து அவர்கள் மனதில் தெளிவாக்குவதற்காக நான் எடுத்துக்கொண்டுள்ள பெரு முயற்சியில்... கர்த்தாவே, நான் இதை இங்கே காகிதத்தில் எழுதி வைத்தும், இக்கரும்பலகையில் அதைக் குறித்த வரைப்படத்தை வரைந்தும் வைத்துள்ளேன். ஆனால் நான் அதைக் குறித்து விவரித்துக் கூறுவதற்கு பாத்திரமானவன் அல்ல. இந்த வார்த் தையை எழுதி, அது ஆவியால் ஊக்குவிக்கப்பட்டிருக்கும்படி செய்து, தானியேல் தீர்க்க தரிசிக்கு கொடுத்தவராகிய மகத்தான போதகரே, இன்று காலையிலே ஆவியின் ஏவுதலை அனுப்பும் படியாக நாங்கள் ஜெபிக்கிறோம். இந்தக் கடைசி காலம் வரையிலும் அப்புத்தக மானது மறைத்து வைக்கப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார். இந்தக் கடைசி நாட்களில்தான் அவைகளை புரிந்துகொள்ளும் படி திறந்து கொடுக்கப்படும் என்றும், வார்த்தையானது எங்களை ஆண்டு கொள்ளத்தக்கதாகவும் வெளிச்சம் உண்டாகத்தக்கதாக எங்கள் இருதயத்தில் எளிய முறையில் பதித்து வைக்கப்படும் விசுவாசம் உண்டாயிருக்கும் என்றும், அது எங்கள் ஜீவியங் களில், தான் விரும்பிய பிரகாரம் செய்யும்படி நீதியின் விருட் சங்களை முளைப்பிக்கும் என்றும் கூறியிருக்கிறீர். தேவனிலே உள்ள எங்களது விசுவாசமானது இன்று காலையிலே, அதை எங்களுக்கு கிடைக்கச் செய்யட்டும். எங்களையே நாங்கள் பிரதிஷ்டை செய்தவண்ணமாக நாங்கள் இப்பொழுது தாழ்மை யுடன் உமக்கென்று காத்திருக்கிறோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென். 17இப்பொழுது நாங்கள் இந்தக் காலை வேளைக்காகவும் மீண்டும் தேவனுடைய நித்திய வார்த்தையின் இப்பக்கங்களை திறப்பதற்குக் கிடைத்த இந்த மகத்தான தருணத்திற்காகவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இப்பொழுது, நான் இதை விளக்கி கூறும்படி என்மேல் பொறுப்பு சுமத்திக்கொண்டுள்ளதற்கு காரணம் என்ன வெனில்... இப்போது சற்று காலத்திற்கு முன்புதான் நாம் வெளிப்படுத்தின விசேஷத்தில் ஏழு சபைக் காலங்களைப் பற்றி ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருந்தோம். வெளிபடுத்தின விசேஷம் 3-ம் அதிகாரத்தின் முடிவில் சபையானது பூமியி லிருந்து மகிமைக்குள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. வெளிப் படுத்தின விசேஷத்தில் சொல்லப்பட்ட சில விஷயங்கள் இப்போது நடைபெற வேண்டுமென்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவைகள் சபைக் காலங்களுக்கு சம்மந்தமில்லாதவைகளாகும். நான் இதைப்பற்றி அவர்களுக்கு விளக்கிப் புரிய வைக்க முயன்று கொண்டிருக்கிறேன். நீங்கள் நினைக்கிறதைவிட அதிகமாக முடிவு வேளைக்கு சமீப மாயிருக்கிறோம். 18சில நாட்களுக்கு முன்பாக ஒரு நாள் இரவில், பில்லி.. அல்லது எனது மருமகள் நடுநிசியில் என்னை தொலைபேசியில் கூப்பிட்டு, மருத்துவமனையில் மரித்துக்கொண்டிருக்கிற நிலை யில் எனது உறவினர் ஆண்டி ஹெர்மன் என்ற பெயருள்ளவர் இருக்கிறார் என்று கூறினாள். நான் போய் அவரைப் பார்த்தேன். அவருக்கு மிக அதிகமாக மயக்க மருந்து கொடுத்திருந்ததால், அவர் ஆழ்ந்த நித்திரையிலிருந்தார், எனவே என்னால் அவருடன் பேச முடியவில்லை. அடுத்த நாள் காலையில் .. நான் அவரிடம் பேச இயலுகிற வரையிலும் அவரை உயிரோடு வைத்திருக்கும்படி நான் தேவனிடம் வேண்டினேன். 'அட்,'' அவர் ஒரு நல்ல மனிதர், ஆனால் அவர் ஒரு கிறிஸ்தவர் அல்ல. அவர் எனது அங்கிள் அல்ல, ஆனால் எனது உறவினள் ஒருத்தியை அவர் விவாகம் செய்திருந்தார். அப்பொழுது அங்கே நின்று கொண்டிருந்த ஹாட்டி அத்தை அவர்கள், “பில்லி, இவர் தன்னுடைய இந்த எண்பது வருட வாழ்க்கை முழுவதும் தேவனை சேவிக்கவேயில்லை. சிலவாரங்களுக்கு முன்பாக வீட்டில் உட்கார்ந்து கொண் டிருந்து...'' அவர் எண்பது வயதுள்ளவர். இயல்பாகவே அவர் அதிகமான உடல் உழைப்புச் செய்வதில்லை. அவர் அந்த அம்மாளை அழைத்து, ''ஹாட்டி, உனக்கு ஒரு காரியம் தெரியுமா? சில நிமிடங்களுக்கு முன்பாக கிறிஸ்து எனக்கு முன்பாக வந்தார்'' என்றார். அவள் அவரை நோக்கிப் பார்த்து, “என்ன விஷயம்'' என்று கேட்டாள். அவர் கூறினார், “இல்லை அவர் இங்கே எனக்கு நேர் முன்பாக நின்று, ஒரு காரியத்தை என்னிடம் அவர் கூறினார்.'' ''அவர் என்ன கூறினார்'' என்று கேட்டாள். “நீர் நினைக்கிறதைவிட நேரம் பிந்திவிட்டது'' என்று. 19அப்போதிலிருந்து சில வாரங்களுக்குப் பிறகு, இரண்டு மூன்று வாரங்களுக்குப் பின்பு அவருக்கு 'ஸ்ட்ரோக்'' ஏற்பட்டு, பக்கவாதம் வந்து. மருத்துவமனையில் மரிக்கிற நிலையில் கிடந்தார். அத்தை ஹாட்டியிடம், “நீர் என்னையோ அல்லது வேறு யாரையுமோ, இப்பொழுது அவர் வந்தெட்டி யிருக்கும் இந்த நிலையில், அவரது இருதயத்தை சரியான நிலைக்கு உட்படுத்துவதற்காக, அழைக்காமலிருந்ததற்காக நீங்கள் வெட்கப்படவேண்டும்'' என்று நான் கூறினேன். அடுத்த நாள் காலையில் நான் கர்த்தரிடம் வேண்டினேன்: அப்பொழுது நான்... அவரால் என்னோடு பேச முடியவில்லை. எனவே நான் அவரிடம், ''அங்கிள் ஆண்டி அவர்களே, நான் பேசுவது உங்களுக்குக் கேட்கிறதா?'' என்று கேட்டேன். அப்பொழுது அவர் தன் தலையை சிறிதளவு அசைத்தார். தன் தாடையையும் அசைத்தார். நான் அவருக்காக ஜெபித்து, அவர் தன்னுடைய பாவங்களை தேவனுக்கு முன்பாக அறிக்கையிடும் படி செய்தேன். நான் அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்க விரும்பினேன்; அத்தை ஹாட்டியும் அவர் ஞானஸ்நானம் பண்ணப்பட விரும்பினார்கள். பிறகு நான் ஹாலுக்குச் சென்று, அங்கே சுற்று வட்டாரத் தில் வாழ்ந்து வந்த ஒரு இளம்பெண்ணை சந்திக்கச் சென்றேன். அவர்கள் அவளை மனநோய் மருத்துவ நிலையத்திற்கு அனுப்பு வதற்காக இருந்தார்கள். கர்த்தர் அப்பெண்மணிக்கு ஒரு பெரிய காரியத்தைச் செய்தார். அதினால் அவள் தன் வீட்டுக்குத் திரும்பி வந்தாள். பிறகு, சாலையிலே, கருப்பு நிறத்தவரான ஒரு சகோதரியைச் சந்தித்தேன். அவள், “நீங்கள் சகோதரன் பிரான்ஹாம் அல்லவா? என்றாள். ''நான்தான்'' என்றேன் நான். ''உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா? நான்தான் திருமதி. ட்ரை“ என்று கூறினாள். நான், 'ஆம், ஞாபகமிருக்கிறது என்று எண்ணுகிறேன். பீட்டரையையும் மற்றோரையும், ஆம் உங்களையும் ஞாபகமிருக் கிறது'' என்றேன். அவள் அறையினுள் எட்டிப் பார்த்தாள். அவள் ஏன் அதைக் கூறினாள் என்று நான் வியந்து கொண்டிருந் தேன். அங்கே அங்கிள் ஆண்டி தன் வியாதிப் படுகையில் இருந்து குணமடைந்து எழுந்திருந்தார். அவர் தன் கை கால்களை எவரையுமேபோல் இயல்பாக அசைத்துக் கொண்டிருந்தார்; அந்த வியாதிப்படுக்கையை விட்டு நீங்கியிருந்து, அங்கிருந்து போய்விட அவர் விரும்பினார். இப்பொழுது அவரும் அவரு டைய மனைவியும், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வரப்போகிறார்கள். 20ஆகவே நான் எதற்காக அந்த விஷயத்தைக் கூறினேன் என்றால், நாம் நினைப்பதைவிட நேரமானது பிந்திவிட்டது. இந்த 'தானியேலின் எழுபது வாரங்கள்' செய்தியானது அதை நாம் புரிந்து கொள்ளத்தக்கதாக செய்யும் என்று நான் விசுவாசிக்கிறேன். இந்த ஒலிநாடாவில் நான் ஏற்கெனவே கூறியுள்ளபடி, நம்முடைய அநேக பெந்தெகொஸ்தே சகோதரர்கள், இதனை ஒத்துக்கொள்கிறதில்லை. அவர்கள் ஏதோ ஒரு மகத்தான, வல்லமையான காரியம் சம்பவிக்கவேண்டுமென எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். “என்னுடைய சகோதரர்களே, நீங்கள் மிகவும் கவனமாக செவிகொடுப்பீர்களானால், அந்த மகத்தான வல்லமையான காரியமானது ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டது என்பதைக் கண்டு கொள்வீர்கள். இயேசு திரும்பி வருவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரத்திலேயே சபையானது பூமியைவிட்டு கிளம்பிப் போய் விடுகிறது. கடைசியாக அந்தக் காலத்திற்குரிய செய்தியாளனைத் தவிர அங்கே அதற்கு மேல் வேறொன்றும் கூறப்படவில்லை. அதற்குப் பிறகு, 19-ம் அதிகாரத்தில் அவர் மணவாட்டியோடு மீண்டும் வருகிறவரையிலும் உள்ள காலத்தில் யூதர்களைப்பற்றிய விஷயத்தைத்தான் அங்கே நாம் காண்கிறோம். 6-ம் அதிகாரத் திலிருந்து 19-ம் அதிகாரம் முடிய யாவுமே, யூதர்களுக்கு சம்மந்த முள்ளதாகத்தான் இருக்கிறது. அங்கேதான் இந்த முத்திரை களின் போது, முன்பு யேகோவா சாட்சிக்காரராயிருந்த சகோ. வுட் அவரது குடும்பத்தினர் யாவரும் இன்று காலையில் அந்தக் காரியத்தை , அதாவது 1,44,000 பேர்களுக்கும் புறஜாதிகளுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லையென்றும், அவர்கள் யூதர்களாவர் என்பதையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென விரும்பு கிறேன். புரிந்துகொண்டீர்களா? அவர்கள் இன்று பூமியிலிருக் கின்ற இரகசியமாயிருக்கிற கிறிஸ்துவின் சரீரமாகிய சபை யல்ல; மணவாட்டியே அந்த இரகசியமான சரீரமாயிருக்கிறாள். பரிசுத்த ஆவியினாலே நாம் அந்த இரகசியமான சரீரத்தினுள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். 21நாம் ஏற்கெனவே படித்துக்கொண்டிருந்த தானியேலின் புஸ்தகத்தில் இருந்து மீண்டும் நாம் வாசிப்போமாக, ஏனெனில் அது அவருடைய வார்த்தையாக இருக்கிறது. தானியேலின் புஸ்தகம் 9ம் அதிகாரம் 24ம் வசனம்: மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும் தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்தரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின் மேலும், உன் பரிசுத்த நகரத்தின் மேலும் எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப் பட்டிருக்கிறது. (இருபத்தைந்தாம் வசனம்) இப்போதும் நீ அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்... (கடந்த ஞாயிறன்று நாம் “மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணுகிறதற்கும்'' என்கிற விஷயத்தை பற்றித்தான் முடிவாக பிரசங்கித்து முடித்தோம். இங்கேதான் நாம் இன்று காலையில் 25ம் வசனத்திலிருந்து துவக்குகிறோம்). இப்போதும் நீ அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்; எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டு கிறதற்கான கட்டளை வெளிப்படுவது முதல்... (''அது என்னுடைய பரிசுத்த நகரம்'' என்பதாக இருக்கிறது. பார்த்தீர்களா?)... பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும். அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப் போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம் போல இருக்கும். முடிவு பரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நிய மிக்கப்பட்டது. (தமிழ் வேதாகமத்தில் ''முடிவு பரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக...'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கில வேதாகமத்திலோ, 'யுத்தத்தின் முடிவு வரையிலும் நாசங்கள் உண்டாக நியமிக்கப்பட்டது'' என்று கூறப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) அவர்... (இப்போது ஞாபகத்தில் கொள்ளுங்கள்; அதுதான் யுத்தத்தின் முடிவாகும். அதைப் பற்றி இங்கே கரும் பலகையில் வரையப்பட்டுள்ளது. இப்பொழுது இன்னொரு விஷயத்தைக் குறித்து நாம் ஆரம்பிக்கிறோம்). அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி .... அந்தவாரம் பாதி சென்ற போது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான்..... (அவ்வளவுதான்!).... நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன் மேல் தீருமட்டும் சொரியும் என்றான். தானி 9:24-27 22ஓ, என்னே ஒரு பாடம் இது! ''மக்கள் இதை உண்மை யிலேயே புரிந்து கொள்கிறார்களா என்பதைப் பற்றி நான் வியந்து கொண்டிருக்கிறேன்'' என்று என் மனைவியிடம் அன்றொரு நாள் நான் கூறினேன். நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். இங்கு நாம் நாள் முழுவதும் தங்கியிருக்க நேர்ந்தாலும், தங்கியிருங்கள். இப்பொழுது, அதை நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். அது சத்தியமாயிருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். நீங்கள் மாத்திரம் அதைக் கண்டு கொள்வீர் களெனில் ..... இதற்குப் பிறகு, நான் இந்த வரைபடத்தை இங்கே தொங்கிவிட்டு விட்டுப் போகப் போகிறேன். நீங்கள் பிற்பாடு அதைப் பார்த்து வரைந்து கொள்ளலாம். அதற்காக நீங்கள் இன்று மதியத்திலே எப்பொழுதும் வேண்டுமானாலும் இங்கே வந்து, இவ்வரைபடத்தை வரைந்து கொள்ளலாம். அது உங்களுக்கு புரிந்துகொள்வதற்கு உதவி செய்யும். அக்காரணத் தினால்தான், நீங்கள் புரிந்துகொள்ளும்படியாகத்தான், அதை நான் அங்கேயே வைத்துவிடுகிறேன். 23நாம் காரியத்தின் அடிப்படையைப் பெற்றுக்கொள்ளும் படி ஏற்கெனவே பார்த்தவைகளை சற்று திம்பிப் பார்ப்போமாக. இப்பொழுது அங்கே... தானியேல் தன் ஜனங்களைப் பற்றி அக்கறையுள்ளவனாயிருந்தான், ஏனெனில் அவன் எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசித்து, அவர்கள் எழுபது வருடங்கள் சிறையிருப்பில் இருப்பார்கள் என்று எரேமியா கூறியிருந்ததைப் பற்றி அறிந்து உணர்ந்து கொண்டான். அவர்கள் ஏற்கெனவே அறுபத்தெட்டு ஆண்டுகள் சிறையிருப்புக் காலத்தை கழித்துவிட்டனர் என்பதை அவன் பார்த்தான். ஆகவே நேரமானது நெருங்கிவிட்டது என்பதை அறிந்தான். ஆகவே அவன் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அவனது அன்றாடப் பணிகளிலிருந்து நீங்கினவனாக இருந்து, தன் முகத்தை தேவனுக்கு நேராக்கி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, எப்பொழுது அந்த வேளையானது இருக்கும் என்ப தைப் பற்றி அறிந்து கொள்ளும்படியாக உபவாசத்திலும் ஜெபத் திலும் உட்கார்ந்தான். நான் முன்பே கூறியவண்ணமாக பிறகு நாம் காண்பதென்னவெனில்... (இந்த மின் விசிறி சற்று கூடுதலாக வேகத்தில் சுழலுகிறது, அதினால் என் தொண்டை கரகரப்பாகிறது... நன்றி சகோதரனே). 24தானியேல் தன் ஜனங்களுக்காக இந்தத் தகவலைப் பெற வேண்டுமென விரும்பினான் என்பதை நாம் கண்டு கொண் டோம். தானியேல் தனக்கு முன்னர் தோன்றிய தீர்க்கதரிசிகளின் புத்தகங்களைப் படித்ததின் பேரில், தான் முடிவுக்கு சமீபமாக வந்துவிட்டதன் உணர்வை அடைந்திருப்பான் என்று நான் எண்ணுகிறேன். ஆகவே முடிவுக்கு, நேரமானது இன்னும் எவ்வளவு சமீபமாயிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அவன் தேவனைத் தேடினான். நமது பயணத்தின் முடிவில் இருக்கிறோம் என்பதை நாம் கண்டு கொள்ளும்போது, இரட்ட லும் சாம்பலிலும் உட்காருவதினால், நமக்கு நீதியுண்டாக வில்லை. ஆனால் லௌகீக காரியங்களை நம்மைவிட்டு தூக்கி யெறிந்துவிட்டு, இந்த ஜீவனத்தின் விசாரங்களையும் அகற்றி விட்டு, ஆண்டின் எந்த நாளில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைக் குறித்து கண்டு பிடிக்க நாம் தேவனைத் தேடுவதே நமக்கு ஏற்றதாயிருக்கிறது. ஏனெனில் நாம் முடிவுக் காலத்தில் இருக்கிறோம் என்பதைக் காண்கிறோம். சபையானது உபவாசித்து ஜெபித்து ஆயத்தமாயிருக்கும்படியாக, நான் தானே இந்த செய்தியைக் கூறுவதற்காக உள்ள நன்முயற்சியை என்மேல் சுமத்திக்கொண்டுள்ளேன். இதை எவ்வாறு விளக்கு வது என்பது எனக்கு தெரியாமல் இருந்ததால், “இந்த தானி யேலின் எழுபது வாரங்களைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை'' என்று கூறிக்கொண்டு அதனால், ஒவ்வொரு தடவையும் இதைவிட்டு விலகிக் கடந்து சென்று விட்டிருக் கிறேன். எனவேதான் நான் இதை விளக்குதவற்காக என்மேல் பொறுப்பெடுத்துக்கொண்டுள்ளேன். கர்த்தருடைய உதவி யாலும், அவருடைய கிருபையாலும், நான் அதைச் செய்ய முடியும் என்றும், கர்த்தருடைய வருகைக்கு நாம் எவ்வளவு சமீபமாயிருகிறோம் என்பதை உங்களுக்கு காண்பிக்கும்படியாக இயலும் என்றும் நான் விசுவாசிக்கிறேன். 25இப்பொழுது தானியேலுக்கு இன்னும் இரண்டு ஆண்டு கள் மாத்திரமே மீதியாக இருந்தன. பிறகு நாம் காண்பதென்ன வெனில், அவன் ஜெபத்தில் இருந்து கொண்டிருக்கையில், காபிரியேல் தூதன் அவனிடம் விரைந்து வந்து, அவனுக்கு, எப்பொழுது அவனுடைய ஜனங்கள் சிறையிருப்பை விட்டு புறப்பட்டுப் போகப்போகிறார்கள் என்பதைப் பற்றி மட்டு மல்லாமல், அவனுடைய ஜனங்களுக்கென்று என்னவெல்லாம் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றியும், இன்னும் அவனுடைய ஜனங்களுக்கு நடக்கப் போகிறவைகளெல்லா வற்றையும் பற்றி விவரித்தான். 'யூதர்களுக்கு இன்னும் எழுபது வாரங்கள் விடப்பட்டிருக்கிறது'' என்று அவன் கூறினான். பிறகு நாம் அவனது விஜயத்திற்கு ஆறுவிதமான நோக்கங்கள் உண்டாயிருந்தன என்று காண்கிறோம். அவையாவன: மீறுதலைக் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிற தற்கும், அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசினத் தையும் முத்திரிக்கிறதற்கும், மகாபரிசுத்தமுள்ளவரை அபி ஷேகம் பண்ணுவதற்கும். கடந்த ஞாயிறு காலையில், தானியேல், அவனுக்கிருந்த அந்த சூழ்நிலையில், ஜெபித்துக்கொண்டிருந்தான் என்பதைப் பற்றி பார்த்தோம். கடந்த ஞாயிறு மாலையில், மக்கள் வீடு களுக்குச் செல்லும்போது படிக்கத்தக்கதாக வேதவாக்கியங் களைக் கொடுத்தோம். நீங்கள் அவைகளை வாசித்தீர்களா? நீங்கள் அதை விரும்புகிறீர்களா? அது அற்புதமானது! இப்பொழுது இந்த ஆறுவித நோக்கங்களுள் ஆறாவது நோக்கமாகிய, “மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணு வது'' என்பதில், மகா பரிசுத்தமுள்ளவர் என்பது எப்பொழுதும் சபையையே, கூடாரத்தையே குறிக்கும் என்பதை நாம் கண்டு கொண்டோம். கடைசியாக செய்யப்பட வேண்டிய காரிய மானது மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணுதலாகும். அதுவே ஆயிரமாண்டு அரசாட்சியின் கூடாரமாகும். அங்கே தான் அவர் ஆயிரம் ஆண்டு வாசம் பண்ணுவார். நாம் அதில் வாசம் பண்ணுவோம். 26இப்பொழுது, இன்றைக்கு, நாம் “எழுபது வாரங்கள் எது?'' என்பதைக் குறித்துப் பார்க்க அணுகிக் கொண்டிருக் கிறோம். இந்த எழுபது வாரங்கள் என்பது மிகவும் முக்கியமான பாகமாகும். வேதவாக்கியங்கள் பொய்யுரைக்க முடியாது என்பதை நாம் அறிவோம். அவைகள் உண்மையாகத்தான் இருக்க வேண் டும். தானியேலிடம் காபிரியேல் தூதன் வந்து, யூதர்களுக்கு இன்னும் எழுபது வாரங்கள் மட்டுமே தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கூறினால், நாம் வாரத்திற்கு ஏழு நாட்கள் என்ற அர்த்தத்தில் மட்டுமே எடுத்துக்கொள்வோம். ஆனால் தீர்க்கதரி சனமோ அந்தவிதமாக அர்த்தம் தொனிக்காது. அவைகள் எப்பொழுது உவமானமாகவே சொல்லப் பட்டுள்ளன. ஆகவே, காலங்கள் முழுவதிலும், அங்கே நூற்றுக் கணக் கான பேரறிஞர்கள், திறமைசாலிகள் இருந்திருந்தார்கள்; அவர் கள் இந்த எழுபது வாரங்களானது என்ன என்பதைப் பற்றி விளக்கிட முயன்றிருப்பார்கள் என்பதைப் பற்றி சந்தேக மேயில்லை. அப்படிப்பட்டவர்கள் எழுதின அதைப் பற்றியதான அநேக வியாக்கியானங்களை நான் படித்திருக்கிறேன். அட்வென் டிஸ்ட் சபையின் திருவாளர் ஸ்மித்துக்கு அவருடைய கருத்துக் களுக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அதே போல், டாக்டர் லார்கின் என்பாருடைய கருத்துகளுக்காக நான் நன்றி யுள்ளவனாயிருக்கிறேன். அவைகளை வாசித்ததில், சரியாகத் தோன்றுகிற இடங்களை நான் காணும்படியாக அது விளக்கியது. நான் விவரிக்கவேண்டுமென விரும்பியவைகளைக் குறித்த கருத்துக்களைப் பெறுவதற்கு, காலம் என்றால் என்னவென்பதை கண்டு கொள்ள, நான் காலத்தைக் குறித்த கலைக் களஞ்சியத்தைத்தான் ஆராய்ந்தேன். 27காலங்களும், காலமும், அரைக் காலமும் செல்லும் என்று சொல்லப்பட்டதை நாம் காண்கிறோம். ஒரு காலம் என்பது என்ன? ஒரு வாரம் என்பது என்ன? அநேகம் அநேகமாண்டு களுக்கு முன்பாக அதாவது 3,430 வருடங்களுக்கு முன்பாக தேவன் யூதர்களோடு இடைபட ஆரம்பித்தார். தானியேலின் இக்குறிப்பிட்ட காலமானது கிறிஸ்துவுக்கு முன் கி.மு.538ம் ஆண்டாக இருந்தது. அப்பொழுதுதான், காலங்களும், காலமும், அரைக் காலமும் என்பதைப் பற்றியும், இந்த எழுபது வாரங்களைப் பற்றியும் அவன் பேசியிருக்கிறான். எங்கே அந்த எழுபது வாரங்கள் அவனை எடுத்துச் செல்லும் என்பதைக் கவனியுங்கள். அவன் பாபிலோனில் அந்த எழுபது வார காலத்தினுள்தான் இருந்தான், ஆயினும் தேவன், அவனுடைய ஜனங்களின் மேல் அவ்வளவு காலம்தான் தீர்மானிக்கப் பட்டுள்ளது என்று அவனிடம் கூறினார். 28இப்பொழுது இங்குள்ள என்னுடைய சபையானது கடந்த ஆண்டுகள் முழுவதிலும், நான் எப்பொழுதும் உங்களிடம், ''வாரத்தின் எந்த நாள் என்பதை அறிய வேண்டுமானால் காலண்டரை பாருங்கள், ஆனால் நாம் வாழும்காலத்தைப் பற்றி அறிய வேண்டுமானால் அந்த யூதர்களைக் கவனியுங்கள்'' என்று கூறியுள்ளதை அறிவீர்கள். அது மாத்திரமே காலத்தைக் காட்டும் கடிகாரம். தேவன் புற ஜாதிகளுக்கு எந்த ஒரு குறப்பிட்ட காலத்தையும் ஒதுக்கவில்லை. அங்கே குறிப்பிட்ட ஒரு காலமானது கொடுக்கப்படவில்லை. அங்கேதான் அநேக மாபெரும் எழுத்தாளர்கள் யூதருக்கும் புறஜாதியாருக்கும் இது பொருந்தும் என்று போட்டு குழப்பி விட்டார்கள். ஏனெனில் அவர் ''உன் ஜனங்கள்'' என்று கூறினார். ஆனால் அவர் தானியேலிடம் தான் பேசிக் கொண்டிருந்தார். சபையி னிடத்தில் அல்ல. தானியேலின் ஜனங்களாகிய யூதர்களைக் குறித்துதான் அவர் பேசினார். அவர் சபையினிடத் திற்கு அவைகளை பேசினாரென்றால், அப்போது நீங்கள் அது தொடர்பற்று அறுந்து போவதைத்தான் காண்பீர்கள். கிறிஸ்து வின் வருகைக்கு முன்னால் மிகவும் பின்னால் இருக்கிறவர்களாக இருக்கும். நீங்கள் போட விரும்புகிற எந்த வகையான தீர்க்க தரிசன வாரத்திலும் கூட அது காலம் முடிவுற்றதாக ஆகிவிடும். அது ஏற்கெனவே காலநிலை முடிவுற்றதாக இருக்கிறது. ஆனால் அவரோ யூதர்களிடம் தான் பேசிக்கொண்டிருக்கிறார். ஆகவே யூதர்கள்தான் தேவனுடைய காலம் காட்டும் கடிகாரமாக இருக்கிறார்கள். 29“நடுநிசிக்கு இன்னும் மூன்று நிமிடங்கள் உள்ளன' என்ற திரைப்படத்தை சர்வதேச பூரண சுவிசேஷ வியாபாரிகளின் சங்கத்தின் உதவித் தலைவராக உள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த சகோ. ஆர்கான்ப்ரைட் சமீபத்தில் என்னுடைய வீட்டுக்கு கொண்டு வந்தார் என்பது உங்களுக்கு நினைவிருக் கும். அதுதானே ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியின் பேரில் எடுக்கப் பட்ட திரைப்படமாகும். எருசலேமுக்குள் அந்த யூதர்கள் திரும்பி வந்ததை நான் கண்டபோது, நான் கூடாரத்திற்கு வந்து சேர்ந்து, ”எனக்கு மறு குணப்படுதல் உண்டானதுபோல் உணருகிறேன்'' என்று நான் கூறினேன். “அந்த யூதர்கள் திரும்பி வருதைக் காணும்போது...'' என்று நான் கூறினது உங்களில் அநேகருக்கு நினைவிருக்கும். இயேசு மத்தேயு 24-ம் அதிகாரத் தில், ''அத்தி மரம் துளிர்விடுவதை நீங்கள் காணும்போது எதை எதிர்பார்க்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமே?” என்றார். கவனித்தீர்களா? யூதர்கள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். 30இப்பொழுது இங்கே நான் சில வியாக்கியனங்களை எழுதி வைத்திருக்கிறேன். அவைகளுக்குள் செல்ல நான் விரும்பு கிறேன். அதற்காக என்னுடைய நேரத்தை நான் எடுத்துக் கொள்ளுகையில், நீங்கள் கூட அவைகளை எழுதி எடுத்துக் கொள்ளலாம். இவையாவும் எப்பொழுது சம்பவிக்கிற தென்றால்... இவைகள்... இப்பொழுது நாம்... இப்பொழுது நாம் இருக்கிறதான வேளையிலே... இவையாவும் சம்பவிக் கிறது... அது யூதருக்குரியது, சபைக்கும் அதற்கும் கொஞ்சமும் சம்மந்தமேயில்லை. வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரத் திற்கு பிறகு தொடங்கி, 19-ம் அதிகாரம் முடிய சபைக்கு சம்மந்தமுள்ளது ஒன்றும் இல்லை. நீங்கள் அதை பொருத்த முள்ளதாக ஆக்க முடியாது. அது அங்கே உள்ளதில்லை. இதை நான் எவ்வாறு கண்டு கொண்டேன் என்பதை விளக்கிட விரும்புகிறேன். இதைக் குறித்து நான் இப்பொழுது இங்கே இக்கரும்பலகையில் கால அளவுகளைக் குறித்து வரைந்து காண்பித்துள்ளதை உங்களில் அநேகர் காண்கிறீர்கள். அது எவ்வாறு கால வேளைகளில் வருகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்படியாக விளக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இயலுகிறதா? இது மிகவும் சிறியதாக எழுதப்பட்டுள்ளதால், பின்னால் அமர்ந்திருக்கிற உங்களுக்கு சரியாக காண இயல வில்லை என்று நான் கருதுகிறேன். அது பெக்கி வரைந்ததாகும். அந்த படமானது... அதைவிட மோசமான படம் ஒன்று வரைந்திருந்தாள், அது நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தில் வந்த அந்த சிலையின் உருவமாகும். பெக்கி வரைந்தபடியால் அது மனிதனைப் போல் தோற்றமளிப்பதைவிட ஒரு பெண்ணைப் போல்தான் தோற்றமளிக்கிறது. ஆனால் எப்படியிருந்த போதிலும் நமக்குத் தேவையான தகவலை அளிக்கக் கூடியதாக அது இருக்கிறது. 31அம்மக்களின் மேல் எழுபது வாரங்கள் செல்லும்படி தீர்மானிக்கப்பட்து என்பதை, வேதத்தை நாம் வாசித்தால் அறிந்துகொள்ளலாம். சபைக்கும் அதற்கும் எந்த சம்மந்தமு மேயில்லை. இவ்வெழுபது வாரங்களுக்கும் சபைக்கும் சம்மந்த மேயில்லை. நீங்கள் இங்கேயுள்ள இவ்வரைப்படத்தை கவனித் துப் பார்த்தீர்களானால், சபைக் காலத்தை நீங்கள் காணலாம். இங்கே நாம் அதை வரைந்திருக்றோம். நாம் சபைக் காலங் களைப் பற்றி படித்துக்கொண்டிருக்கையில், ஜியார்ஜியா விலிருந்து உள்ள ஒரு சகோதரன் தான் நமக்கென இவ்வரைப் படத்தை வரைந்து கொடுத்தார். இது எதைக் குறிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள இயலும் என்பதைப் பற்றி நான் நிச்சயமுள்ளவனாயிருக்கிறேன். இவ்வரைப் படத்தில் வெள்ளையான இப்பகுதி, அது முழுவதும் அப்போஸ்தல ஊழியமாயிருந்தது என்பதை எடுத்துக் காட்டுகிறதாயிருக்கிறது. அதன் பிறகு இரண்டாவது சபைக் காலத்தில், அவர்கள் நிக்கொலாய் மதஸ்தருடைய கிரியைகளை கொண்டவர்களாய் இருந்தனர். அது அப்பொழுது இன்னும் ஒரு உபதேசமாக மாறவில்லை. மூன்றாவது சபைக் காலத்தில், அது ஒரு உபதேசமாக மாறியது. நான்காவது சபைக் காலத்தில் அது ஸ்தாபனமாக ஆகியது. அதுதானே ரோம போப்பு மார்க்கமாக ஆகியது. அந் நான்காவ தான சபைக் காலம்தான் இருண்ட காலங்களாக விளங்கியது. அங்கே காணப்படுகிற இரண்டு பகுதி யாவும் நிக்கொலாய் மதஸ் தருடைய போதகம் அல்லது ரோமானியக் கொள்கை என் பதைக் குறித்து எடுத்துக்காட்டுகிறது. அதிலுள்ள வெண்மைப் பாகமானது பரிசுத்த ஆவியை, உண்மையான சபையைக் குறிக்கிறது. பவுலின் காலத்தில் துவங்கியது போல, அவ்வப் போஸ்தல சபை யாவும், பரிசுத்த ஆவியால் நிரப்பப் பட்டி ருந்தது. அதன்பிறகு, பகட்டாரவாரமுள்ள மேட்டுக் குடியினர் உள்ளே வரத்துவங்கினர். பிறகு அவர்கள் முழுவதும் ஒன்று படுத்தி, முழுவதும் புதியதானதொரு சபையை அதிலிருந்து ஏற்படுத்தி நிறுவினர். அந்த சிறிய சபையோ சுட்டெரிக்கப் பட்டும், கல்லெறியுண்டும், சிங்கங்களுக்கு இரையாக்கப் பட்டும் இன்னும் இப்படிப்பட்ட சகல தொல்லைக்குள் ஆளாக்கப்பட்டனர். 32சீர்த்திருத்தலின் காலத்தின் போது லூத்தர் வந்தார், அங்கே இன்னும் கூடுதலான வெளிச்சம் உண்டாயிற்று என்பதை நீங்கள் காணலாம். வெஸ்லியின் நாட்களிலே, இன்னும் அதைவிட கூடுதலான வெளிச்சமானது கொண்டுவரப்பட்டது. ஆனால் இக்கடைசி சபைக் காலத்திலே, இங்கே, நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தால் நிரம்பி சபைக் காலத்திலேஇக்காலத்தில் தான் நாம் இருக்கிறோம். அது நிக்கொலாய் அல்ல, லவோதிக்கேயாவாக இருக்கிறது. இதின் காலத்தில் தான் நாம் வாழ்கிறோம். அங்கே அமைதியான வெளிச்சம் இல்லை என்பதை கவனியுங்கள். அங்கேயுள்ள அதைப் பற்றி வரைதலைக் கண்ட ஒருவர், ''சகோதரன் பிரான்ஹாமே, உமக்குத் தலைகுனிவு இது, ஏனெனில் இந்தக் காலம் மகத்தான பிரகாசிக்கப்படுதலின் காலமாக இருக்கிறதே'' என்றார். அதற்கு மறுமொழியாக, நான், “அது புடைத்து சலிக்கப் பட்டால், இந்த அளவுக்குக் கூடத் தேறாது'' என்று கூறினேன். 'ஆவியால் பிறந்த, இருதயத்தில் உண்மையும் சுத்தமுள்ள வர்களை மட்டும் சலித்து எடுத்தால் மிகவும் கொஞ்சம்தான் தேறும்” என்றேன். எல்லா சபைக் காலங்களிலும் இந்த சபைக் காலத்தில் மட்டும்தான் கிறிஸ்து தம்முடைய சொந்த சபையை விட்டே புறம்பாக்கப்பட்டிருக்கிறார். நாம் பெரிதான அறிக் கையை உடையவர்களாயிருக்கிறோம். ஆனால் நாம் எதைக் குறத்துப்பேசிக்கொண்டிருக்கிறோமோ அதை நாம் சுதந்தரித்துக் கொண்டவர்களாய் இருக்கிறோமா? கிறிஸ்து உண்மையிலேயே சபையில் இருக்கிறாரா? அது தானே மிகவும் சிறுபான்மை யானதாக இருக்கும். 33இப்பொழுது, தானியேலின் எழுபது வாரங்களைப்பற்றிய முக்கியக் கூறுகளை மட்டும் நாம் பார்ப்போமாக. மீண்டும் அதைப் பற்றி திரும்ப நான் ஒருவேளை இங்கே கூறக்கூடும். சுவிசேஷ ஊழியக்காரர்களே, நான் கூறுபவைகளோடு நீங்கள் ஒத்துக்கொள்ளாதிருந்தால், அதைப் பற்றி பரவாயில்லை. அவ் வாரங்கள் மூன்று காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதைக் குறித்து நாம் தானியேலின் 9-ம் அதிகாரத்தில் காண்கிறோம். மூன்று காலங்கள். முதலாவதாக ஒரு ஏழு வார காலம்; பிறகு அறுபத்திரண்டு வாரங்கள், பிறகு ஒரு வார காலம். அவைகள் மூன்று வெவ்வேறு காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இப்பொழுது நான் இக்கரும்பலைகையில் அவ்வாறு பிரித்துக் காண்பித்துள்ளேன். முதலாவது காலம், இரண்டாவது காலம்; பரிசுத்த ஆவியினாலே சுவிசேஷத்திலிருந்து நான் அறிந்து கொண்டுள்ளது என்னவெனில், கடைசி காலத்தில் தேவன் மீண்டும் யூதரிடம் திரும்புகிறார். சுவிசேஷங்கள் யாவற்றினாலும், பவுலும் ஏனையோரும் போதித்ததைக் கொண்டும், தேவன் யூதர்களிடம் மீண்டும் திரும்பி வருவார் என்பதை நாம் அறிவோம். நல்லது, அப்படி யானால், அவர் யூதரிடம் திரும்பப் போகிறார் என்றால், அதை எவ்வாறு தானியேலின் காலத்தோடு நாம் பொருத்த இயலும்? இக்கடைசி காலத்தோடு தான் சம்மந்தப்படுத்தி பார்க்க வேண்டும். அதாவது புறஜாதி சபையானது எடுக்கப்பட்டுப் போய்விட்ட பிறகுதான். ஏனெனில், தேவன் இஸ்ரவேலோடு ஒரு தேசமாகவும், நம்மோடு தனி நபர்களாகவும் இடை படுகிறார். 34இப்பொழுது நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டே போகையில், நான் இங்கே எழுதி வைத்துள்ளவைகளிலிருந்து உங்களுக்கு சிலவற்றைப் படிக்க விரும்புகிறேன். எருசலேமை திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கான கட்டளை வெளிப்பட்டது, மார்ச் மாதம் 14ம் தேதியாகும். உங்களில் யாராவது அதைக் குறித்துக் கொள்ள விரும்பினால், அப்படியே செய்யுங்கள்; அது எபிரேய மாதமாகிய நிசான் என்பதாகும். நிசானுக்குச் சரியான மாதம் மார்ச் ஆகும். கி.மு 445-இல் மார்ச் 14இல் அதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆலயத்தை திரும்ப எடுப்பித்துக் கட்டுவிப்பதற்கான கட்டளை அப்போதுதான் பிறப்பிக்கப் பட்டது. நீங்கள் வேத வாக்கியங்களை வாசித்திருக்கிறப் படியால், அதைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். ஆலயத்தையும் நகரத்தையும் திரும்ப எடுப்பித்துக் கட்டி முடிப்பதற்கு அதற்கு நாற்பத்தியொன்பது ஆண்டுகள் பிடித்தது. இங்கே வேதம் கூறுகிறபடி, தானியேல் கூறுகிறான். அல்லது தானியேலிடம் தூதன் கூறுகிறதாவது; இடுக்கமான காலங்களில் அலங்கங்கள் கட்டப்படும் என்று. அவர்கள் கட்டுகையில், ஒரு கையில் சாந்துக்கலவையும், மற்றொரு கையில் எதிரியைக் கவனித்துக் கொள்தவற்காக ஒரு பட்டயத்தைக் கையிலேந்தியவர்களாயும் இருந்தார்கள் என்பதை நம்மில் அநேகர் நினைவில் கொண்டிருக் கிறோம் (நெகே. 4:17-18). இடுக்கமான காலங்களில் அது கட்டப்படும் (தானி. 9:25). 35இப்பொழுது, நமக்கு இரண்டு மூன்று வெவ்வேறு ஆண்டுக் குறிப்பேடுகள் (Calenders) உள்ளன. நாம் அந்தப் பழைய வானசாஸ்திர காலண்டரைப் பார்க்கிறோம். ஜூலியன் காலண்டரில் ஒரு ஆண்டுக்கு 3651/ நாட்கள் உள்ளன. அவர்கள் சார்டிஸ் இன்னும் பல்வேறு நட்சத்திரங்கள் கடந்து செல்லு வதைக் கொண்டு, அந்த வேளையைக் கொண்டு, இந்தக் காலண்டரை ஏற்படுத்தினார்கள். (ஜூலியஸ் காலண்டர் என்பது ஜூலியஸ் சீசர் என்ற ரோம அரசனால் நடைமுறைக்குக் கொண்ட வரப்பட்ட காலண்டராகும் - தமிழாக்கியோன்) நாம் இப்பொழுது நடைமுறையில் கொண்டுள்ள ரோமானியக் காலண்டரில், ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள் உள்ளன. ஆனால் கிறிஸ்தவ அல்லது தீர்க்கதரிசின காலண்டரில் அங்கே ஒரு ஆண்டுக்கு 360 நாட்கள் மட்டுமே உள்ளன. இப்பொழுது, நீங்கள், எவ்வாறு இந்தக் குழப்பம் நேரிட்டது என்று வியக்க கூடும். இப்பொழுது, இதை நான் என்னுடைய கூற்றாகத்தான் நான் கூற முடியும். ஜலப்பிரளய காலத்தின் அழிவின் முன்பு, யோபின் நாட்களிலும், அவர்கள் அப்போதெல்லாம், நட்சத்திரங்களைக் கொண்டே காலக் கணக்கை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்திற்கு முன்பாக உலகமானது நேராக நிமிர்ந்திருந்தது. பின்பு மனிதனு டைய பாவத்தின் காரணமாக உலகமானது ஜலப்பிரவாகம் பெருக்கெடுத்து பொங்கி வழிந்தோடியதால், சற்று ஒருக் களித்து, சரிந்த நிலையில் ஆகியது. ஆகவேதான் நமக்கு பெரிதான துருவப் பனிப்பிரதேசங்கள் உள்ளன. புவியின் மேல் பாகத்திலும் கீழ்ப்பாகத்திலும் பனியினால் நிறைந்துள்ளது. நாம் அதை அறிவோம். புவியானது நிமிர்ந்த நிலையில் இருக்க வில்லை. அது சற்றே சரிந்த நிலையில் உள்ளது. அது அதை சந்திரன், நட்சத்திரங்கள் இருந்த இடத்திலிருந்து குலுக்கி உதறிக்கொட்டி தூர அகற்றிவிட்டு. அவைகள் அருகாமையில் இருந்து புவியை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தன. பிறகு அவைகள் உரிய இடத்தைவிட்டு இடம் பெயர்ந்து போய் விட்டன. அதனால் அதைக் கொண்டு இனிமேல் காலத்தைக் கணக்கிட இயலாமற்போயிற்று. ஏனெனில் பூமியானது ஏறு மாறான சரிசம நிலையற்ற விதமாய் சரிந்துபோய்விட்ட நிலையில் ஆகிவிட்டது தான் காரணம். எனவே அந்நட்சத்திரங்களின் நிலைக்கு ஏற்றவாறு அது அமையாமல் போய்விட்டபடியினால், அது நட்சத்திரங்களின் பிரகாசத்தின் பார்வையில் படாமல் ஆகிவிட்டது. நீங்கள் புரிந்துகொண்டீர்களா?. அப்படித்தான் ஏற்பட்டது என்று நான் விசுவாசிக்கிறேன். 36அவ்விதமான நிலையில் அது விழுந்து கிடக்கிறது. அப்படிப்படட்ட நிலை ஒரு குறிப்பிட்ட கால வேளையில் மட்டும் நீடித்தது என்பதை அது காட்டுகிறது. உங்களால் அதைக் காண முடியவில்லையா? காரியங்கள் நிலைகுலைந்து போய்விட, காரியங் கள் உதவிகரமாக இல்லாத நிலையில் போய்விடுவதை, தேவன் கொண்டிருப்பதில்லை. அப்படியே ஆகிவிட்ட ஒரு சிறிதளவு காலத்திற்குத்தான் அவ்வாறிருக்க தேவன் விடுவார். அக்காரியங் கள் அவ்வாறு நிகழ்ந்தன என்பதையும், இக்கடைசி நாட்களில், தேவன் தன் சபைக்கு இந்த இரகசியங்களையெல்லாம் வெளிப் படுத்தப்போகிறார் என்பதையும் நான் உண்மையாகவே விசு வாசிக்கிறேன். இதற்கு முன்னால் அவர் அதைச் செய்ய வில்லை. முன்காலங்களில் அவர் அதை வெளிப்படுத்தாததன் காரணம் என்னவெனில், சபையானது எப்பொழுது எந்த நேரம் வரு மென்று அறியாதிருக்கிறபடியால் விழித்திருந்து எப்போதும் ஜெபித்துக் கொண்டேயிருக்கட்டும் என்பதற்காகத்தான். ஆனால் தானியேல் 12ம் அதிகாரத்தில் “ஞானவான்களே முடிவு காலத்தில் உணர்ந்து கொள்வார்கள்'' என்ற குறிப்பிடப்பட் டுள்ளது என்பதை நீங்கள் ஞாபகத்தில் கொண்டுள்ளீர்கள். அவனுக்கு அது கொடுக்கப்பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவியினாலே உள்ள வெளிப்படுத்தலைக்கொண்டு, எந்த நாளில் நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி சபையானது அறிந்து கொள்ளச் செய்தவற்காக சபைக்குள் ஞானத்தை அளிக்கும் ஆவியானது வருகிறது. தானியேலிடம் காபிரியேல் வந்தது போல், பரிசுத்த ஆவியானவர் இக்கடைசி நாட்களில் இம்மகத்தான, ஆழமான இரகசியமான விஷயங்ளை வெளிப்படுத்துவதற்காக சபையினிடம் வருகிறார். இப் பொழுது நீங்கள் இதைப் புரிந்து கொண்டீர்களா? 37பூமியானது சற்று ஒருக்களித்து நிலையில் சரிந்துபோய் விட்டபடியால், வானவியல் காலண்டரோ, அல்லது ஜூலியன் காலண்டரோ, அல்லது மேசோனிக் காலண்டரோ உபயோ கத்தில் இல்லாத நிலைக்கு ஆகிவிட்டது. பள்ளிகளில் படித்த திலிருந்து நாம் யாவரும் அதைப் பற்றி அறிந்துள்ளோம்... அது வழக்கொழிந்து போய்விட்டது. ஆகவே, அக்காலண்டர்கள் கூறுகிறபடி இப்போது, நட்சத்திரங்கள் பூமிக்கு மேலாக குறிப்பிட்ட கோட்டில் அதே நேரத்தில் கடந்து செல்லுவதில்லை. ஆகவே ரோமனியக் காலண்டர் கூறுவது தவறாயிருக்கிறது . ஏனெனில், அதில் நாட்களை ஒன்றாக சேர்த்திட முடியாது. இங்கேதானே நான் அநேக காரியங்களை கூற முடியும். இயற்கை யும் கூட ஒரு ஆண்டில் ஒவ்வொரு மாதத்திற்கும் சரியாக முப்பது நாட்கள் மாத்திரம் உண்டு என்று நமக்கு போதிக்கிறது என்பதை நாம் கண்டு கொள்கிறோம். இப்பொழுது இரண்டு தீர்க்கதரிசிகளின் நாட்களைப் பற்றிப் பார்க்கிறதற்காக நாம் வெளிப்படுத்தின விசேஷத்தை எடுத்துக் கொள்வோமாக. அவர்கள் ஆயிரத்து இருநூற்று அறுபது நாளளவும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள் என்பதாக வேதம் கூறுகிறது. இப்பொழுது நீங்கள் வானவியல் காலண்டரை எடுத்துக்கொண்டால், இந்த மூன்றரை ஆண்டுகளுக்கான அளவை அது நீண்ட தூரம் நிச்சயமாகவே இழந்து விட்ட நிலையில் இருக்கிறது. இன்றைக்கு நமது உபயோகத்தில் இருக்கிற ரோமனியக் காலண்டரை நாம் எடுத்துக்கொண்டால் கூட அதுவும் அந்தக் கணக்கை வந்தெட்டுவதாக இருக்க வில்லை. ஆனால் நீங்கள் தீர்க்கதரிசன காலண்டரை எடுத்துக் கொண்டால், அந்த ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கணக் கில், மாதம் ஒன்றுக்கு முப்பது நாட்கள் வீதம் சரியாக கணக்கு வருகிறது, கவனித்தீர்களா? 38நமக்கு நமது காலண்டரில், சில மாதங்களில் முப்பது நாட்கள் வீதமும், அடுத்து வருகிற மாத்தில் முப்பத்தியொரு நாட்கள் வீதமும் ஒரு மாதத்தில் இருபத்தெட்டு நாட்களுக்கு வருகின்றன. அவை யாவும் குழுப்பி விடப்பட்டிருக்கிறதை கவனியுங்கள். தேவன் இவ்வாறான குழப்பமான முன்னுக்குப் பின் முரணான வகையில் உள்ள எதையும் கொண்டவராய் இருக்கமாட்டார். ஒவ்வொரு மாதத்திற்கும் சரியாக முப்பது நாட்கள் என்ற அளவில்தான் அவர் வைத்திருக்கிறார். முப்பத்தி யொன்று, பிறகு முப்பது இப்படியாக இருக்காது. புரிந்து கொண்டீர்களா? ஆனால் தேவனுடைய மகத்தான ஒழுங்கு முறைத் திட்டத்தில், சபையானது விழித்திருந்து, ஜெபித்துக் கொண்டேயிருந்து, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தங்களது ஆடைகள் கழுவப்பட்ட நிலையில் கொண்டிருந்து ஆயத்தமாயிருக்கச் செய்யும்படி, இப்படியாகச் செய்யப் பட்டது. ஓ, இக்கடைசி நாட்களிலே, அவர் வாக்குரைத் திருக்கிறார்... நாம் இப்பொழுது எந்த வேளையில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைக் காண்கிறோம். இதைச் செய்வதற்கான நோக்கம், முழு முதல் நோக்கமும், இதற்காகத்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 39இப்பொழுது அங்கே ஏழு என்று இருந்தால்... பாருங்கள், அங்கே சரியாக நாற்பத்தியொன்பது நாட்கள் - நாற்பத்தியொன் பது ஆண்டுகள் ஆலயத்தைக் கட்டுவதற்கென உள்ள காலத் திற்கு இருந்தது. அதற்காக, ஏழு தீர்க்கதரிசன வாரங்கள், ஏழு வாரங்கள் இருந்தன. ஏனெனில் ஆலயத்தை திரும்ப எடுப் பித்துக் கட்டுவதற்கு ஏழு வாரங்கள் தீர்மானிக்கப் பட்டிருந்தது, அதன்படியே சரியாக நாற்பத்தியொன்பது ஆண்டுகளில் ஆலயமானது கட்டிமுடிக்கப்பட்டது. இப்பொழுது நமக்கு வாரங்கள் என்பதினுடைய அர்த்தம் கிடைத்திருக்கிறது. ஏனெனில் வேதம் கூறியது, தூதன் கூறினான்; ஆலயத்தை திரும்ப எடுப்பித்துக் கட்டி முடிக்கும் வரையிலும் ஏழு வாரங்கள் ஆகும் என்று கி.மு.538 மார்ச் 14ம் தேதி தொடங்கி சரியாக நாற்பத்தியொன்பது ஆண்டுக் காலத்தில் ஆலயமானது கட்டிமுடிக்கப்பட்டது. ஆலயமானது கட்டியெழுப்படவும், வீதிகளும் திரும்பக் கட்டப்படவும் அதற்கென சரியாக நாற் பத்தியொன்பது ஆண்டுகள் பிடித்தது. ஆகவே என்னத்தை நாம் புரிந்து கொண்டோம்? எதை நாம் புரிந்து கொண்டோம்? ஆகவே ஏழு வாரங்கள் என்றால் நாற்பத்தியொன்பது ஆண்டுகள் என்றால், அப்பொழுது, ஒரு வாரம் என்பது ஏழு ஆண்டுகளுக்கு சமம் என்று; ஏழை ஏழால் பெருக்கி நாற்பத்தியொன்பது ஆண்டுகள் வருகிறது. சரியாக அப்படித்தான் இருக்கிறது. பாருங்கள். 40ஆகவே, இப்பொழுது, இனிமேல் அதைப் பற்றி எந்த வித ஊகிப்பும் இருக்கவில்லை. இப்பொழுது அந்த ஒவ்வொரு வாரமும் ஏழு ஆண்டுகளைத்தான் குறிக்கும் என்பதை நாம் அறிகிறோம். அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? நாம் யாவரும் சேர்ந்து அதைக் கூறுவோம். ஒரு வாரம் என்பது ஏழு ஆண்டுகளுக்கு சமம்' இப்பொழுது நாம் அதைப் புரிந்து கொண்டோம் என்று அறிந்திருக்கிறோம். ஒரு வாரம் என்பது ஏழு ஆண்டுகளுக்கு சமம். இங்கே நாம், அந்த ஏழு வார காலத்திற்குரியதைப் பார்க்க இங்கே இருக்கிறோம். (சகோதரன் பிரான்ஹாம் அதைக் குறித்து விளக்குவதற்காக கரும்பலகையண்டையிலே பின்னோக்கிப் போகிறார் - ஆசி). ஆலயத்தை திரும்ப எடுப்பித்துக் கட்டுவ தற்கு நாற்பத்தியொன்பது ஆண்டுகள் பிடித்தன. இப்பொழுது இந்த மேல் கோடு, யூதமக்களைக் குறிக்கிறது. அது குறுக்கே கடந்து செல்லுகிறது. இங்கே இது காலத்தை, நேரத்தை குறிக் கிறது. அது கடந்து செல்லுகையில், யூத ஜாதியை விட்டு விலகிக் கடந்து சென்று புற ஜாதிகளின் நேரத்திற்குள் வருகிறது. பிறகு அது தொடர்ந்து செல்லுகையில், மறுபடியும் இஸ்ரவேல் மக்களை வந்து சேர்ந்து அவர்களை பிடித்துக்கொள்ளுகிறது. 41புறஜாதிகளுக்கு என்று குறிப்பிட்ட காலமானது ஒதுக்கப் படவில்லை. 'புறஜாதிகளின் காலம் என்று மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளது. இயேசுவும் கூட அவர்களுக்கு என்று ஒரு காலத்தை ஒதுக்கிவிடவில்லை என்பதை நாம் காண்கிறோம். அதைப் பற்றி லூக்கா சுவிசேஷம் 21:24ல் பார்க்கிறோம். அவர் அங்கே, 'புறஜாதிகளின் காலம் வரையிலும் அவர்கள் எருச லேமை மிதிப்பார்கள்'' என்று கூறினார். நான் இவ்வசனத்தை எனது நினைவிலிருந்து கூறுகிறேன். நான் அதை உங்களுக்கு வேதத்திலிருந்து மேற்கோள் காட்டி வாசித்துக் காண்பிப் பேனாக; ஏனெனில் இவ்வொலி நாடாவில் இது பதிவு செய்யப் படுகிறது. எனவே நாம் அதை சரியாக அங்கே பதிவு செய்திட விரும்புகிறோம். அது சரி, என்னோடு கூட லூக்கா சுவிசேஷம் 21ம் அதிகாரம் 24ம் வசனத்தை எடுத்துக்கொள்ள நீங்கள் விரும் பினால் அவ்வசனத்திற்கு நீங்களும் திரும்புங்கள். என்னால் முடிந்த அளவு சிறப்பாக நான் அதைக் குறித்து படித்து ஆராய்ந்திருக்கிறேன். பட்டயக் கருக்கினாலே விழுவார்கள். சகல புறஜாதிகளுக் குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்.... (யாரைக் குறித்து அவர் இங்கே பேசுகிறார்? யூதர்களைப் பற்றித்தான். அது கி.பி 70 - இல் ஆலயமானது அழிக்கப்பட்டபோது நடைபெற்றதாகும்)...... சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப் போவார்கள்... (இப் பொழுது, இது பாபிலோனுக்குள் சிறைப்பட்டுப் போவதைப் பற்றியோ அல்லது, ரோமாபுரிக்குள் சிறைப்பட்டுப் போவ தைப் பற்றியோ குறிப்பிடவில்லை, ஆனால் சகல தேசத்தாருக் குள்ளும் சிறைப்பட்டுப் போவார்கள் என்று கூறப்பட் டுள்ளதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதன்படியே இன்றைக்கு யூதர்கள் சகல புறஜாதிகளுக்குள்ளும் இருக் கிறார்கள்)... புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும். லூக்கா 21:24 அங்கே ஒரு வரையறை செய்யப்பட்ட நேரமானது புறஜாதியாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அது எப்பொழுது முடியும் என்பதை ஒருவரும் அறியார். அறிந்துகொண்டீர்களா? அது ஒரு இரகசியமாக இருக்கிறது. ஆனால் யூதர்களுடைய காலமோ.... சபையைக் கொண்டு என்ன நேரம் என்பதை நம்மால் கூற முடியாது. அது பின்மாறியிருக்கிறதோ அல்லது தொடர்ந்து போய்க்கொண்டேயிருக்கிறதா, அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை அதைக் கொண்டு நீங்கள் கூற முடியாது. ஆனால் யூதர்களை உற்று நோக்குங்கள். அங்கே தானே ஒரு காலத்தைக் காட்டும் காலண்டர் உள்ளது. அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அவர்களுக்கு தேவன் சரியாக வரை யறை செய்து, ஒரு நாளை, நேரத்தை, காலத்தை ஒதுக்கியிருக் கிறார். ஆனால் புறஜாதிகளுக்கு அவ்வாறு செய்யவில்லை. அவர் யூதர்களுக்கு அதைச் செய்தார். ஆகவே நாம் எங்கே இருக்கிறோம் என்பதை கண்டறிய யூதர்களைக் கவனித்துப் பார்ப்போமாக. 4277.. இப்பொழுது இந்த ஏழு வாரங்கள் என்பது நாற்பத்தி யொன்பது ஆண்டுகளாகும். ஒரு வாரம் என்பது ஏழு வருடங் கள் ஆகும் என்பதை நாம் தெளிவாக கண்டு கொண்டுள்ளோம். நகரத்தை கட்டுவதற்கான கட்டளை வெளிப்படுவது முதற் கொண்டு மேசியா வருமட்டாகவும் (மேசியா தான் கிறிஸ்து என்பது நிச்சயமான விஷயம்) ஏழு வாரங்களும், அறுபத்தி யிரண்டு வாரங்களும், ஆக அறுபத்தியொன்பது வாரங்கள் ஆகும் என்பதாக நமக்குக் கூறப்பட்டுள்ளது. கவனித்தீர்களா? அறுபத்தியொன்பதை ஏழால் பெருக்கினால், 483 ஆண்டுகள் வருகிறது. அதை நீங்கள் குறித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதை மீண்டும் நான் உங்களுக்கு விளக்கிட வேண்டுமானால் அதைச் செய்ய, நான் மகிழ்ச்சியுள்ளவனாயிருப்பேன். 43நகரத்தை திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்குரிய கட்டளை வெளிப்படுவது முதற்கொண்டு, மேசியா வருமட்டாகவும், ஏழு வாரங்களும் (முதலில் ஏழு வாரங்கள் இங்கே ) அறுபத்தி யிரண்டு வாரங்களும் (ஏழும், அறுபத்தியிரண்டும் கூட்டினால் அறுபத்தியொன்பதாகும்) ஆக அறுபத்தியொன்பது வாரங்கள் ஆகும். அறுபத்தியொன்பதை ஏழால் பெருக்கினால் 483 வருடங்களாகின்றன. ஆகவே மேசியா வருமட்டாகவும் அங்கே 483 ஆண்டுகள் ஆகவேண்டும். இப்பொழுது இயேசுவாகிய மேசியா எருசலேம் நகரினுள் ஜெய கெம்பீரத்துடன் ஒரு வெள்ளைக் கழுதையின் மேலேறி, ஒரு குருத்தோலை ஞாயிறு அன்று, அதாவது கி.பி. 30ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி பவனி வந்தார். ஆக 'வ கி.மு. 445 முதற் கொண்டு கி.பி.30 ஆண்டு முடிய சரியாக 475 ஆண்டுகள் ஆயிற்று. ஆனால் நாம் ஏற்கெனவே பார்த்தபடி அறுபத்யொன்பது வாரங்கள் 483 ஆண்டுகளைக் குறிக்கிறது என்று இருக்கையில்... அங்கே தான் குழப்பமே ஏற்பட்டுள்ளது. பார்த்தீர்களா? இங்கே காலமானது 475 ஆண்டுகளைக் குறிக்கிறதாகக் கணக்கு ஏற்பட்டிருக்கையில் வேதாகமத்தின்படி அது சரியாக 483 ஆண்டுகளாயிருக்கிறது. ஆகவே அங்கே எட்டு ஆண்டுக்கால வித்தியாசம் காணப்படுகிறது. 44தேவன் அது அவ்விதமாக தவறாகப் போகச் செய்ய முடியாது. தேவன் இத்தனை நாட்கள் பிடிக்கும் என்று கூறியிருந் தால், அது அவ்விதமாகவே சரியாக அவ்வளவு நாட்கள்தான் இருக்கும். அவர் எத்தனை என்று கூறுகிறாரோ அந்த அளவுதான் இருக்கும். ஆகவே நாம் என்ன செய்யப் போகிறோம்? இப்பொழுது கி.மு. 475 முதற்கொண்டு கி.பி. 30 முடிய , அது ஜூலியன் காலண்டர் அல்லது வானவியல் காலண்டர் கணக்காக எடுக்கப்பட்டால், அக்காலண்டர்களில் ஒவ் வொன்றும் ஆண்டுக்கு 365 1/, நாட்கள் உள்ளவையாகும். ஆனால் அக்காலத்தை தீர்க்கதரிசன காலண்டர் கணக்குப்படி நாம் கணக்கிட்டால்.... 45இங்கே சற்று ஒரு நிமிட நேரம் நிறுத்திக்கொள்கிறேன். சந்தேகத்தின் நிழல் சிறிதும் இன்றி நீங்கள் அறிந்துகொள்ளத் தக்கதாக, நான் வெறுமனே ஒரு வசனத்தைக் கொண்டு மட்டும் உங்களோடு பேச மாட்டேன். வேத வாக்கியங்கள் முழுவதை யும் எடுத்துக்கொண்டு, அவற்றிலிருந்து ஒரு வாரமாகிய ஏழு நாட்கள் என்பது ஏழு ஆண்டுகளுக்கு சமம் என்பதை நான் வேத்திலிருந்து உங்களுக்கு நிருபித்துக் காண்பிக்க முடியும் வெளிப்படுத்தின விசேஷம் 11ம் அதிகாரம் 3ம்வசனத்தை எடுத்துக்கொண்டு அதிலிருந்து நான் உங்களுக்கு இப்பொழுது தான் காண்பித்திருக்கிறேன். அத்தீர்க்கதரிசிகள் ஆயிரத்து இருநூ ற்று அறுபது நாட்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். அதுதானே யூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாரங்களில் உள்ள கடைசி வாரத்தின் பாதி வாரமாகும். அதற்குப் பிறகு அவர்கள் வெட்டப்பட்டு, பிறகு அர்மகெதோன் துவங்குகிறது. ஆகவே காரியம் அவ்வாறிருக்கிறபடியால், அங்கே ஒரு மாதத்திற்கு சரியாக முப்பது நாட்கள் உள்ளன என்பதை மீண்டும் பார்க்கி றோம். அப்படியென்றால், ஒரு மாதத்தில் முப்பதும், ஒரு மாதத் தில் முப்பத்தியொன்றும், இன்னொரு மாதத்தில் இருபத்தி யெட்டு நாட்களுமாக இருக்காது; ஒவ்வொரு மாதத்திற்கும் சரியாக முப்பது நாட்கள் வீதம்தான் இருக்கிறது. 46நம்முடைய தீர்க்கதரிசன காலண்டரானது, வேத வாக்கி யங்களிலிருந்து நாம் அதை கணக்கெடுத்துப் பார்க்கையில், அதில் ஆண்டுக்கு 360 நாட்கள்தான் உள்ளன. நமக்கு சரியாக 483 ஆண்டுகளே உள்ளன. சரியாக அப்படித்தான் 483 இங்கே நமக்கு தீர்க்கதரிசனத்தினுடைய சரியான அத்தாட்சி, சரியான சத்தியமானது இருக்கிறது. ஆலயத்தை திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்காக கட்டளை வெளிப்பட்டது முதல் அழிக்கப் படுகிறவரையிலும்.... அவர்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்து, அவரை கி.பி. 33-இல் கொன்றபொழுது, கிறிஸ்து கொல்லப் பட்ட பொழுது அப்போது சரியாக 483 ஆண்டுகள் ஆகிவிட்டது எருசலேமை திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்பட்டது முதல் ஏழு வாரங்கள் - அதாவது நாற்பத்தி யொன்பது ஆண்டுகள் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சரியாக நாற்பத்தியொன்பது ஆண்டுகள் அங்கே ஆகியது. ஆலயம் திரும்ப எடுப்பித்துக் கட்டப்பட்டது முதல் மேசியா வருமட்டா கவும் 434 ஆண்டுகள் ஆயிற்று. ஆகவே 434யையும் 49யையும் கூட்டினால் 483 ஆண்டுகளாகும். மிகத் துல்லியமாக சரியாக அந்த நாளின்படியே கணக்காக அது நிறைவேறிற்று. ஆமென்! அது சரியாக இருக்கிறது. பிரபுவாகிய மேசியா வருவார். புரிந்துகொண்டீர்களா? 69 -ஐ ஏழால் பெருக்கினால் சரியாக 483 ஆண்டுகள் வருகிறது. அது அவ்வாறே துல்லியமாக நிறைவேறிற்று. ஆகவே இப்பொழுது நாம், வேத வாக்கியங்கள் மிகவும் சரியாக இருக்கிறது என்பதை அறிகிறோம். அது சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் நீங்கள் இங்கே கவனியுங்கள், இவை யாவும்.... 47தேவன் ஜலப்பிரளய காலத்திற்கு முந்தைய உலகத்தைக் கொண்டிருந்த பொழுது, அதை அவர் தண்ணீரினால் அழித்தார். அது முதற்கொண்டு வானவியல் தேதியை அவர் மாற்றினார். பின்பு, ரோமர்களை வளரவிட்டு, அவர்கள் தங்களுடைய காலண் டரை உருவாக்கி, அது ஒன்று குறைத்து, அடுத்தது கூடுவதுமாக இருக்கும்படி அதை அமைத்துக் கொண்டு விட்டனர். நான் படித்துக் கொண்டிருந்த என்சைக்ளோபீடியோவில் கூட அப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்று நான் கருதுகிறேன். இதற்கிடையில், சகோ.கென்னி காலின்ஸ் என்ற கென் னெத் காலின்ஸ் இக்கட்டிடத்தில் இக்காலையில் இப்போது இருக்கிறாரா? நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் அந்த கலைக் களஞ்சியங்களை எனக்கு அனுப்பியிருந்தீர்களல்லவா? உங் களுக்கு அது நினைவிருக்கிறதா? ஏறத்தாழ ஒரு சரக்கு ஏற்றும் வண்டி நிறைய எனக்கு அனுப்பியிருந்தீர்கள். எந்தவிதத்தில் இவைகளைப் பற்றி அனுபவம் இல்லாத என்னைப் போன்றொரு வன், இவைகளை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? கென்னி, உங்களை கர்த்தர் தான் நடத்தியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். காலத்தைப் பற்றிய தகவல்களை நான் அந்த கலைக் களஞ்சியத்திலிருந்து தான் பெற்றுக்கொண்டேன். நான் அவைகளை ஆராய்ந்து கொண்டிருந்தேன். பெக்கி அவைகளை தனது பள்ளிப் படிப்புக்கென உபயோகிக்கிறாள். அடித்தளத்தில் உள்ள எனது படிப்புக்கான தனிமையறையில் அவைகளை வைத்திருக்கிறேன். அங்கே நாங்கள் சென்று அவை களை எடுத்து அதிலிருந்து கவனித்துப் படித்துப் பார்த்து, வழக்கத் திலிருந்த எல்லா காலண்டர்களையும் பற்றி எழுதி எடுத்து சரியாக கண்டு கொண்டோம். அவ்வாறு நாம் அதைப் பற்றி அறிந்துகொண்டோம். அது ஆலயத்தை திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவது முதற்கொண்டு பிரபுவாகிய மேசியா புறக்கணிக்கப்படுகிற வரையிலும் மிகவும் சரியாக அக்காலண்டரின்படி 483 ஆண்டுகள் ஆயிற்று. 48நாமும் இங்கே அதே காலண்டரைத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். தேவன் இந்த காலண்டரையே அப்போது உபயோகித்திருப்பாரானால், வேதாகமம் முழுவதிலும் அவர் அதே காலண்டரைத்தான் உபயோகித்திருக்க வேண்டும். அது சரிதானே? தேவன் மாறுவது கிடையாது. ஆகவே, ஏழு வாரங் கள் நாற்பத்தியொன்பது ஆண்டுகளாக இருக்குமானால், மீண்டும் ஏழு வாரங்கள் நாற்பத்தியொன்பது ஆண்டுகளே யாகும். ஒரு வாரம் என்பது ஏழு ஆண்டுகளாகும். புரிந்து கொண்டீர்களா? ஆகவே அது பரிபூரணமாக அதை ஆக்குகிறது. அப்போது அது சரியாக துல்லியமாக நிறைவேறியதென்றால், மீண்டும் அது அவ்வாறே துல்லிமாக நிறைவேறிடும். ஆமென். ஓ! அது என்னை மெய்சிலிர்க்கச் செய்கிறது. ஓ, நான் என்ன பேசுகிறேனோ அதைப் பற்றி அறிந்தவனாயிருக்க நான் ஆசிக்கிறேன். நான் அதை நேசிக்கிறேன். ஏனெனில்... ஒரு சமயம் கெண்டக்கியிலுள்ள ஒரு முதிர்வயதான ஒருவர், என்னிடம், ''தாங்கள் அறிந்திருக்கிறதைப் பற்றி பேசுகிற ஒருவர் பேசுவதையே நான் கேட்க விரும்புகிறேன்'' என்றார். “நானும் அவ்வாறேயிருக்கிறேன்'' என்றேன் நான். ''பிரசங்கிகளாகிய உங்களைப் பற்றியும் அதே பிரச்சனை தான், ஏனெனில் நீங்கள் அறியாதிருக்கிறதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்'' என்று அவர் கூறினார். அதற்கு நான், 'நல்லது, உங்களுடைய விமரிசனத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் நாங்கள் பிரசங்கிக்கிறவைகளைப் பற்றி நாங்கள் அறிந்தேயிருக்கிறோம். நான் மறுபடியும் பிறந்திருக் கிறேன் என்பதை நான் அறிவேன். நான் மரணத்தினின்று நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறேன் என்பதை நான் அறிவேன். தேவன் ஒருவர் உண்டு என்று நான் அறிவேன். ஏனெனில் நான் அவரிடம் பேசியிருக்கிறேன். அவர் என் மூலம் பேசவும், என்னோடு பேசவும், பிறரிடம் என் மூலம் பேசவும் அவர் செய்கிறார். அவர் தேவன் என்று நான் அறிவேன்'' என்று நான் பதிலுரைத்தேன். அது சரிதான். அவர் என்னிடத்தில் மிகவும் அருமையானவராயிருந்து, இறங்கி வந்து என்னோடு சேர்ந்து தன்னுடைய படத்தை எடுத்துக்கொள்ளும்படி செய்தார். அதை விஞ்ஞான உலகும் மறுத்துரைக்க முடியவில்லை. நான் வேத வாக்கியத்திலே அதைப் பற்றி எடுத்து பார்த்து, அது இந்த சபைக் காலத்தின் காரியத்தை நிறைவேற்றுவதாக சரியாக இருந்ததை நான் கண்டு கொண்டேன். ஆகவே நாம் இங்கே இந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை நான் அறிவேன். ஆமென்! 49நாம் ஒரு வேளை கல்வியறிவு இல்லாதவர்களாயிருக்க லாம். நாம் மேட்டுக் குடியினராக இல்லாதிருக்கக்கூடும். நாம் பெரிய பிரமுகர்களாக இல்லாதிருக்கக்கூடும். ஆனால் நாம் தேவனை அறிந்தவர்களாயிருக்கிறோம். பரிசுத்த ஆவியினாலே நாம் அவரை அறிந்திருக்கிறோம். அது திருவசனங்களினூடே, வார்த்தையோடு வார்த்தையை ஒப்பிட்டுக் காண்பித்து, அதினாலே அது சத்தியமாயிருக்கிறது என்பதை நாம் அறிகி றோம். நாம் கடைசி நாட்களிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தீர்க்கதரிசன ஆண்டிலே ஒரு வருடத்திற்கு 360 நாட்கள் உள்ளன என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள். எல்லாவற்றை யும் உற்று நோக்குங்கள். ஸ்திரீகளுக்குள்ள இயற்கையான காரியத்தில் கூட அதைக் கொண்டு உங்களில் சிலர் அறிந்து கொள்ள முடியும். அறிந்து கொண்டீர்களா? முப்பது நாட்கள்... இயற்கையின் அமைப்பெல்லாம் அவ்வாறே அமைந்து உள்ளது என்பதை நீங்கள் கவனியுங்கள். முப்பத்தியொன்று, முப்பது, இருபத்தியெட்டு என்று இருப்பதில்லை. அது சரியாக முப்பதே நாட்கள் தான் ஒவ்வொரு மாதத்திற்கும். அதுவே தீர்க்கதரிசன காலண்டராகும்... அது சரியாக 483 நாட்கள். இங்கே நமக்கு தீர்க்கதரிசனத்தின் சரியான அத்தாட்சி உள்ளது. கி.மு. 445 என்பது சரியான கணக்காக உள்ளது. எழுபது வாரங்களில் சம்பவிக்கும் என்று தீர்க்கதரிசனமாக உரைக்கப் பட்டவை அனைத்தும் அப்பொழுது சம்பவிக்கவில்லை. ஆகவே அவைகள் இக்கடைசி நாட்களாகிய இப்பொழுது சம்பவிப்ப தற்காக விட்டு விடப்பட்டுள்ளது. 50இப்பொழுது, என்னுடைய பெந்தெகொஸ்தே சகோ தரரே, இப்பொழுது என்னுடைய யேகோவா சாட்சிக்காரராகிய சகோதரே, நீங்கள் இதை உணருகிறீர்களா? எங்கே அந்த 1,44,000 பேர்கள் தோன்றுகிறார்கள் என்பதை அறிவீர்களா? வெளிப் படுத்தின விசேஷத்தின் அவ்வற்புதங்களெல்லாம் எங்கே சம்ப விக்கப் போகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? நமது காலத்தில் அல்ல, யூதர்களின் காலத்தில்தான் அவை சம்பவிக்க வேண்டும். சபை ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்து, பிறகு போய் விடுவதைப் பற்றியே தவிர வேறு ஒன்றும் அங்கே கூறப்பட வில்லை. நிச்சயமாகவே, தேவனுடைய வல்லமையைக் கொண்டு நாம் அற்புதங்களையும், அரிய பெரிய காரியங்களையும் செய்ய முடியும். அதை நாம் அறிவோம். ஆனால் உண்மையான காரியமோ யூதருக்கென்றுதான் உள்ளது. அதாவது, உண்மை யான கிரியை செய்யும் வல்லமை, அற்புதங்களை நிகழ்த்துவது அவர்களுக்குத்தான். 1,44,000 பேர்கள் அங்கே தோன்றவில்லை. அவர்கள் 3ம் அதிகாரத்தில் தோன்றுவதில்லை. அவர்கள் திருவசனத்திலே அதையெல்லாம் தாண்டி, தோன்றுகின்றனர். அவைகள் யாவும், கடைசி வாரமாகிய எழுபதாவது வாரத்தில்தான் சம்பவிக்க வேண்டியதாயிருக்கிறது. அவர்களுக்கு ஏற்கெனவே அறுபத்தி யொன்பது வாரங்கள் உண்டாயிருந்ததென்றால், அவர்கள் அவ்வாறு அக்காலத்தில் இருப்பார்கள் என்று கூறியபடியே, அவர்கள் சரியாக அக்காலத்தில் ஜீவித்தார்கள். ஆகவே அக்காலத்தில் அவர்களைப் பற்றி தேவன் கூறியபடியே ஜீவித் திருந்தார்கள். ஆகவே இன்னும் ஒருவாரம் யூதர்களுக்கு வாக்குத் தத்தம் பண்ணப்பட்டிருக்கிறது. இப்பொழுது சகோதரரே, ஆயத்தப்படுங்கள். புரிந்து கொண்டீர்களா? நாம் எவ்வளவு அருகாமையில் இருக்கிறோம் என்பதை கவனித்துக் கேளுங்கள். கடைசி வாரம் ஏழு - ஏழாவது வருடம். 51இதுவரைக்கிலும் கூறப்பட்டவைகளை யாவரும் புரிந்திருக் கிறீர்களா? அவ்வாறு நீங்கள் புரிந்து கொண்டால் .... யாவரும் இதுவரைக்கிலும் கூறப்பட்டவைகளை, அவை பரிபூரணமாக சத்தியமாயுள்ளன என்றும், அது வேத பூர்வமானது என்றும், அவைகள் தீர்க்கதரிசன ஆண்டுகள் என்றும் புரிந்து கொண்டீர்களா? மேசியா புறக்கணிப்படுகிற வரையிலும் உள்ள காலம் வரையிலும் நாம் பார்த்தோம். மேசியா புறக்கணிக்கப்பட்ட திலிருந்து அது வரைக்கிலும்... கடைசி வாரம். இதை விளக்குவதாக நான் இப்பொழுது இந்த இடத்தில் நிறுத்திட விரும்புகிறேன். அவர்கள் மேசியாவை புறக் கணித்தது என்பது, அவர்கள் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்து, சிலுவையில் அவரை அறைந்த தாகும். 'பிரபுவாகிய மேசியா சங்கரிக்கப்படுவார். ஆனாலும் தமக்காக அல்ல...'' என்று வேதாகமம் கூறியது உங்களுக்கு ஞாபகத்திலிருக்கும். இப்பொழுது, அத்தீர்க்கதரிசனம் எவ்வளவு துல்லியமாக நிறைவேறியது என்பதை எண்ணிப் பாருங்கள். இது உங்களுக்குள்ளாக ஆழப் பதிய வைக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். அத்தீர்க்கதரிசனம் சரியாக அந்த தேதியின்படியே துல்லியமாக குறிப்பிட்ட காலத்தில் முன்னுரைக்கப்பட்டபடியே நிறைவேறியிருக்கிறது என்றால், மீதமுள்ள இந்த ஒரு வாரமாகிய ஏழு ஆண்டுகள், அதாவது ஏழு நாட்களாகிய ஏழு ஆண்டுகளும் கூட அதே விதமாக திருவசனத்தின்படியே நிறைவேறிடும். 52இப்பொழுது ஞாபகத்தில் வைத்திருங்கள்: மேசியா சங்கரிக்கப்பட்டார். அத்தோடு தேவன் யூதர்களோடு இடை படுவதை நிறுத்திவிட்டார். அதற்குமேல் அவர்கள் காலம் நீடித்திருக்கவில்லை. ரோம சாம்ராஜ்யத்தால் அவர்கள் சிதற டிக்கப்பட்டனர். இங்கே நான் வரைந்திருக்கிற வரைப்படத்தில் நீங்கள் அதைக் கவனித்தீர்களா? நீங்கள் இதைப் புரிந்து கொண்டு, அதை வரைந்தெடுத்துக் கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். இங்கே நான் வரைந்திருக்கிற சிலுவையை கவனியுங்கள். அங்கேதான் அவர்கள் அவரை புறக்கணித்தனர். ஆனால் அவர்கள் காலமானது அதையும் தாண்டி ஒரு சிறிது காலத்திற்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. அதைக் கவனியுங்கள். ஏன்? முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது எழுபது - நாற்பது ஆண்டுகள் கழித்து ரோமத் தளபதியாகிய தீத்து என்பவன் இஸ்ரவேல் மக்களை - எருசலேமை அழித்துப் போட்டு, அம்மக்களை உலகம் பூராவிலும் சிதறடித்துப் போட்டான். நீங்கள் கவனியுங்கள், நாற்பது ஆண்டுகள் கழித்து, ஆகவே உண்மை யிலேயே யூதர்களின் காலமானது சிறிது நீட்டிக்கப்பட்டிருந்தது, முழுவதும் ஆகும் வரையிலும்... ஆனால் தேவன் அவர்களோடு அதற்குப் பிறகு இடைபட வேயில்லை. அவர்கள் கிறிஸ்துவைப் புறக்கணிக்கிற வரையிலும் தான் அவர்களோடு இடைப்பட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த பொழுது, “இவனுடைய இரத்தம் பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக'' என்று சொன்னார்கள். (மத்.27:25) அது முதற்கொண்டு அவர்களோடு தேவன் இடைப்படுவதை நிறுத்திவிட்டார். ஆனால் அவர்கள் சிறதடிக்கப்படுவதற்கு முன்பாக... கவனியுங்கள்! ஓ, சகோதரனே! அவர்கள் உலகம் பூராவிலுமாக சிதறடிக்கப்படு வதற்கு முன்னர், ஆலயத்தை தகர்த்தது அவர்கள் உலகம் முழுவதிலுமாக சிதறடிக்க தேவனுக்கு நாற்பது ஆண்டுகள் ஆயிற்று. ஆனால் தேவன் அவர்களோடு அதற்குப் பிறகு இடை படுவதை விட்டு விட்டார். தேவன் அவர்களோடு இடை படுவதை அதற்குப் பிறகு நிறுத்திவிட்டார். அது முதற் கொண்டு புறஜாதிகளோடு இடைப்பட தேவன் ஆரம்பித்தார். நீங்கள் இதை அறிவீர்களா? இப்பொழுது அதைப் புரிந்து கொண்டீர்களா? இப்பொழுது, இங்கே நாம் சபைக் காலங்களில் புறஜாதிக் காலத்தில் துவங்குகிறோம். தேவன் யூதர்களை விட்டு அகன்று விட்டார். 53இப்பொழுது, இங்கு எங்கோ இருந்து கொண்டிருக்கிற எனது விலையேறப் பெற்ற சகோதரனும், யூதர்களுக்கென மிஷன ரியாக உள்ளவருமான சகோதரனே, நீங்கள் அதைப் பிடித்துக் கொண்டு புரிந்துகொள்ளுங்கள். தேவன் அங்கே தானே யூதர் களோடு இடைபடுவதை விட்டு நீங்கி விட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் தேவன் எப்பொழுதும் இஸ்ரவேல் மக்களோடு ஒரு ஜாதியார் என்று ஒட்டு மொத்த மாகத்தான் இடைபடுகிறார். இஸ்ரவேல் ஒரு தேசம் என்பதை நாம் யாவரும் அறிவோம். புறஜாதியாரோ ஒரு ஜனங்களாகும். அவர் புறஜாதியார் நடுவிலிருந்து ஒரு கூட்டம் மக்களை தம் நாமத்திற்காகத் தெரிந்தெடுக்கவேண்டியுள்ளது. அதைப் பற்றி இன்னும் சில நிமிடங்களில் நாம் பார்ப்போம். ஆனால் இப்பொழுதோ, புறஜாதியாரின் காலத்தில், இந்த ஏழு சபைக்காலங்களைப் பற்றி நாம் ஆராய்ந்ததில், கிறிஸ்து வானவர் சிலுவையிலறையப்படுதல் தொடங்கி, சபைக் காலங்கள் முடியும் வரையிலும்... அவை யாவையும் பற்றி நாம் பார்த்துக் கொண்டே வந்தோம். ஏழு முத்திரைகள், ஏழு கோப கலசங்கள், ஏழு எக்காளங்கள் முதலிய யாவும் ஒன்றாக காட்சியளிக்கின்றன. அவை யாவும், யூதரோடும், பூமியின் மேல் உள்ள ஜனங்கள் மேலும் விழும் தேவனுடைய நியாயத் தீர்ப்பு, மீதியாயிருக்கிறவர்கள் ஆகியோருடன் சம்மந்தமுள்ள வையாகும். அவைகளைப் பற்றி நாம் பார்க்கப் போகிற ஒரு இடத்திற்கு நாம் வந்து கொண்டிருக்கிறோம். 54வரப்போகிற இந்த மகா உபத்திரவ காலத்திலே அங்கே லட்சக்கணக்கான புறஜாதியார் மரித்துப் போவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த புறக்கணிக்கப்பட்ட மண வாட்டி, ஸ்திரீயின் வித்தாகிய அம்மீதியாயிருக்கிறவர்கள், நித்திரை செய்யும் கன்னியர் அவர்கள். அவ்வுபத்திரவத்தின் வழியாக அவள் கடந்து செல்லுவாள். இவ்வெழுபது வாரங்கள் எவ்வாறு மிகவும் தெளிவாக இருக்கிறதோ அதைப் போலவே அதுவும் இருக்கிறது. அவர்கள் அதின் வழியாக கடந்து செல்லு வார்கள். எனவே இது வரையிலும் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாதிருப்பின், உங்களால் இயன்ற அளவு விரைவாக அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். இப்பொழுது, ஏழு சபைக் காலங்களைக் குறித்து கவனியுங்கள். நான் இப்பொழுது அவைகளைக் குறித்து பேச வேண்டியதில்லை. ஏனெனில் அவைகளைப் பற்றிய செய்தியானது ஏற்கனவே ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவைகள் புஸ்தக வடிவில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக் கின்றன. அதுதான் அவர்களுடைய காலமாயிருந்தது... தேவன் புறஜாதியாருக்கு இவ்வளவு நாட்கள், இவ்வளவு மணி நேரங்கள், அல்லது இத்தனை ஆண்டுகள் என்றெல்லாம் நிர்ணயித்திடவில்லை. அவ்வாறு அவர் ஒன்றும் சொல்லவில்லை. “புறஜாதியாரின் காலம் நிறைவேறுகிறவரையிலும்'' என்று தான் அவர் கூறினார். புறஜாதிகளோடு தேவன் இடைபடு வதை நிறுத்திக் கொள்கிறவரையிலும், புறஜாதியார் அலங் கங்களை மிதிப்பார்கள். 55இப்பொழுது நாம் காண்பது என்னவெனில், இந்தக் காலங்கள் முழுவதிலும், நாம் நம்மிடையே பரிசுத்த ஆவியா னவர் வரப் பெற்றிருந்தோம். அதன் பிறகு, தேவன், துவக்கத் தில், கிறிஸ்து புறக்கணிக்கப்பட்டபோது துவங்கி அவர்களுக்கு கூற ஆரம்பித்தார்.... தேவன் புறஜாதியாரின் ஆளுகையின் போது என்ன சம்பவிக்கும் என்பதை அப்படியே சரியாக யோவானுக்கு காண்பித்தார். யூதர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தைப் போல, உங்களுக்கு குறிப்பிட்ட ஒரு காலவரையறை அளிக்கப்படவில்லை. ஆனால் நமக்கு அடையாளம் இருக்கிறது. நமக்கு ஒரு அடையாளக் கம்பம் உள்ளது. அந்த அறுபத்தி யொன்பது வாரங்களில் அல்லது 483 ஆண்டுகளில் யூதருக்கு தாம் என்ன செய்யப் போவதாகக் கூறினாரோ, சரியாக அப்படியே தேவன் அவர்களுக்கு செய்திட்டார். இன்னும் ஒருவாரம் மீதியாக விடப்பட்டிருக்கிறது. இன்னும் ஒருவாரம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது அந்தக் கணக்கை நாம் இங்கே சம்பந்தப் படுத்த முடியாது; ஏனெனில் இது புறஜாதி சபையாக இருக் கிறது. எத்தனை பேர்கள் அதைப் புரிந்து கொண்டீர்கள்? இங்கே இது வெளிப்படுத்தின விசேஷம் ஆகும். முதலாம் அதிகாரம் தொடங்கி, 3ம் அதிகாரம் வரையிலும்; லவோதிக்கேயா வரையிலும் நம்மை எடுத்துச் செல்லுகிறது. இப்பொழுது அது எவ்வாறு முழுவதும் சபை- சபை உலகைக் குறித்தே எடுத் துரைக்கிறது என்பதை நாம் சரியாக கண்டு கொண்டோம். பாவி, தான் இரட்சிக்கப்பட விரும்பினாலொழிய தேவன் அவனை சபையில் சேர்த்திட வேயில்லை. ஆனால் சபை உலகானது முழுவதும் வெண்மையாக இருந்தது. பிறகு நிக்கொலாய் மதஸ்தர் உள்ளே நுழைந்தனர்; அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிட விரும்பினர். முக்கிய பிரமுகர்கள் உள்ளே நுழைந் தனர். இக்காரியம் ரோமாபுரியிலுள்ள நிசாயாவில், நிசாயா கவுன்சிலைக் கூட்டிய பொழுது நடந்தது. அவர்கள் என்ன செய்தனர்? சபையை அவர்கள் மதஸ்தாபனமாக ஆக்கினர். பிறகு அது கிறிஸ்தவர்களை உபத்திரவப்படுத்த ஆரம்பித்தது. பிறகு அடுத்த சபைக் காலத்தில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் நிரம்ப பெற்றிருந்த கிறிஸ்தவமானது ஏறத்தாழ அடியோடு ஒழித்துக் கட்டப்பட்டது. 56ஆனால் பின்பு, நீங்கள் யாவரும் அறிந்திருக்கிறபடி நான் சென்று, வரலாற்றையும், 'நிசாயா பிதாக்கள், ' 'நிசாயா கவுன் சிலுக்கு முந்தைய காலத்து பிதாக்கள்' போன்ற வரலாற்றுப் புத்தகங்களையும், என்னால் முடிந்த அளவு கிடைக்கக்கூடிய சபையைக் குறித்த அனைத்து வரலாற்றுப் புத்தகங்களையும், மிகவும் தொன்மை வாய்ந்த கையெழுத்துப் பிரதிகளையும் நான் பெற்றுக்கொண்டு, அவைகளிலிருந்து உங்களுக்கு எடுத்துக் காண்பித்தேன். அவைகளிலிருந்து, தேவன் பேசிக் கொண்டிருந் தது எந்த சபையோடு என்பதை உங்களுக்கு நிரூபித்துக் காண் பித்தேன். தேவன் மதஸ்தாபனமாக ஆகிய கத்தோலிக்க சபை யோடோ அல்லது வேறு எந்த மதஸ்தாபனத்தோடே பேசிக் கொண்டிருக்கவில்லை. தேவன் யாரைக் குறித்து பேசிக் கொண்டிருந்தாரென்றால் .... அச்சபைக் காலங்களில் அம் மகத்தான நட்சத்திரங்களான மனிதர் யாவரும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் குறித்தும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உள்ள ஞாஸ்நானத்தைக் குறித்தும், தேவ ஆவி யாயைப் பெறுவதைக் குறித்தும், அன்னிய பாஷைகளில் பேசுவதைக் குறித்தும் பாஷைகளை, வியாக்கியானம் செய் வதைக் குறித்தும், சுகமளித்தலைக் குறித்தும், அற்புத அடையா ளங்கள் செய்வதைக் குறித்தும் போதித்தவர்களாயிருந்தனர். அப்படிப்பட்டவைகள் தான் தேவனுடைய செயல்களாகும். அவர் தம்முடைய சிந்தையை மாற்றிக் கொள்ள முடியாது. ''நல்லது, இதுவே சபையைக் குறித்து என்னுடைய திட்ட மாயிருக்கிறது, அப்போஸ்தல சபையைக் குறித்து எனது அபிப்பிராயம் என்னவெனில், பிரமுகர்களைக் கொண்டதான சபையாக சபை இருக்கவேண்டும்' என்ற அல்ல, தேவன் மாற மாட்டார். அது இன்னமும் பரிசுத்த ஆவியாக இருக்கிறது. நாம் அதை கவனித்துப் பார்த்து, அதன்பின்பு, தேவனு டைய சுபாவத்தைக் குறித்து கண்டுகொண்டோம். அதன் பின்பு வேதவாக்கியங்களை எடுத்துப் பார்த்தோம்; பிறகு, வரலாற்றை எடுத்துப் பார்த்தோம், அதுதானே தேவன் யோவான் மூலமாக வேத வாக்கியங்களில் கூறியபடியே நடைபெறும் என்று சொல்லப்பட்ட, முன்னுரைக்கப்பட்ட சம்பவங்கள் யாவும் அப்புறஜாதி காலத்தினுள், அந்தந்தக் காலத்தின்படியும், தேதியின்படியும், பிசகாமல் அப்படியே சம்பவித்தது. 57நாம் தானே, லவோதிக்கேயா சபையின் காலத்திலே, அதைக்குறித்து, சந்தேகத்தின் எந்தவொரு நிழலுமின்றி, திட்ட வட்டமாக கண்டுகொண்டோம். நாம் தான் அக்காலத்திற் குரியவர்கள் என்பதை நாம் அறிவோம். நாம் லூத்தரன் காலத்தின் வழியாகக் கடந்து வந்திருக்கிறோம்; நாம் வெஸ்லி யின் காலத்தின் வழியாகக் கடந்து வந்திருக்கிறோம் என்பதை யும் நாம் அறிவோம். நாம் இப்பொழுது லவோதிக்கேயா வாகிய கடைசி சபைக் காலத்தில் இருக்கிறோம். அந்த சபைக்காலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தூதர்கள் உண்டா யிருந்தனர். அச்சபைக் காலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தூதர்கள் (செய்தியாளர்கள் - தமிழாக்கியோன்) உண்டாயிருந் தனர் என்பதை நாம் உணருகிறோம். நாம் அதைக் கண்டு கொண் டோம். ஏழு நட்சத்திரங்கள் அவருடைய கரத்திலிருந்தன; அவை தேவனிடத்தினின்று புறப்பட்டுச் சென்ற ஏழு ஆவிக ளேயாம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செய்தியாளன் - தூதன் இருந்தான். வேதத்திலே நாம் ஒவ்வொரு காலத்தினுள்ளும் சென்று, அந்தந்த சபைக் காலத்தின் தூதனுடைய சுபாவமானது எவ்வாறிருக்கும் என்பதைக் குறித்து கண்டு கொண்டோம். வரலாற்றை நாம் எடுத்து ஆராய்ந்து, வேதம் கூறுகிறபடியான சுபாவத்தைக்கொண்டிருந்த அம்மனிதனை அங்கே நாம் கண்டுபிடித்தோம். அதிலிருந்து, அந்தக் குறிபிட்ட மனிதனே அந்த சபைக் காலத்திற்குரிய தூதன் என்பதை கண்டு பிடித்துக் கொண்டோம். பின்பு, நாம், என்ன ஆவியென்றும், அம்மனிதன் என்ன செய்தான் என்பதைக் குறித்தும் கண்டு கொண்டோம். அத்தூதன் ஆவியினால் நிரப்பப்பட்ட பரிசுத்த வான் என்பதையும் கண்டோம். பரிசுத்த ஐரேனியஸ், பரிசுத்த கொலம்பா இன்னும் ஏனையோரும் பரிசுத்த ஆவினால் நிரப்பப் பட்டிருந்தார்கள். நாம் திருவசனங்களின் வாயிலாக, இன்ன தன்மையுடைய ஆவியானது இன்ன தன்மையுடைய மனிதன் மேல் அதற்கான காலத்தில் இருக்கும் என்பதையும் கண்டு கொண்டோம். அது அவ்வாறுதான் உள்ளது. அது தவறாக இருக்கவே முடியாது. ஆமென். தேவனுக்கு மகிமையுண்டா வதாக. அது.... 58எனக்கு தெரியாது, சகோதரனே, தேவனுடைய வார்த் தையே பேசுகிறதாயிருக்கிறபடியால், நான் அறிந்திருக்கிற எல்லாவற்றையும் விட கூடுதலாக அது எனக்கு இருக்கிறது. தேவன் கூறுகிற எதையும் நான் கேட்கும் பொழுது, நான் அதற்கு “ஆமென்'' என்று கூறுகிறேன். அதுதான் சரி. அத்துடன் அது முடிவு பெறுகிறது. தேவன் அவ்வாறு கூறியுள்ளார். அதுவே கிரியை செய்கிறதாயிருக்கிறது. அவ்விதமாக சம்பவிக் கும் என்று தேவன் கூறினாரெனில், அதைக் குறித்து நாம் வரலாற்றிலும், திருவசனத்திலும் அப்படியே இருக்கக் காண்கிறோம். குறிப்பிட்ட இந்த சபைக் காலத்தைக் குறித்து நாம் வேதத்தில் படிக்கிறோமென்றால், அது என்ன செய்யு மென்பதைக் குறித்தும், அக்காலத்தில் என்ன சம்பவிக்கும் என்பதைக் குறித்தும், அக்குறிப்பிட்ட சபைக் காலத்திற்கு என்ன தன்மையிலான செய்தியாளன் - தூதன் இருப்பான் என்பதைக் குறித்தும் அறிந்து கொள்கிறோம். 'லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்...” “சர்தை, தீயத்தீரா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது....” இன்னும் இந்த வெவ்வேறு சபைகள் யாவுக்கும் எழுதப்பட்டது. நாம் வரலாற்றில் இதைக் குறித்து ஆராய்ந்து பார்த்தால், அந்தந்த சபைக் காலத்தின் தூதனைக் குறித்தும், அவர் யார் என்பதைக் குறித்தும் அங்கே கண்டு கொள்கிறோம். எனவே அதனதனு டைய வரைபடத்தை வரைந்து, அத்தூதர்களின் பெயர்களை அந்தந்த சபைகளுக்கு கீழாக எழுதிக் குறிப்பிட்டோம். அவை கள் அங்கே அவ்வாறு உள்ளன. அது சரியாக பொருத்த மாயிருக்கிறதை நாம் அறிவோம். 59தேவன் எப்பொழுதும் ஸ்தாபிக்கப்பட்ட மார்க்கத்திற்கு எதிராகவே இருந்தார். எப்பொழுதும் அவ்வாறே இருந்து கொண்டும் இருக்கிறார் என்பதையும் நாம் அறிவோம். ஆம், ஐயா! “நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தை நான் வெறுக்கிறேன்'' என்று அவர் கூறினார். ”நிக்கொலாய் மதஸ்தர்'' என்றால் ''நிக்கோ '' என்பதற்கு “மடங்கடித்தல்'', ''மேற் கொள்ளுதல்'' என்று அர்த்தங்கள் உண்டு. ''லெய்டி' என்றால் சரீரம், சபை என்று பொருளாகும். ஆகவே 'சபையை மடங்கடித்தல்'' அல்லது 'சபையை மேற்கொள்ளுதல்'' என்பது 'நிக்கொலாய் மதஸ் தருடைய போதகம்'' என்ற வார்த்தைக்கு அர்த்தமாகும். அதாவது தங்களுக்கென ஒரு பரிசுத்த மனிதனை தங்கள் மேல் ஏற்படுத்திக் கொண்டு, அவனை சபைக்கு மேலாக மேலாதிக்கம் கொண்டவனாக சபையை மடங்கடித்து ஏற்படுத்திக் கொள்ளு தல் என்பது இதன் உண்மையான அர்த்தமாகும். நாமோ பிள்ளை களாயிருக்கிறோம்; தேவனாகிய இராஜா ஒருவர் மாத்திரமே நமக்கு மேலாக உண்டு. நமக்கு ஒரேயொரு பரிசுத்தர் உண்டு; அவர்தான் தேவன். ஆமென்! அவர் நமது மத்தியில் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இருக்கிறார். அவரே நமது பரிசுத்தர். அந்த யூதருடைய காலத்தைக் குறித்து நாம் ஆராய்ந்து வருகையில், அங்கே வரலாற்றின்படியேயும் ஆண்டுக் குறிப்பிட்ட படியேயும் சரியாக அவர்களுக்கு அங்கே 69 வாரங்கள் உண்டாயிருந்ததைக் குறித்து, உறுதிபட நிச்சயமாக அதற்கு ஆதரவான முடிவை நாம் கண்டு கொண்டோம். தேவனுடைய தீர்க்கதரிசன ஆண்டின் படியே அது இருக்கிறது என்பதை தீர்க்கதரிசன காலண்டரின் வரலாற்றை பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாடு வரைக்கிலும் எடுத்துரைத்து, சரியாக அது அவவாறே இருக்கிறது என்பதை காண்பித்தேன். நாம் புறஜாதி சபையைக் குறித்து, அதனுடைய துவக்கத் திலிருந்து பார்த்து, அது கடைசி நாள் வரையிலும் உள்ளதைக் குறித்தும் பார்த்தோம். நாம் இப்பொழுது கடைசி காலத்தில் வாழ்கிறோம் என்பதை அறிவோம். ஆமென்! நீங்கள் புரிந்து கொண்டீர்களா? இப்பொழுது இக்காலத்தில் கடைசி நாட்களிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், நாம் எங்கே இருந்து கொண்டிருக்கிறோம்? நீண்ட காலத்திற்கு முன்பாக... கவனியுங்கள்... இங்கே வரையப்பட்டிருக்கிற இந்தக் கோட்டை பாருங்கள். அங்கே தேவன் யூதரோடு இடைப்பட்டார், அல்லது அவர் ஒரு போதும் அதற்குப் பிறகு யூதரோடு இடைப்படவில்லை. அவர்களை அவ்வாறு ஆக்குவதற்கு அவருக்கு நீண்ட காலம் பிடித்தது ...... சகல புறஜாதியாருக்குள்ளும் யூதர்களை சிறைப்பட்டுக் போகச் செய்ய அவருக்கு நாற்பதாண்டுகள் பிடித்தது. புறஜாதியாரின் நாட்கள் முழுவதிலும், அவர்களைப் பற்றிய வேத வாக்கியத்தை நிறைவேறச் செய்வதற்காக அவர் அவர்களை அதற்கான ஆயத்த நிலையிலே தயார் செய்து கொண்டிருந்தார். நான் கூறுவதை புரிந்து கொண்டீர்களா? புரிந்து கொண்டவர்கள் யாவரும் ஆமென்'' என்று கூறுங்கள் (சபையார் '' ஆமென்'' என்று பிரதியுத்தரம் கூறுகிறார்கள் - ஆசி). 60இப்பொழுது என்ன நடந்திருக்கிறது? இந்தக் கடைசி சபைக் காலத்திற்கு மேலே உற்று நோக்குங்கள். சிறிதளவு உள்ள கால நீட்டிப்பைப் பார்த்தீர்களா? புறஜாதி நாட்கள் முடி வடைந்து கொண்டிருக்கின்றன. கடந்த நாற்பதாண்டுகளாக யூதர்கள் தங்கள் சுய தேசத்திற்கு, எருசலேமுக்கு திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். நாம் எங்கேயிருக்கிறோம் என்பதை கண்டு கொண்டீர்களா? மேசியா சங்கரிக்கப்பட்டது முதற்கொண்டு, தீத்து தேவாலயத்தை பாழாக்கி, யூதர்களை சிதறடித்தது வரையிலும் நாற்பதாண்டுகள் ஆயிற்று. இப்பொழுது யூதர்களை அவர்களுடைய சுயதேசத்திற்குள் விரட்டியடித்து அனுப்புவதற்காக எல்லாவிதமான பார்வோன் களின் இருதயங்களை கடினப்படுத்துவதற்கு தேவன் இன்னொரு நாற்பதாண்டுக் காலத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இன்றைக்கு அவர்கள் மீண்டும் தங்கள் சுய தேசத்திற்கு திரும்பி வந்துவிட்டார்கள். சபையானது அதன் முடிவு காலத்திலுள்ளது. ஆமென்! நான் வாசிக்க முயலுகிறேன், ஆனால் என்னால் இயலவில்லை. கவனியுங்கள்! யூதர்கள் தங்களுடைய சுயதேசத்தில் இருக்கிறார்கள், அங்கே அவர்கள் திரும்பிப் போய்க் கொண்டி ருக்கிறார்கள். “உலக யுத்தத்தின் மும்முரம் தளர்வுறுதல்' என்ற புத்தகத்தின் இரண்டாவது வால்யூமை நீங்கள் வாங்கிப் படித் தீர்களானால், அதில், முதலாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு, ஜெனரல் ஆலென்பி அவர்கள் எருசலேமுக்கு மேலாக விமானத்தில் பறந்து சென்று, அதைக் கைப்பற்றி, எருசலே மைப் பிடித்தார். அங்கே அந்த கிறிஸ்தவ மனிதர்கள் மரியாதை நிமித்தம் தங்கள் தொப்பிகளை கழற்றினவர்களாக எருசலேமுக் குள் அணிவகுத்துச் சென்றார்கள். அங்கேயிருந்த துருக்கியப் படைகள் ஒரு துப்பாக்கி ரவையைக் கூட சுடாமல் தளபதி ஆலென்பி அவர்களிடம் சரணடைந்தனர். அப்போதிலிருந்து தேவன் முசோலினியின் இருதயத்தையும், ஹிட்லரின் இருதயத்தையும், ஸ்டாலினுடைய இருதயத்தையும் கடினப் படுத்திக்கொண்டேயிருந்ததினால், அத்தேசங்களிலெல்லாம் மனிதர்கள் யூதர்களை பகைக்கத் துவங்கினர். 61அதன்பிறகு, அம்மகத்தான பறவைகளாகிய ஈஸ்ட்டர்ன் ஏர்லைன்ஸ் விமானங்கள் அல்லது 'பான் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்' விமானங்கள் அவர்களை ஏற்றிக் கொண்டு அங்கே பறந்து சென்றன. அது டி.டபுள்யூ.ஏ என்ற விமானக் கம்பெனி என்று நம்புகிறேன். அதைப் பற்றி “லைஃப்' அல்லது 'லூக்'... அது 'லைஃப்' என்ற பத்திரிக்கை தான் என்று கருதுகிறேன். அதில் அதைப்பற்றி கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக செய்தி வெளியிட்டிருந் தார்கள். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தங்கள் சுய தேசத்தை விட்டு சிதறிப் போயிருந்த யூதர்களை தேவன் திரும்ப கூட்டிச் சேர்த்துக்கொண்டேயிருக்கிறார், அந்த வேளையில் புறஜாதியார் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டேயிருக்கி றார்கள். இப்பொழுது புறஜாதியார், வெளிப்படுத்தின விசேஷம் 3ம் அதிகாரத்தின்படி, கிறிஸ்துவை சபையை விட்டே வெளியே புறம்பாக்கிப் போட்டுவிட்டார்கள். அவராலேயே தம் சபைக் குள் மறுபடியும் பிரவேசிக்க இயலவில்லை. அவருக்கு போவதற்கு எந்த ஸ்தலமும் இல்லை. அவர் புறக்கணிக்கப் பட்டிருக்கிறார். இது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான வேளையா யிருக்கிறது. மீட்கப்பட்டோர் யாவரும் இக்காலத்திலே... இங்கே... இந்த சிறு புள்ளிகள், உயிர்த்தெழுதலில் பரிசுத்தவான்கள் மேலே போவதைக் குறிக்கின்றன.... நாம் யாவரும் ஒன்று சேர்ந்து இங்கே சந்திக்கிறோம் என்பதை நீங்கள் இங்கே பாருங்கள். 'கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம், நித்தியரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை'' என்று வேதம் கூறுகிறது. (1 தெச. 4:15). இங்கே , இந்த, இந்த, இந்த காலம் முதற்கொண்டு உள்ளவர்கள். இப்பொழுது, பெந்தெகொஸ்தே சகோதரரே! நீங்கள் எவ்வாறு இதை லவோதிக்கேயா சபைக் காலத்தோடு சம்மந்தப்படுத்திப் பேச முடியும்? அவர்கள் இந்த ஒவ்வொரு காலங்கள் தோறும் நித்திரை செய்து காத்துக் கொண்டிருக் கிறவர்களாவர் உயிரோடிருக்கும் நாம் (இங்கேயிருக்கிற அந்த சிறிய மீதியாயிருக்கிற கூட்டத்தினர்), கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்தியடைந்த வர்களுக்கு முந்திக் கொள்வதில்லை. தேவ எக்காளம் முழங்கும், அப்போது மரித்தவர்கள் முதலாவது உயிரோடெழுந்திருப் பார்கள், பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் (எடுத்துக்கொள்ளப்பட்டு, (ஆமென்!) (நாம் இங்கே இந்த இடத்தில் தான் சந்திக்கிறோம்) இருப்போம்“ (1தெச.4:15,16). நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். நாம் எங்கேயுள்ளோம்? சரியாக இந்த இடத்தில். மேசியா எங்கே சங்கரிக்கப்பட்டார்? வேதவாக்கியம் கூறுகிற அதே இடத்தில் தான். எங்கே அந்த எழுபதாவது வாரமானது துவங்கும்? இந்த சபையானது முற்றாக துண்டிக்கப்பட்டதுமே சரியாக அந்த நேரத்தில்தான். பின்பு தேவன் யூதரிடம் திரும்பிச் செல்லுகிறார். 62சபையானது எடுக்கப்பட்டு போய்விட்ட பிறகு, யூதர் களின் வேளையானது வருகிறது என்பதை நீங்கள் நினைவில் கொண்டிருக்கவில்லையா? ஆனால் முதலாவதாக, அடுத்த படியான நிகழ்வு வரிசைக்கிரமத்தில் என்னவெனில், புறஜாதி யார் மத்தியில் ஒரு ஜாதியாராக ஒரு எழுப்புதல் உண்டாகி வல்லமையான ஜாதி உருவாவது கிடையாது. வரிசைக்கிரமாக நிகழ வேண்டியவைகளில் அடுத்தபடியாக உள்ள தென்ன வெனில், தேவனுடைய இராஜ்யம் வருதல், கிறிஸ்துவின் வருகையாகும். நீங்கள் விரும்பினால், நாம் இப்பொழுது தானியேலின் புஸ்தகம் 2ம் அதிகாரம் 34ம் வசனத்திற்கு செல்லலாம். தானியேல் 2ம் அதிகாரம் 34, 35 வசனங்கள் - தானியேலுக்குக் கொடுக்கப்பட்ட பொழுது - தானியேலுக்கு அத்தரிசனம் கொடுக்கப்பட்ட பொழுது, அதில் அவன் தன் ஜனங்களின் காலமானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முடிவுற்றிருந்த தையும், புறஜாதியாரின் நாட்களின் வருகையையும், அம்மகத் தான பெரிய கல்லைக் குறித்த தரிசனத்தையும் அவன் கண்டான். அல்லது அந்த பெரிய பயங்கரமான சிலையை அவன் கண்டான். அதற்கு பொன்னாலாகிய தலை உண்டாயிருந்தது, அதன் மார்புப் பகுதி வெள்ளியினால் ஆனதாயிருந்தது (இப்பொழுது கவனி யுங்கள், இங்கே உலோகங்கள் படிப்படியாக கடினமான உலோ கத்திற்கு மாறுகிறது, பொன்னிலிருந்து வெள்ளிக்கு) அடுத்த தாக, அச்சிலையின் தொடைப்பகுதி வெண்கலத்தால் ஆனதா யிருந்தது. பிறகு கால்கள் பாதங்கள் இரும்பினாலானது. ஆனால் கால் விரல்கள், பத்து விரல்கள், அவைகள் யாவும் இரும்பும் களிமண்ணும் கலந்ததாயிருந்தது. “நீர் இரும்பை களி மண்ணோடே கலந்ததாகக் கண்டீரே.... ஆகிலும் இதோ களி மண்ணோடே இரும்பு கலவாதது போல அவர்கள் ஒருவரோ டொருவர் ஒட்டிக் கொள்ளாதிருப்பார்கள் (தானி 2:43). ஆனால் அவர்கள் தங்களுக்குள் தங்கள் வித்துக்களை கலந்து அதன் மூலம் ஒருவர் மற்றவருடைய வல்லமையை முறியடிப்பதற்காக முயற்சி செய்வார்கள்.'' புரிந்து கொண்டீர்களா? 63தானியேல் அச்சொப்பனத்தை வியாக்கியானம் செய்தபடி, பொன்னாலான அத்தலை நேபுகாத்நேச்சார் ஆவான். அவன் கூறினான், “உமக்குக் கீழ்த்தரமான வேறொரு இராஜா உமக்குப் பிறகு தோன்றுவான்'' அவன் தான் மேதிய பெர்சியனாகிய தரியு ஆவான். அவன் வந்து புறஜாதி சாம்ராஜ்யத்தை எடுத்து ஆளத்துவங்கினான். மேதிய பெர்சிய இராஜ்யத்திற்குப் பிறகு அடுத்ததாக வந்தது எது? கிரேக்கர்கள். மகா அலெக்சாண்டர் ஆண்டான். கிரேக்கர்கள் இராஜ்யத்தை எடுத்துக்கொண்டார்கள். அதன்பிறகு கிரேக்கரிடமிருந்து இராஜ்யத்தை எடுத்துக் கொண்டது யார்? ரோமர்கள். அது முதற்கொண்டு புறஜாதி யாரை ஆண்டு கொண்டு வந்தது யார்? ரோமர்கள் - ரோமர்கள் தான். இப்பொழுது, அதுவே இரும்பாயிருக்கிறது. 64பிறகு, கவனியுங்கள், ரோமாபுரியானது முடிவு வரையிலும் நிலைத்திருக்கிறது, ஏனெனில் அது கால்விரல்களிலும் கூட காணப்படுகிறது. அவன் களிமண்ணைப் பார்த்தான் - அது மக்களைக் குறிக்கிறது, நாம் அதனால்தான் உண்டாக்கப்பட்டிருக் கிறோம். இரும்பானது ரோமாபுரியின் வலுமையைக் குறிக்கி றது. அது சகல தேசங்களில் வியாபித்து நிற்கிறது. வானத்தின் கீழே , சகல தேசத்தார் மேலும் ரோமுக்கு வல்லமை உண்டா யிருக்கிறது. உலகிலே ஒரு யுத்தத்தை துவக்கவோ, அல்லது அதை நிறுத்திவிடவோ ஒரேயொரு மனிதனால் இயலும். அதற்காக அவர் ஒன்றும் செய்ய தேவையில்லை. ஒரு வார்த்தை சொல்லு வது மாத்திரம் போதும், அதைக் கொண்டு அவர் செய்வார். அதுதான் போப். “கத்தோலிக்கன் ஒருவனும் ஆயுதத்தை எடுக்கக் கூடாது'' என்று அவர் சொன்னால் போதும். அதுவே யாவற்றுக்கும் முடிவானதாக இருக்கும், சகோதரனே. நீங்கள் என்ன வேண்டுமானால் பேசலாம். கிறிஸ்தவ அகிலத்தின் மிகப் பெரும் பகுதி கத்தோலிக்க மதமாயிருக்கிறது. புரிந்து கொண்டீர்கள்? 65அவர் ஒரு வார்த்தை கூறட்டும், அதுபோதும், அதுவே எல்லாமாயிருக்கிறது என்று கூறப்படும். இது இவ்வாறிருக் கிறது. அதைப் பற்றி பின்னால் பார்க்கலாம். “மிருகத்தோடே யுத்தம் பண்ணத்தக்கவன் யார்? அவனைப் போல் யாரால் பேச முடியும்? யார் அதைச் செய்ய முடியும்?' என்பார்கள் (வெளி.13:4) ”நாம் மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கு வோமாக'' என்பார்கள். அதைச் செய்வது சபைகளின் சமஷ்டி அமைப்புதான். அறிந்து கொண்டீர்களா? சபை ஸ்தாபனங் களையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு சமஷ்டி அமைப்பை அவர்கள் ஏற்கெனவே ஏற்படுத்திக்கொண்டுவிட்டார்கள். ஓ, நாம் முடிவுக்கு மிக அருகாமையிலே இருக்கிறோம். அங்கே அதற்கு அந்தளவு தான் இருக்கிறது. சினேகிதரே! நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். “மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குவோமாக'' என்பார்கள். ஒரு சொரூபம் என்பது என்னவெனில், இன்னொன்றைப் போல் தோற்றமளிக்கும் ஒன்றாகும். புரிந்து கொண்டீர்களா? இப்பொழுது நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். இப்பொழுது, இந்த காலத்தின் முடிவில் இங்கே கவனி யுங்கள். இப்பொழுது தானியேல் 2ம் அதிகாரம் 34, 35 ஆகிய வசனங்களிலே, அந்த சிலையை அவன் அதிகமான அளவு கருத்தூன்றி கவனித்தான். அவன் பார்த்துக்கொண்டிருக்கையிலே, கைகளால் பெயர்க்கப்படாத கல் ஒன்று மலையிலிருந்து பெயர்ந்து வந்து, அச்சிலையின் பாதத்தில் மோதி அதை நொறுக்கிப் போட்டது என்பதை கவனித்தான். அது அச்சிலையின் தலையில் மோதவில்லை, இப்பொழுது அதன் பாதத்தில் தான் அக்கல் மோதியது. அதுவே முடிவு காலமா யுள்ளது. அந்த பத்து விரல்களின் காலம். 66திரு ஐசன்ஹேவர் அவர்கள் ஜனாதிபதி பதவிக் காலம் முடியும் முன்னர்; அமெரிக்காவில் கடைசியாக வந்த ப்ராடெஸ்டெண்ட் ஜனாதிபதி அவர்- இனிமேல் அப்படி ஒருவர் வருவாரோ என்பது எனக்கு சந்தேகமாயிருக்கிறது, ஆனால் அப்பொழுது... உங்களுக்குக் காண்பிப்பதற்காகத் தான்.... மக்கள் விழிப்படைவார்களானால் நல்லது. ருஷ்யா வுடனான தனது கடைசி சந்திப்பிலே, அப்பொழுது, ஐந்து கிழகத்திய கம்யூனிஸ்ட் நாடுகளும் ஐந்து மேற்கத்திய நாடுகளும் சந்தித்தன. திருவாளர் ஐசன்ஹோவர் மேற்கத்திய நாடுகளுக்கு தலைமை வகித்தார். நான் அறிந்திருக்கிறப்படி, எனக்குக் கூறப்பட்டபடி, குருஷ்சேவ் என்பதற்கு ருஷ்ய மொழியில் 'களிமண்'' என்ற அர்த்தமாம். ஆங்கிலத்திலே ஐசன் ஹோவர் என்பதற்கு இரும்பு என்று அர்த்தமாம். அங்கே அந்த இரும்பும் களி மண்ணும் ஒன்றோடொன்று கலவாது. (அவர் குருஷ்சேவ் - தமிழாக்கியோன்) தனது ஷூவைக் கழற்றி மேசையின் மேல் ஓங்கி அடித்தார். அது கலவாது. ஆனால் இந்த சாம்ராஜ்யத்தின் நாட்களில் தான் கைகளால் பெயர்க் கப்படாத கல்லொன்று உருண்டோடி வந்து, அச்சிலையின் பாதத்தில் மோதி அதை நொறுக்கும். அக்கல் ஒரு மலையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டு பெயர்ந்து வந்தது. அது ஒரு கல்மலையாயிருக்கவேண்டும். அது தானே அக்கல் மலையிலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்டது. இப்பொழுது நீங்கள் அதை கவனித்தீர்களா?... 67உலகம் முழுவதிலும் உள்ள சகோதர ஊழியக்காரரே, சகோதர சகோதரிகளே, என் அறிவுக்கெட்டியபடி முதலாவதாக எழுதப்பட்ட வேதாகமம் எதுவென்றால், அதை தேவன் வானத்தில்தான் எழுதிவைத்தார். ஏனெனில், அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்து, தங்களுக்கு மேலாக, பரலோகத்திலே ஒரு தேவன் உண்டு என்று அவர்கள் கண்டு கொள்ள வேண்டும் என அவர் கருதினார். நீங்கள் வானராசி களைப் பற்றி கவனித்துப் பார்த்தீர்களானால்... மக்களே, நீங்கள் ஒருவரும் அதன் பின்னால் செல்ல வேண்டாம், நீங்கள் வேதாக மத்தோடு நிலைத்திருங்கள். கவனித்தீர்களா? நான் அறிந்திருக் கிறபடி அவ்வானராசிகளிலே முதலாவதாக துவக்கமாக உள்ளது கன்னியாகும். அவ்வானராசிகளின் எண்ணிக்கையிலே கடைசியாக உள்ளதென்னவெனில் சிங்கமாகும். கன்னிராசி என்பது கிறிஸ்து கன்னியின் மூலம் வருவதைக் குறிக்கிறது. இரண்டாம் வருகையானது யூதா கோத்திர சிங்கமாக அது இருக்கிறது. புரிந்து கொண்டீர்களா? அவ்வானராசிகளிலே கடைசிக்கு முந்தினது கடக ராசியாகும். அது புற்று நோயின் காலமாகும். (ஆங்கிலத்திலே கடக ராசிக்கு 'கான்சர்' என்ற பதம் உள்ளது- தமிழாக்கியோன்). இன்னொன்று எழுதப்பட்டது, அல்லது வைக்கப்பட்டது ஒன்று உள்ளது என்று நாம் கண்டு கொண்டுள்ளோம். அதுதான் கூர்நுனிக் கோபுரம் ஆகும். கூர்நுனிக் கோபுரம் அதன் அடிப் பாகத்தில் எவ்வாறு ஒரு மலையைப் போல் அகன்று துவங்கி, போகப் போக அது மேலே குறுகி தலைக்கல்லானது கூர்நுனிக் கோபுரத்தின் மேல் ஒருக்காலும் வைக்கப்படவில்லை - எகிப் திலே இருக்கும் அந்த பெரிய கூர்நுனிக் கோபுரத்தில், உங் களிடம் உங்கள் பாக்கெட்டில் ஒரு டாலர் மதிப்புள்ள நோட்டு இருக்கிறதென்றால் அதை எடுத்துப் பாருங்கள். அதில் நீங்கள் ஒரு பக்கத்தில் அமெரிக்க முத்திரையும், மற்ற பக்கத்தில் அதன் அடிப்பாகத்தில் கூர்நுனிக் கோபுரத்தையும் காணலாம். அந்த கூர்நுனிக் கோபுரத்தின் மேலே ஒரு தலைக் கல்லையும், அதனுள் ஒரு பெரிய கண் ஒன்று இருப்பதையும், அந்த கூர்நுனிக் கோபுரத்தின் அடிப்பாகத்தில் “மகத்தான முத்திரை'' என்று இருப்பதையும் நீங்கள் காணலாம். அமெரிக்க கழுகே அந்த மகத்தான முத்திரையாக ஏன் இருக்கக்கூடாது? அதுவே தேவனுடைய முத்திரையாக இருக்கிறது. நாம் ஒரு சிறிய பாடலைப் பாடுவது வழக்கம். அது நினைவிருக்கிறதா? சாலை நெடுகிலும் ஆத்துமாவுக்கென உள்ள மெய்யான புகலிடமாக உன்னை கவனித்திருக்கும் கண் ஒன்று உண்டு நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் இம்மகத்தான கண் அறிந்தேயுள்ளது ஒரு கண் உன்னை கண்காணித்துக் கொண்டேயிருக்கிறது. அது சரிதான். நமக்கு சிறிது மகிழ் கொண்டாட்டம் ஏற்படும் போது நாம் கூறுவதுண்டு. அது உங்களுக்கு ஞாபக மிருக்கும். நீ, திருடி ஏமாற்றி பொய் சொல்லி ஒரு சபையில் நீ சாட்சி சொன்னால் ஒரு கண் உன்னைக் கண்காணித்துக்கொண்டேயிருக்கிறது. 68இப்பொழுது, அந்த மகத்தான முத்திரையைப் பற்றி, இப்பொழுது, நாம் அதை அறிவோம்.... அதை நான் புரிந்து கொள்ளவில்லை; கூர்நுனிக்கோபுரத்தின் அளவிடுதலைப் பற்றி. ஆனால் நான் கடந்த சில போதகங்களிலே அவைகளைப் பற்றி உங்களிடம் கூறிக்கொண்டிருந்தேன். அது யாவும் ஒன்று சேர்ந்து சொல்லுகிறதை நீங்கள் காண்கிறீர்கள்? கூர்நுனிக் கோபுரமானது சபைக்கு அடையாளமாயிருக் கிறது. அது கீழே அகன்று காணப்பட்டு, மேலே போகப் போக குறுகிய ஒரு புனலைப் போல் வடிவமைந்து காணப் படுகிறது. அது மேலே சிகரமான பகுதி வரையிலும் வளர்ந்து வந்தது. ஆனால் அவர்கள் அதன் வேலையை முற்றாக முடிக்கவில்லை என்பதை நாம் கண்டோம். ஏன்? ஏன்? ஏன் அவ்வாறு உள்ளது என்று நான் வியக்கிறேன். ஏனெனில் வேதம் கூறுகிறபடி தலைக்கல்லானது புறக்கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதைப் புறக்கணித்தனர். 69இப்பொழுது சபைக்காலத்தை கவனியுங்கள். இப் பொழுது கவனமாக செவிகொடுங்கள். இதை நீங்கள் தவற விட்டுவிடாதீர்கள். லூத்தரின் சீர்திருத்தம் தொடங்கிய முதற் கொண்டு சபைக் காலமானது மறுபடியும் புறப்பட்டது. ஆதி அப்போஸ்தலர்களின் உபதேசமாகிய அஸ்திபாரக்கற்கள் முதலில் ஆதிகாலத்தில் இடிக்கப்பட்டன. பிறகு காலமானது ஒவ்வொரு சபைக்காலமாக கடந்து செல்லுகையில், சபை யானது லூத்தர் நீதிமானாகுதலைக் குறித்து பிரசங்கித்தலின் வழியாக சபை செல்லும் வரையிலும், எப்பொழுதும், மிகச் சிறுபான்மையாக ஆகிக் கொண்டே வந்தது. அதற்கு முன்பாக அந்தக் காலத்தில் நீங்கள் உங்களை கிறிஸ்தவர் என்று அறிக்கை யிட்டால், அவர்கள் உங்களை கொலை செய்வார்கள். அக்காலம் இரத்த சாட்சிகளின் காலமாயிருந்தது. வெஸ்லியின் காலத்தில் நீங்கள் கிறிஸ்துவைக் குறித்து அறிக்கையிட்டால், அச்செய்தி ஒரு புதிய வழியாக இருந்த படியால், உங்களைப் பரிசுத்த உருளை என்று கேலி பேசுவர். வெஸ்லியும், ஆஸ்பரியும் இங்கே வந்தபொழுது அமெரிக் காவில் அவர்கள் கூட்டங்கள் நடத்தினர்; அதற்கு மக்கள் சென்றனர். அக்கூட்டங்களை அவர்கள் பள்ளிக் கூடங்களில் தான் நடத்த வேண்டியிருந்தது. ஏனெனில், சபைகள் அவர்களுக்கு கூட்டங்கள் நடத்த இடங்கொடுக்கவில்லை. நீங்கள் உங்கள் வரலாற்றைப் படித்துப் பாருங்கள் அக்கூட்டங்களில் மக்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார், அதினால் மக்கள் தரையில் விழுந்தனர், அந்த அளவுக்கு நடந்தது, அப்படி விழுந்தவர்கள் மேல் அவர்கள் மயக்க மடைந்தனரோ என்றெண்ணி, மக்கள் தண்ணீரைத் தெளித்து அவர்களுக்கு விசிறி விடுவதுண்டு. எனது ஐம்பது வயது வாழ்க்கையில் நானே அவர்களுடைய கூட்டங்களுக்கு சென்றிருக்கிறேன். பரிசுத்த ஆவியின் வல்லமையால் அவர்கள் அவ்விதமாக கீழே விழுவதையும், அவர்கள் முகத்தின் மேல் மற்றவர்கள் தண்ணீரைத் தெளிப்பதையும் நானே கண்டிருக்கிறேன். பழைய சுயாதீன மெதோடிஸ்டுகள் அநேக ஆண்டுகள் முன்பாக அவ்விதமான அனுபவத்தைக் பெற்றிருந்தனர். அதினி மித்தம் ஒரு உபத்திரவம் உண்டாயிருந்தது. 70வெஸ்லியின் அந்த காலம் நடந்து முடிந்த பிறகு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடு பெந்தெகொஸ்தே யுகம் வந்தது. நீங்கள் இவ்வாறு காலந்தோறும் வளர்ந்து கொண்டே வருகிறதை கவனித்தீர்களா? இப்பொழுது, தலைக்கல்லானது இன்னமும் அதன் மேல் வரவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் ஏன்? அவர்கள் சபையை - அல்லது கூர் நுனிக் கோபுரத்தை தலைக்கல் வந்து பொருத்துவதற்கு ஏற்றவாறு அதன் சிகரப் பகுதியை வடிவமைத்து இருந்தனர். ஆனால் எதைப் பற்றி கூறுகிறேன் என்பதை புரிந்துகொண்டீர்கள், இல்லையா? லூத்தரின் ஊழியத்திலிருந்து பெந்தெகொஸ்தேயின் காலம் முடிகிற வரையிலும் சபையானது மிகச் சிறிய எண்ணிக்கையில் தான் இருந்து வந்திருக்கிறது. எனவே தான் இந்த வரைப்படத்தில் நீங்கள் பார்க்கிறபடி ஒளியானது ஏறத்தாழ அணைந்துவிடப் போகும் அளவுக்கு ஆகிவிட்டது. அது பெந்தெகொஸ்தேயின் காலமாயுள்ளது, அது பெந்தெ கொஸ்தே - ஆனால் அது பெந்தெகொஸ்தே ஸ்தாபனம் அல்ல-ஏனெனில் அவர்கள் லவோதிக்கேயாவினர் செய்தது போலவே செய்தனர், நிக்கொலாய் மதஸ்தினரைப் போலவே அதுவும் மதஸ்தாபனமாகிவிட்டது. ஆனால் உலக முழுவதிலும் உள்ள உண்மையான சபையோ தன் மத்தியிலே இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தைப் போலவே உள்ள ஒரு ஊழியத்தை வரப் பெற்றிருக்கும் அளவிற்கு அது வளர்ச்சி பெற்று விட்டது. இப்பொழுது அவர்கள் பெற்றிருப்பது என்ன? அவர்கள் ஒரு கிரமமான நிலையிலே உள்ள ஒரு காரியத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டனர். இப்பொழுது அடுத்ததாக உள்ள காரியம் தான் என்ன? இந்தப் புறக்கணிக்கப்பட்ட தலைக்கல்லானது மலையிலிருந்து, கைகளினால் பெயர்க்கப்படாமல், பெயர்ந்து கூர்நுனிக் கோபுரத்துக்கு வந்துள்ளது. தேவன் அதை அனுப் பியிருக்கிறார். அதை நீங்கள் கண்டுகொண்டீர்களா? (சபையார், “ஆமென்'' என்று கூறுகின்றனர்- ஆசி) புறக்கணிக்கப்பட்ட இந்தக்கல் தான் தலைக்கு தலைக்கல்லாயிருக்கிறது. இந்த புறஜாதியின் காலத்தில் அவர்களால் புறக்கணிக்கப்பட்ட இந்த கல் கிறிஸ்துவாக இருக்கிறார். கிறிஸ்து வெட்டப்பட்டு, சபையின் மேல் ஒரு பிரதிநிதியாக அல்லது தேவகுமாரனாக அல்லது ஒரு பெரிய பிரமுகராக ஏற்படுத்தப்படவில்லை. அவர் பரிசுத்த ஆவியாயிருக்கிறார். கிறிஸ்து வருதலே கூர்நுனிக் கோபுரத்தின் மேல் தலைக்கல் இணைவதாகும். அதை நீங்கள் கண்டு கொண்டீர்களா? [”ஆமென்'] 71இப்பொழுது அவை உரிய வடிவத்தைப் பெற்றிருக்கிற படியால் ... கூர்நுனிக்கோபுரத்தைப் போல் நான் எங்கே இதை உருவகப்படுத்தியிருக்கிறேன் என்பதை கண்டீர்களா? பரிசுத்தர் உயிர்த்தெழுதலே மகிமைக்குள் அவர்கள் பவனி செல்லுதலை உண்டாக்குகிறது. இப்பொழுது அதை நீங்கள் புரிந்து கொண்டீர் களா? சகலவற்றையும் காண்கிற அந்தக் கண், புறக் கணிக்கப்பட்ட அந்தக் கல்லாகிய கிறிஸ்துவாகிய தலைக்கல் சரியாக வேதாகமம் கூறியபடியே வருகிறது. கைகளால் பெயர்க்கக்கூடாத இந்தக் கல் பர்வதத்திலிருந்து பெயர்ந்து வருகிற வரையிலும் தானியேல் இப்புறஜாதியாரின் காலத்தை கவனித்துக் கொண்டிருந்தான். அவர்கள் அந்த கூர்நுனிக் கோபுரத்தின் மேல் ஒருபோதும் தலைக்கல்லை வைக்கவேயில்லை. அது மானிடக் கரங்களினால் வெட்டியெடுக்கப்பட்ட ஒன்றல்ல. அந்தக் கல்லை வெட்டியெடுத்தது தேவனுடைய கரங்கள் தாமே. அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அது என்ன செய்தது? அது அந்தச் சிலையின் பாதத்தின் மேல் மோதி அதை நொறுக்கி தூள்தூளாக்கியது. அல்லேலூயா! அந்தக் கல் வரும்போது, அப்பொழுது என்ன நடந்தது? அந்தக் கல் வரும்போது, புறஜாதிகளின் காலம் முடிவடைந்ததினால், சபையானது எடுத்துக் கொள்ளப் படுதலில், மகிமையிலே உன்னதத்திற்குச் சென்றுவிட்டது. தேவனே புறஜாதி காலத்தை முடிவடையச் செய்கிறார். 72இங்கு சபைக்கு சில காலத்திற்கு முன்பாக ஒரு மனிதனும் அவரது மனைவியும் வருவதுண்டு, அவர்கள் தங்கள் வேதாக மத்தை எடுத்துக்கொண்டு, அதை ஓரிடத்தில் வைத்துவிட்டு, அவர்கள் பாடிக்கொண்டே செல்வதுண்டு. ஓ நான் அந்தக் கல் வர காத்திருக்கிறேன். அது பாபிலோனிலே உருண்டோடியது, பாபிலோனில் உருண்டோடியது, (தங்கள் வீட்டிற்கு சென்று கொண்டே அவர்கள் கூறு வதுண்டு ) பாபிலோனுக்கு உருண்டோடி வரும் கல்லை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அதோ அவர்தான் அது. கிறிஸ்துதான் அந்தக் கல். அவர் மானிடனால் பிறப்பிக்கப்படவில்லை. அவர் தேவனால் பிறந்த வர். அவர் தேவ ஆவியினால் மறுபடியும் பிறந்த ஒரு சபைக்காக வருகிறார். ஏனெனில் அந்தத் தலைக்கல்லின் சத்துவமானது ஒரு காந்தத்தைப் போல் சபைக்குள் பாய்ந்தோடுகிறது. 73நான் அந்த ஆலையிலே நடப்பதை பார்த்திருக்கிறதை நினைவு கூருகிறேன். அங்கே இருக்கும் ஓட்டை உடைசல் உலோகத்துண்டுகளை அவர்கள் வடிவமைக்கிறதை கண்டிருக் கிறேன்; அதற்காக அங்கே ஒரு பெரிய காந்தக் கல்லானது அவைகளண்டையில் நகர்ந்து வரும்பொழுது, அதுதான் காந்த சக்தியால் தன்னண்டையில் இழுத்துக்கொண்டு போகும். நாம் தானே அந்த மகத்தான தலைக்கல்லினால் அதன் காந்தத்தினால் கவரப்படவேண்டும். பரிசுத்த ஆவியாகிய கிறிஸ்துவே தலைக் கல்லாயிருக்கிறார். பரிசுத்த ஆவியின் காந்தவிசையைப் பெற்றிருக்கும் நாம் ஒவ்வொருவரும், அந்தக் கல்லானது வந்து அச்சிலையை மோதி அதை நொறுக்குகையில், சபையானது அக்கல்லிடமாக பாய்ந்தோடும். பரிசுத்தவான்களின் எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும்போது, அந்த நாளுக்குள்ளாக அவள் செல்லுகையில், அவள் மகிமைக்குள்ளாக உயரே எடுத்துக் கொள்ளப்படுவாள். 74இப்பொழுது இங்கே நோக்கிப் பாருங்கள். யூதர்களுடைய ஆலயம் பாழாக்கப்படுவதற்கு எவ்வாறு நாற்பதாண்டுகள் பிடித்ததோ, அவ்வாறே அவர்கள் இப்பொழுது தங்கள் சுயதேசத்திற்கு திரும்பி வருவதற்கு கடந்த நாற்பதாண்டுக் காலமாக அது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மற்றொரு ஆலயத்தை கட்டும் வரையிலும், அதற்காக அவர்கள் திரும்பி வருதற்காக அவர்களுக்கு சுமார் நாற்பதாண்டுக் காலம் ஆகியிருக்கிறது. நாம் சரியாக காலத்தின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம் என்பதை காணுங்கள். நல்லது, புறஜாதிகள் ஒருவேளை... இப்பொழுது, நாம் எடுத்துக்கொள்வோமாக... நாம் சபையைக் குறித்தும், கல்லானது வருகிறதைக் குறித்தும் காண்கிறோம். நாம் கடைசி காலத்தை எடுத்துக்கொள்வோமாக. நாம் அதைக் குறித்து ஆராய்ந்து, அது எவ்வாறு இருந்தது என்பதை கண்டோம். அதைக் குறித்து சில குறிப்புகள் இங்கே நான் கொண்டிருக்கிறேன் என்று நான் நம்புகிறேன். ஒரு நிமிடம் அதைக் குறித்து நாம் பார்ப்போமாக. வரப்போகிற பிரபுவாகிய அந்திக்கிறிஸ்துவானவன் யூதரோடு ஒரு உடன் படிக்கையைச் செய்வான். தானியேல் 9ம் அதிகாரம் 27ம் வசனத்தில் நாம் பார்க்கையில், வாரத்தின் பாதி சென்ற போது, அது மூன்றரை வருடங்களாகும். அப்போது மிருகமானது ஒரு உடன்படிக்கையை செய்து கொள்ளுவான். அந்த ஒன்றைக் குறித்து இன்று சற்று நேரம் கழித்து பார்க்கலாம் என்று நான் விரும்புகிறேன். அவ்வுடன்படிக்கையைக் குறித்து, இப் பொழுதே அதைக் குறித்து பார்க்கலாம் என்று நான் விரும்புகிறேன். 75இந்த புறஜாதிக் காலத்திலுள்ள சபைக் காலங்களுக்கான, ஒவ்வொரு சபைக்கென்று உள்ள தூதன் இன்னான் என்றும், அக்காலத்திற்குரிய செய்தி இன்னதென்றும், அக்காலத்தில் என்ன சம்பவிக்கும் என்பதைக் குறித்தும் பிழையேதுமின்றி நிரூபிக்கப்பட்டது. இந்தக் காலமானது மகிமையானதொரு காலமாக விளங்கியது. அதற்கடுத்த காலத்தில், “நிக்கொலாய் மதஸ்தருடைய சொற்கள்'' என்றழைக்கப்படும் ஒன்று அப்பொழுது உண்டாயிருக்கும் என்று கூறப்பட்டது. அதற் கடுத்த காலத்தில் அது உபதேசமாக ஆகிவிடும் எனப்பட்டது. அதற்கடுத்து, நிக்கொலாய் சபையோடு விவாகம் செய்தல் உண்டாகுமென்றும், பரிசுத்தவான்களை உபத்திரவப்படுத்துதல் உண்டாயிருக்கும் என்றும் கூறப்பட்டது. ஒவ்வொன்றும், கூறப்பட்ட வண்ணமாக அவ்வாறே சம்பவித்தது. அதற்கடுத்த காலத்திற்கு நாம் வருகையில், சிறிதளவு ஒளிவர ஆரம்பிக் கிறது. ''உனக்கு சிறிய பெலன் இருக்கிறது, நீ ஒரு நாமத்தைக் கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாய், ஆனால் நீ செத்த வனாயிருக்கிறாய். நான் வந்து விளக்குத்தண்டை உன்னிடத் தினின்று அகற்றாதபடிக்கு உனக்கிருக்கிறவைகளை நீ ஸ்திரப் படுத்து'' என்று கூறப்பட்டது. 76அதன்பிறகு வெஸ்லி தன்னுடைய காலத்தோடு அங்கே வருகிறார். வெஸ்லியின் காலமானது சரியாக எங்கே துவங்கிற்று என்பதை நாம் கண்டோம். அது எவ்வாறு அழைக்கப்பட்டது? அன்பைக் குறித்து நாம் கேள்விப்பட்டதிலேயே அதைப் பெற்றிருந்ததாக கருதப்பட்ட அக்காலம் பிலதெல்பியா சபைக் காலமாகும். அதுதான் ஜான் வெஸ்லியின் காலத்தில் தான் அது உண்டாயிருந்தது. அவருடைய காலம் முடிவடைந்த பிறகு, பெந்தெகொஸ்தேயின் காலம் வந்தது, அது வெதுவெதுப்பான காலம். பின்பு, நாம் அங்கே திரும்பிச் சென்று பெந்தெ கொஸ்தேயின் காலத்தின் இறுதிக் கட்டத்தில்தான், எவ்வித மான செய்தியானது வரும் என்பதைக் குறித்து கண்டோம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். அந்தக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் தான், அந்தந்த சபைக் காலத் தூதனாவன் வந்தான் என்பதை. பரிசுத்த பவுல் இறுதிக்கட்டத்தில் தான் வந்தான். ஏனையோரும் அவ்வண்ணமாகவே, அவர்வர்களுடைய சபைக் காலத்தின் இறுதிக்கட்டத்தில் தான் வந்தனர். பரிசுத்த ஐரேனியஸும் அப்படியே. ஏனையோரும் அப்படியே. ஒரு சபைக்காலத்தின் தூதனாவன் தன் காலத்தின் இறுதிக்கட்டத்தில் வந்தபோது, அச்செய்தியோடு அக்காலம் அடுத்த காலத்திற் குள்ளாக தாண்டிச் சென்று விட்டது, அவன் அதை எடுத்துக் கொண்டு, அடுத்த காலத்திற்குள்ளாகத்தான் சென்றான். பார்த் தீர்களா? 77இப்பொழுது, இக்காலத்தில் நாம் காண்பது என்ன வெனில்... நாம் இங்கே கொண்டிருக்கிறபடியான நட்சத்திரங் கள் அங்கே வரையப்பட்டுள்ளன. நமக்கு ஒரு நட்சத்திர செய்தியாளன் உண்டாயிருக்கிறான். நமக்கு ஒரு நபர் உண்டு, ஒரு செய்தியுண்டு, அது காலத்திற்கு என புறப்பட்டுச் செல்லு கிறது. அதை ஒரு கூட்டம்மக்கள் நிராகரிப்பார்கள், ஒரு கூட்டம் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். இந்தக் காலத்திற்குரிய தூதன் எலியாவின் வல்லமையோடு வருவான். அவ்வாறு தான் அது இருக்கும். அவன் வந்து பிள்ளைகளுடைய இருதயங்களை பிதாக்களின் விசுவாசத்திற்கு திருப்புவான், உண்மையான அப்போஸ்தல விசுவாசத்திற்கு, மீதியாயிருக்கிற பெந்தெ கொஸ்தே மக்களை திருப்புவான். உண்மையான அப்போஸ்தல விசுவாசத்தைக் குறித்து, நீங்கள் அப்போஸ்தல நடபடிகள் புஸ்தகத்தில் காணலாம். அப்புஸ்தகத்திலும் ஒருவனும், ஒருக்காலும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் என்று சொல்லி ஞானஸ்நானம் பண்ணப்படவேயில்லை என்பதை நீங்கள் காணலாம். அங்கே ஒருவரும் தெளிப்பு செய்யப்படவில்லை என்பதைக் காணலாம். பெந்தெகொஸ்தே என்ற நாமகரணத்தைக்கொண்டு இன்றைக்கு நடைபெறும் ஒருவித காரியமும் அன்றைக்கு அப்போது நடக்கவேயில்லை. அவர்களிடத்தில் உண்மையான பிரத்தியட் சமாகுதலும், அவர்கள் மத்தியிலே மாசுமருவின்றி இருந்த தேவ குமாரன் அவர்களோடு கிரியை செய்தலாகிய தேவ ஆவியான வரின் காரியம் உண்டாயிருந்தது. இந்தச் செய்தியோடு வரவேண்டியவனாகிய இந்த நபர் அல்லது வரப்போகிற இந்த அம்மனிதர், எலியாவைப் போல் இருக்கவேண்டும். எலியா மூன்று தடவைகளில் வரவேண்டியிருக்கிறது. அந்த நபர் யோவான் ஸ்நானன் தான் என்று நீங்கள் கூறலாம். மல்கியா 3ம் அதிகாரத்தின்படியேயான செய்தியாளன் - தூதன் யோவான் ஸ்நானன் என்று இயேசு கூறினார் என்பதை நீங்கள் கவனிக் கலாம். மல்கியா 4ம் அதிகாரத்தின்படியான தூதன் அவன் அல்ல. “இதோ என் தூதனை எனக்கு முன்பாக அனுப்பு கிறேன்...' (மல் 3:1) மத்தேயு 11ம் அதிகாரத்தில் 6ம் வசனம் தொடங்கி தொடர்ந்து நீங்கள் பார்த்துக் கொண்டேயிருப்பீர் களென்றால், அங்கே அதைக் குறித்து நீங்கள் காணலாம். 78இப்பொழுது, இந்தக் கடைசி நாட்களிலே, ஜனங்களின் மத்தியிலே எலியாவின் ஆவியானது வரவேண்டிய தாயிருக்கிறது. முன்பு அவர்கள் செய்ததைப் போல வே அவனும் கிரியை செய்யவேண்டும். அவனுடைய சுபாவ மானது அதே விதமாகத்தான் இருக்கவேண்டும். அதே நபரைப் போலவே இத்தூதனும் அதே தன்மையைக் கொண்டிருப்பான். சபையின் சுபாவத்தைப் போலவே அந்தச் செய்தியானது புறப்பட்டுப் போகும்... முயற்சித்துக்கொண்டு.... அவன் ஜனங்களால் வெறுக்கப்படுவான். கீழ்த்தரமான, கெட்ட ஸ்திரீகளை அவன் வெறுப்பவனாயிருப்பான். வனாந்திரத்தை நேசிப்பவனா கவும், எலியாவைப் போல் யோவானைப் போல், அவன் மனோ நிலையில் மாறுபட்ட பாங்கை உடையவனாகவும், எப்பொழுதும் மனநிலை குலைந்தவனாகவும் இருப்பான், இவை யாவும் நிறைவேறியதை நாம் கண்டிருக்கிறோம். நாம் அந்தச் செய்தியைப் பெற்றவர்களாக இருக்கிறோமென்றால் கிறிஸ்து புறக்கணிக்கப்பட்டுள்ளதையும் நாம் காண்கிறோம். இந்த மதஸ்தாபனங்களுள் ஒன்றினுக்காவது சார்ந்தவராக அவர் இருக்கவில்லை. எனவே நீங்கள் அதனுள் பிரவேசிக்க முடியாது. எனவே அவர் அவைகளைவிட்டு வெளியே தூக்கியெறியப் பட்டுள்ளார். அதை நீங்கள் கண்டீர்களா? அவர்கள் மத்தியில் கிறிஸ்துவால் கிரியை செய்ய இயலாது. “நீங்கள் யார்? ”நான் ஒரு கிறிஸ்தவன்'' என்று பதில் வருகிறது. ''நீங்கள் எந்த ஸ்தாபனத்தை சார்ந்தவர்?“ ”நான் எதையும் சேர்ந்தவனல்ல'' என்று பதிலளிக்கிறோம். 'அப்படியாயின் நாங்கள் உன்னை உபயோகப்படுத்திக் கொள்ள முடியாது'' என்று கூறுகின்றனர். பார்த்தீர்களா? கிறிஸ்து புறக்கணிக்கப்பட்டுள்ளார். அவர் புறக்கணிக்கப் பட்டிருக்கிறார் என்பதை பாருங்கள். எலியாவும் அதே விதமாக புறக்கணிக்கப்பட்டான், யோவானும் அவ்வாறே புறக்கணிக் கப்பட்டான். ஆனால் என்ன? அதனால் அவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டனரா? அது செய்தியை பாதித்ததா? “ஓ வணங்காக் கழுத்துள்ளவர்களே' என்று அவர்கள் கூறினர். அதை அவர்கள் மேல் செய்தியாளர்கள் ஊற்றினர். அவர்கள் தங்கள் ஊழியத்தில் முழுப் பெலத்தோடு ஈடுபட்டனர். அவர்கள் தொடர்ந்து அதில் முன்னேறிச் சென்றனர். யார் என்ன சொன்னாலும், அதை பொருட்படுத்தாது, முடிவு வரையிலும் தேவனுடைய செய்தியானது தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டேயிருக்கும். அப்போது நிர்ணயிக்கப்பட்ட அழிவு சொரியப்படும். நாம் இறுதி கட்டத்தில் இருக்கிறோம். 79இப்பொழுது, முதலாம் உலகப் போரின் காலத்திற்குப் பிறகு, நாற்பதாண்டுக் காலமாக யூதர்கள் தங்களுடைய சுயதேசத்திற்கு திரும்பி வந்து கொண்டேயிருக்கின்றனர். இஸ்ரவேலானது தன் சுய தேசத்திலிருக்காத வரையிலும், அவர்களோடு தேவன் இடைபடுவதேயில்லை. மற்ற தேசங்களிலிருந்த அந்த யூதர்கள் தங்களுடைய நாட்டிற்கு திரும்பி போய்க் கொண்டிருக்கையில் அதைக் குறித்து 'லுக்' என்ற பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வெளியாகி யிருந்தது. உங்களுக்கு நினைவிருக்கும். யூதர்கள் ஈரானில் இருக்கையில், அவர்களை ஏற்றிக்கொண்டு வருவதற்காக விமானங்கள் அங்கே தரையிறங்கியிருக்கையில் நடந்ததைப் பற்றி மார்க்க சம்மந்தமானதொரு பத்திரிக்கையில் நான் வாசித்தேன். அவர்களெல்லாம் எங்கெங்கோ இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் சிதறிப் போயிருந்தார் கள். அவர்கள் உண்மையான யூதர்கள். அவர்களுக்கு ஒரு தருணம் கிடைக்கவில்லை. இப்பொழுது சகோதரனே, அங்கே தான் அந்த 1,44,000 பேர்கள் இருக்கிறார்கள். நாம் வெளிப் படுத்தின விசேஷம் 11-ம் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும் போது, அதைக் குறித்து நீங்கள் காண்பீர்கள். காத் கோத்திரத்தில் பன்னீராயிரம், ஆசேர் கோத்திரத்தில் பன்னீராயிரம், ரூபன் கோத்திரத்தில் பன்னீராயிரம் பேர்கள்...'' என்று அவர் கூறினார். அவர்கள் யாவரும் எங்கே நின்றுகொண்டிருந்தார்கள்? சீனாய் மலையில் மேல்தான். யூதர்கள் தங்கள் சுயதேசத்திற்கு திரும்பி விட்டார்கள். அவர்கள் அங்கே இருந்தனர், வால் ஸ்ட்ரீட்டில் உள்ள நேர்மையற்ற அந்த யூதர் கூட்டமல்ல அவர்கள்; இல்லை ஐயா, அது உண்மையான யூதர்களாகும். அந்தப் பத்திரிக்கையிலே, அங்கேயுள்ள யூதர்களைக் கொண்டு வருவதற்காக விமானங்கள் வந்திறங்கிய போது, நடந்ததைப் பற்றி கட்டுரை வெளியாகியிருந்தது. அவர்கள் விமானத்தில் அருகில் கூட போகவில்லை. அவர்களுடைய வயது முதிர்ந்த யூத ரபீ அங்கே நின்று கொண்டு, ''நமது தீர்க்கதரிசி, நாம் நமது சுயதேசத்திற்கு போகப் போகையில், நாம் கழுகுகளின் செட்டைகளின் மேல் சுமந்து சென்று கொண்டு போகப்படுவோம் என்று கூறியதை நினைவில் கொள்ளுங்கள்'' என்று கூறினார். அவர்கள் இன்னமும் மரக்கலப்பையால் தான் உழுது கொண்டிருந்தார்களாம். தேசங்கள் உடைகின்றன, இஸ்ரவேல் விழித்தெழும்புகிறது. தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தவை யாவும் அவர்களுக்கென்று மீதமுள்ள எழுபதாவது வாரத்தைப் பற்றி பார்க்க நாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம். 80சகோதரன் பெத்ரூஸ் அவர்கள் அவர்களுக்கு அச்சிறிய புதிய ஏற்பாட்டுப் புஸ்தகங்களை அனுப்புகையில் நான் அங்கே நின்று கொண்டிருந்ததை எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் அதைப் படித்துவிட்டு, “இவர்தான் மேசியா என்றால், அவர் செத்தவராக அல்ல, ஜீவிக்கிற வராக இருக்கிறாரெனில், அவர் தீர்க்கதரிசிக்குரிய அடை யாளத்தை செய்து காண்பிக்கட்டும், அதை நாங்கள் காண் போமாக'' என்றார்களாம். 'அவர் உயிரோடெழுந்தாரென்றால், தமது சபையில் ஜீவிக்கிறாரெனில், அவர் தீர்க்கதரிசிக்குரிய அடையாளத்தை செய்கிறதை நாங்கள் காணட்டும். அப்போது நாங்கள் அவரை விசுவாசிப்போம்'' என்றார்களாம். யூதர்கள் எப்பொழுதும் அதை விசுவாசிக் கிறார்கள். அவர்கள் மேசி யாவை ஒரு தீர்க்கதரிசி என்று அறிந்திருக்கிறார்கள். அந்நாளிலே, நான் சகோதரன் ஆர்கன்ப்ரைட்டின் இடத்தில் அங்கே அந்த யூதர்களோடு நின்றிருந்தபொழுது, “எங்களிடத்திற்கு எங்கள் ஜனங்களண்டையிலே வாருங்கள்'' என்றார்கள். நான், 'நிச்சயமாக, நான் வருவதற்கு மிக்க மகிழச்சியடை வேன்'' என்றேன். மிக்க அவசரமாக ஒரு முடிவை நான் எடுத்துவிட்டேன். எகிப்திலுள்ள கெய்ரோவுக்கு நான் புறப் பட்டேன். (ஒலிநாடாவில் முதல் பக்கம் முற்றுப் பெறாமல் முடிகிறது - ஆசி). 155.... ஆயிரக்கணக்கான அத்தலைவர்கள். ''அவர்களை எங்காவது ஒரு சமவெளிப் பகுதியில் கொண்டு வாருங்கள். அவர் இன்னமும் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கிறாரா இல்லையா என்பதை நாம் கண்டு பிடித்துவிடுவோம். (ஆமென்!) நல்லது, அவர் என்ன செய்கிறார் என்பதை காண்போமாக'' என்றார்கள். ஓ, அது அவர்களுக்கு மிக அருகாமையில் இருந்தது. அதைத் தான் அவர்கள் விரும்பினார்கள். அவர்கள் மாத்திரம் அதைக் கண்டுக் கொள்ளுவார்களானால், அதை விசுவாசிப்பார்கள். 81ஆகவே நான் என்ன செய்தேன்? நான் கெய்ரோவில் இறங்கி, அங்கிருந்து அங்கே போவதற்காக புறப்பட்டேன். அதற்கான டிக்கெட் ஏற்கெனவே என்னிடம் இருந்தது. பிரயாணிகளை விமானத்தில் ஏறிக்கொள்ளும்படியான அழைப்பு கொடுப்பது முடிவதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் தான் மீதமிருந்தன. அப்பொழுது, ஏதோ ஒன்று என்னிடம், “இப்பொழுது அல்ல, புறஜாதிகளின் அக்கிரமத்தின் பாத்திரம் இன்னமும் நிறைவாகவில்லை. எமோரியரின் அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை. அதைவிட்டு நீங்கியிரு'' என்று கூறியது. நானாக அதைக் கற்பனை செய்தேனோ என்று எண்ணினேன். ஆகவே நான் விமானங்கள் நிறுத்தி வைக்கப் படும் ஷெட்டின் பின்னால் போய் நின்று கொண்டு ஜெபித்தேன். ”இப்பொழுது அங்கே போக வேண்டாம், அதை விட்டு நீங்கியிரு“ என்று என்னிடம் கூறப்பட்டது. பிறகு நான் வேறு இடத்திற்குப் போவதற்காக டிக்கெட் எடுத்துக்கொண்டு அங்கே போகாமல், வேறே இடத்திற்கு நான் புறப்பட்டுப் போய் விட்டேன். ஏனெனில் அதற்கான வேளையானது இன்னும் வரவில்லை . இப்பொழுது, தேவன், எந்த நேரத்தில் யூதர்களோடு மீண்டும் இடைப்பட அனுமதிக்கப் போகிறார் என்பதை பற்றி என்னால் உங்களுக்கு கூற முடியாது. எனக்குத் தெரியாது. எவருக்கும் தெரியாது. ஆனால் செவி கொடுத்துக் கேளுங்கள், இஸ்ரவேல் ஏற்கெனவே தனது சுயதேசத்தில் இருக்கிற தென்றால், ஏற்கெனவே அது.... அங்கே பாறைகளெல்லாம் பொறுக்கியெடுக்கப்பட்டு, நீர்ப்பாசனத்திற்கான தண்ணீர் களெல்லாம், அதாவது தேவன் அவர்களுக்கு வாக்குரைத்த படியெல்லாம், கிணறுகளையும், பெரிய திறந்த ஊற்றுகளையும் அவர்கள் கண்டு கொண்டு விட்டனர். நீங்கள் அது போன்ற மிக அழகான பிரதேசத்தை வேறு எங்கும் கண்டிருக்கவே முடியாது. அவர்கள் ஒரு நகரத்தை கட்டியெழுப்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு நீர்பாசன வசதியுள்ளது. உலகிலேயே மிகச் சிறந்த நிலத்தை அவர்கள் உடையவர்களாயிருக்கின்றனர். உலகையே விலைக்கு வாங்கக் கூடிய அளவுக்கு விலை மதிப்புயர்ந்த இரசாயனங்கள் அவர்களிடம் உள்ள சவக் கடலில் உள்ளது என்று நாம் காண்கிறோம். 82அவர்களுடையவை யாவும் அவர்களுடைய கரங்களில் கிட்டியிருக்கிறது. அதை அவர்கள் எவ்வாறு செய்தார்கள்? ஹிட்லரின் இருதயம் கடினப்படுத்தப்பட்டது; முஸோலினி யின் இருதயம் கடினப்படுத்தப்பட்டது. பார்வோனின் இருதயம் கடினப்படுத்தப்பட்டு, அதனால் அவர்களை அது அவர்களுடைய தேசத்திற்கு எவ்வாறு துரத்தியதோ, அதைப் போலவே நடந்துள்ளது. கடந்த நாற்பதாண்டுக் காலமாக அவர்கள் அந்த தேசத்தினுள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். இப்பொழுது அவர்கள் அங்கேயிருந்து கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். புறஜாதி சபையானது லவோதிக்கேயா சபையின் காலத்தின் முடிவிலே வந்துள்ளது. யூதர்கள் தங்களுடைய சுயதேசத்திற்கு ஏற்கனவே வந்துவிட்டார்களென்றால், அப்பொழுது, ஏற்கனவே புறஜாதிகளின் விசுவாச துரோக மானது வந்துவிட்டது என்று அர்த்தம். நமக்கு உடைந்து போயிருக்கிற தேசமும் நமக்கு உண்டாயிருக்கிறது, தலைக்கு மேலே அணுகுண்டுகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன; வெதுவெதுப்பாயுள்ள சபையும் நமக்கு உண்டாயிருக்கிறது, தங்களை வேறு பிரித்துக்கொண்டுள்ள சபையும் நமக்கு உண்டா யிருக்கிறது, தலைக்கல்லாகிய அவர் வரும்போது அவரோடு சேர்ந்து கொள்ள தகுதியடையும்படி செய்ய, இயேசு கிறிஸ்து வின் ஊழியத்தைப் போன்றே உள்ளதான ஒரு ஊழியமும் நமக்கு உண்டாயிருக்கிறது, இவ்வளவுக்குப் பின்னும் இன்னும் வேறு என்ன சம்பவிக்க வேண்டியதிருக்கிறது? அது எந்த நிமிடத்திலும் சம்பவிக்கக் கூடும், இனி வேறு ஒன்றும் இல்லை. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். ஓ, மகிமை! அந்த யூபிலியைப் பற்றிய விஷயத்தை நான் எடுத்துக்கொள்ள இயலுமோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதில் ஒரு பகுதியையாவது உங்களுக்குக் கிடைக்கச் செய்ய நான் விரும்புகிறேன். 83கவனியுங்கள், இப்பொழுது எத்தனை பேர் அதைக் கண்டு கொண்டீர்களா? வேத வாக்கியங்களானது அந்த ஏழு வாரங்கள் நாற்பத்தியொன்பது என்பதை எங்கே நிரூபிக்கின்றன என்ப தைக் கண்டு கொண்டீர்களா? அந்த அறுபத்திரண்டு வாரங்கள் 434 ஆண்டுகளாகும் என்பதைக் கண்டு கொண்டீர்களா? அந்த அறுபத்தியொன்பது வாரங்கள் என்பது 483 ஆண்டுகளாகும் என்பதை கண்டு கொண்டீர்களா? அது என்ன? மேசியா சங்கரிக் கப்படுகிற காலம் வரையிலும் உள்ளது 483 ஆண்டுகளாகும். முடிவாக தேவன் கூறின இடத்திற்கு அவர்கள் போய்ச் சேர நாற்பத்தாண்டுகள் பிடித்தது. புறஜாதிகளின் காலமானது எங்கே கடந்து வரும் என்றும், அது எவ்வாறு இருக்கும் என்றும், இந்தக் கடைசி காலம் வரையிலும் அது எவ்வாறு வரும் என்றும், வேதம் கூறி யுள்ளதை இங்கே கவனியுங்கள். அது எவ்வாறு இருக்கும் என்று நாம் கூறுவதின்படியல்ல, வேதம் கூறுகிறபடியே அது இருக்கிறது. கடந்த நாற்பதாண்டுக் காலமாக யூதர்கள் தாங்கள் சுயதேசத்திற்கு திரும்பி வந்து, தேவன் அவர்கள் மத்தியில் அப்போது என்ன செய்தாரோ அதே காரியத்தை இப்போதும் அவர் செய்வதற்கு ஆயத்தமாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்த வழியாகப் போனார்களோ, அதே வழியாக திரும்பி வந்திருக்கிறார்கள். இஸ்ரவேலானது தனது சுயதேசத் திற்குள் வந்திருக்கிறாள். 84இந்தக் கடைசி வாரத்தை தேவன் எப்போது ஆரம்பிக்கப் போகிறார்? எப்பொழுது, அது இன்றைக்காகக் கூட இருக்க வியந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் சில நிமிடங்களுக்குள் ஒரு விஷயத்தை இங்கே கொண்டு வரப்போகிறேன். நீங்கள் விசுவாசிப் பீர்களோ அல்லது விசுவாசிக்கமாட்டீர்க ளோ என்று எனக்குத் தெரியாது. ஆனால் எவ்வாறாயினும் நான் அதைக் கூறியே ஆகவேண்டும். நாம் நமது சுயதேசத்திலே இருக்கிறோம். யூதர்கள் தங்களது சுயதேசத்திலே இருக்கிறார்கள். நாம் காலத்தின் முடிவில் வந்து, எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக ஆயத்தமாயிருக்கிறோம். எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழும்போது, சபையானது மேலே செல்லும், அவரை ஆகாயத்தில் சந்திப்பதற்காக நாம் எடுத்துக் கொள்ளப்படுவோம். நாம் யாவரும் அதை அறிவோம். மலையிலிருந்து பெயர்ந்து இருக்கும் கல்லானது எந்த சமயத்திலும் வருதற்காக ஆயத்தமாயுள்ளது. அது வருகையில், அது என்ன செய்கிறது? அது புறஜாதிகளின் காலத்தை முடிவடையச் செய்கிறது. அப்போது எல்லாம் முடிவடைகிறது. தேவன் அவர்களோடு இடைபடுவதை நிறுத்திவிடுகிறார். “அசுத்த மாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், பரிசுத்த முள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.' புரிந்து கொண்டீர் களா? அப்போது அவர் என்ன செய்கிறார்? அவர் பரிசுத்த ஆவியால் நிரம்பப் பெற்ற தமது சபையை எடுத்துக் கொள்ளு கிறார். அசுத்தமாயிருப்பது எது? அவர்கள் நித்திரை செய்யும் புத்தியில்லாத அக்கன்னியர், அவர்கள் இங்கே நியாயத்தீர்ப்புக் கென்று வருகிறார்கள். (இச்செய்தியை தொடரும் போது, அதைப்பற்றி இன்னொரு வரைபடத்தின் மூலம் பார்ப்போம்). அவர்கள் அங்கே வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு முன்பாக வருகிறார்கள். அவர்கள் மீட்கப்பட்டோரால் நியாயந் தீர்க்கப்படுவர். பரிசுத்தவான்கள் பூமியை நியாயந்தீர்க்கப் போகிறபடியினால், நாம் நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடாது என்று பவுல் நமக்கு கூறியுள்ளார். அது சரிதான். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். இப்போது சரியாக அப்படித்தான் இருக்கிறது. 85இந்த வாரத்தின் மத்தியில்.... இப்போது. இங்கே இந்த எழுபது... இந்த வாரங்களிலே, ஒவ்வொரு வாரமும் ஏழு ஆண்டுகளைக் குறிக்கிறதென்றால், நமக்கு ஏற்கனவே அறுபத் தொன்பது வாரங்கள் முடிந்து விட்டன, நமக்கு புறஜாதிகளின் காலம் உண்டாயிருந்து அதனுடைய முடிவுக் காலத்தில் நாம் இருந்துகொண்டிருக்கிறோம். பிறகு, யூதர்களுக்கு இன்னும் ஒரு வாரம் மீதமிருக்கிறது. அது சரிதானே? அது சரியாக ஏழு ஆண்டுகள் காலமாகும். இது ஏழு ஆண்டுகள் என்றால், இங்கே இது ஏழு வருடங்கள்தான். ஏனெனில் “உன் ஜனங்கள் மேல் எழுதுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது'' என்று கூறினார். ஆகவே, யூதர்களுக்கு இன்னும் ஏழு வாரங்கள் உள்ளன என்பதை நாம் அறிவோம். அது உண்மைதானே? இப் பொழுது அதை நோக்கிப் பாருங்கள். ஒரு கேள்வி உண்டாக்கிற தென்றால், அதை நான் அறிய விரும்புகிறேன். யூதர்களுக்குரிய இந்த வாரங்களின் மத்தியிலே, அது மூன்றரை வருட காலமாகும்; அதிபதியாகிய அந்திக் கிறிஸ்து வரவேண்டும். அவன் ரோமாபுரியிலிருந்து வருகிறான் என் பதை நினைவில் கொள்ளுங்கள். வரவேண்டியவனாகிய அதிபதி. அவன் யார்? ஒரு போப். ஜனங்களின் அதிபதியாயிருப்பவன்; அவன் வரவேண்டியுள்ளது. யோசேப்பை அறியாத பார்வோன் ஒருவன் வரவேண்டும். 86ப்ராடெஸ்டெண்டுகளே, 'நல்லது, அப்படித்தான் இருக்கிறது'' என்கிறீர்கள். ஆனால் சற்று ஒரு நிமிடம் பொறுங் கள். ப்ராடெஸ்டெண்டுகளுக்கு ஒரு மதஸ்தாபனம் உள்ளது, அதினால் அவர்கள் சபைகளின் சமஷ்டி அல்லது கூட்ட மைப்பை ஏற்படுத்திக் கொண்டு, அதின் மூலம் மிருகத்திற்கு ஒரு சொருபத்தை உண்டாக்கி அதனுடன் செல்லுகிறார்கள். நாம் இங்கே காண்பதென்னவெனில், யூதர்களும் கூட அந்த சமஷ்டி அமைப்பிற்குள் வந்து சேருமாறு அழைக்கப்படுகின்றனர். ஆம் ஐயா! அவர்கள் உடன்படுகிறார்கள். வேதாகமம் அவர்கள் அவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளது. அவன் அவர்களோடு ஒரு உடன்படிக்கையை செய்து, எழுபதாவது வாரத்தின் பாதி செல்லும்போது, யூதர்களோடு அந்த அந்திகிறிஸ்து செய்து கொள்ளும் உடன்படிக்கையை முறித்துப் போட்டு விடுகிறான். “உன் ஜனங்கள்'' ஏன்? வெளிப் படுத்தின விசேஷம் 11ம் அதிகாரத்தில் நீங்கள் வாசித்தால், அதில் அவர் இரண்டு தீர்க்கதரிசிகளை அனுப்புவதாக கூறியுள் ளார். அவர்கள் அந்த காலத்தில் தீர்க்கதரிசனம் உரைப் பார்கள். அது 11- ம் அதிகாரம். இப்பொழுது 19 வரையிலும் நீங்கள் வரு கிறீர்கள். இவ்விரு தீர்க்கதரிசிகளின் மேலும் அவர்கள் கோப மடைந்து, அவர்களை உண்மையிலேயே கொன்று விடுவார்கள். அது சரிதானே? அவர்களது மரித்த சரீரங்கள் ஆவிக்குரிய பிரகாரமாக சோதோம் கொமோரா என்றழைக்கப்படுவதும், நமது கர்த்தர் சிலுவையில் அறையப் பட்டதுமான எருசலே மின் தெருவில் கிடக்கும். அது சரிதானே. அவர்களது சரீரங்கள் மூன்று பகலும், மூன்று இரவும் அங்கே கிடக்கும். அதற்கு பிறகு, அவர்களுக்குள் ஜீவ ஆவியானது பிரவேசித்து, அவர் கள் எழுந்து மகிமைக்குள் போய்விடு வார்கள். நகரத்தின் பத்தி லொரு பங்கு அச்சமயத்தில் வீழ்ந்திடும். அது சரிதானே? அது என்ன? எழுபதாவது வாரத்தின் மத்தியிலே அது நடக்கும். 87சபையானது உன்னதத்திற்கு போய்விட்ட பிறகு, அப் போது, இந்த சபைகளின் சமஷ்டி அமைப்பானது - அது நித்திரை செய்யும் புத்தியில்லாத கன்னியரைக் கொண்டதாகும் - மெதோடிஸ்ட்டுகள், பாப்டிஸ்ட்டுகள், ப்ரெஸ்பிட்டீரியன்கள், அனலின்றி, வெதுவெதுப்பாயிருக்கும் பெந்தெகொஸ் தேயினர் ஆகிய இவர்களெல்லாரையும் ஒன்றாகக் கொண்ட சமஷ்டி அமைப்பாகும் இது. ஏற்கெனவே அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதை சாதிக்கும்போது, அவர்கள் இப்போது தங்களுடைய பெரிய ஆட்சியைக் கொண்டவர் களாக ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவார்கள். இப்போ திருக்கிற இந்தப் புதிய போப். அவர்கள் யாவரையும் ஒன்று சேர்க்க விரும்புகிறார். இப்போதே அது சம்பவிக்கத் தொடங்கி விட்டதை உங்களால் காணமுடியவில்லையா? நூற்றுக்கணக் கான ஆண்டுகளுக்குப் பிறகு, அல்லது ஆயிரக்கணக்கான, இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வளவு காலத்திலும் நடக்காதவண்ணம், அவர்கள் யாவரையும் ஒன்று சேர்ப்ப தற்காக, அதைக் குறித்த ஒரு உரையை அளிக்கவிருக்கிறார் இந்த போப். ஆனால் இப்போது, அவர் யாவரையும் ஒருங்கிணைத்து, ஒரு சமஷ்டி அமைப்பை ஏற்படுத்திடப் போகிறார். அதில் இணைந்து கொள்ள யூதர்களும் ஒத்துக்கொள்வார்கள். மகிமை! அல்லேலூயா! சதாகாலமும் ஜீவிக்கிற நமது தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அப்படித்தான் நடக்கபோகிறது. இப்போது, சகோதரனே, ஒரு சிறுவன் கூட அதைக் குறித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு அது எவ்வளவு எளிமையாக இருக்கிறது. அந்த சமஷ்டி அமைப் பானது, யூதர்களையும், ப்ராடெஸ்டெண்டுகளையும், கத்தோலிக் கரையும் ஒருங்கிணைக் கிறதாயிருக்கும். இதை நினைவில் கொள்ளுங்கள்... 88இவ்விரு தீர்க்கதரிசிகள் தோன்றும் பொழுது, இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? பரிசுத்த ஜனங்களின் வல்லமையை சிதறடிப்பவனாகிய இந்த மிருகமாகிய இந்த அதிபதியானவன், என்ன செய்வான்? அவன் மூன்றரை வருடங்களுக்குப் பிறகு அவர்களோடு உள்ள உடன்படிக் கையை முறித்துப் போடுவான். அவன் அவர்களைப் புறம் பாக்கிப் போடுவான். கம்யூனிஸம் அதைச் செய்யப் போகிறது என்று மக்கள் எண்ணுகிறார்கள். தேவ ஆவியானவர் அப்படி எண்ணுகிறவர்ளோடு இடைப்படவில்லை என்பதைக் காண்பிக்கிறது அது. கம்யூனிஸம் அல்ல, மார்க்க சம்மந்தமானதே அது. கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத் தக்கதாக அது அசலுக்கு மிக நெருக்கமாக இருக்கும் என்று வேதாகமும் கூறுகிறது. அவ்வாறிருக்கும் என்று இயேசு கூறினார். நாம் இறுதியான ஒன்றில் இருக்கிறோம். 89இவ்விரு சாட்சிகளும் என்ன செய்வார்கள்? காட்சியில் தோன்றப் போவது மோசேயும் எலியாவுமாகும். அவர்கள் அந்த யூதர்களிடம் அவர்களுடைய தவறுகளை எடுத்துச் சொல்லு வார்கள். இவ்விரு தீர்க்கதரிசிகளின் மூலமாகவும் தேவன் அந்த யூதர்களில் 1,44,000 பேர்களை அழைப்பார். இந்த புற ஜாதி சபையோடு முடிவடைகிற எலியாவின் ஆவியின் ஊழியம், தொடர்ந்து யூத சபையின் காலத்தினுள்ளும் சென்று, தன்னோடு சேர்ந்து கொள்ளும்படி மோசேயையும் அழைக்கும். அல்லே லூயா! அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? மேசியா வைப் புறக்கணித்தபோது அவர்களுக்கு அளிக்கப்பட்ட அதே பெந்தெ கொஸ்தே செய்தியைதான் அந்த யூதர்களுக்கு அவ்விரு தீர்க்க தரிசிகளும் பிரசங்கிக்கப்போகிறார்கள். ஆமென்! அதை நீங்கள் கண்டு கொண்டீர்களா? அதே பெந்தெகொஸ்தே செய்தியை தான் அந்த யூதர்கள் அவர்களுக்கு பிரசங்கிக்கப் போகிறார்கள். அவ்விரு யூதர்களையும் அவர்கள் மிகவும் பகைத்து அவர்கள் கொன்று விடும் அளவுக்குப் போய் விடுவார்கள். அவர்கள் சகல தேசத்தினராலும் பகைக்கப் படுவார்கள். வாரத்தின் மத்தியிலே - ஏனெனில் அவர்கள் ஒரு மகத்தான, வல்லமையான 1,44,000 பேர்களடங்கிய கூட்டத்தை எழும்பச் செய்திருக் கின்றனர். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தனர். சகோதரனே, அற்புதங்களை செய்தலைப் பற்றி பேசுவீர்கள். அவர்கள் அவைகளை செய்தனர். அவர்கள் வானங்களை அடைத்தனர். அதினால் அவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்த நாட்களெல்லாம் மழை பெய்யாதிருந்தது. அவர்கள் விரும்பிய போதெல்லாம் பூமியை வாதைகளால் அடித்தனர். அவர்கள் வாதைகள் முதலிய யாவற்றையும் கொடுத்தனர். அவர்கள் ரோமர்களுக்கு கடினமான வழியையே கொடுத்தனர். ஆனால் இறுதியாக அவர்கள் கொல்லப்படுவர். நம்முடைய தேவன் உக்கிரமாக இருக்கையில், அவர் பயங்கரமான தேவனாயிருக்கிறார். ஆனால், அது எழுபதாவது வாரத்தில் முடிவடைந்து விடுகிறது என்றும், சபையானது மகிமையில் இருக்கிறது என்பதையும் ஞாபகத்தில் கொள்ளுங்கள். ஆமென்! கலியாண விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆம்! இப்பொழுது கவனியுங்கள். யூதர்களுடைய காலத்தின் முடிவில், ஆயிரமாண்டு அரசாட்சிக் கால ஆலயத்துக்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் திரும்ப வருவதை நாம் அங்கே காண்கிறோம். இங்கே அவர் வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி வருகிறார். அவரைப் பின்பற்றுவோரும் வெள்ளைக் குதிரைகளின் மேல் ஏறி வருகிறார்கள். குதிரை என்பது வல்லமைகளைக் குறிக்கும். அவர் இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வெண்வஸ்திரம் தரிந்திருந்தார். தேவனுடைய வார்த்தை என்னும் நாமம் அவர் மேல் எழுதப்பட்டிருந்தது. அவர் மகத்துவமுள்ள ஜெய வீரராய் ஆயிர வருஷ அரசாட்சிக்காக ஆலயத்திற்கு வருகிறார். (ஆம் ஐயா!) மகிமை! அங்கே அந்த 1,44,000 பேர்களை சந்திக்கிறார். 90அந்த எழுபதாவது வாரத்திற்குப் பிறகு எழுபதாவது வாரம்.... இது எழுபதாவது வாரத்தில் நடைபெறுகிறது. அந்த வாரத்தின் மத்தியிலே அவன் உடன்படிக்கையை முறிக்கிறான். ஏனெனில் அவன் பூமியை வாதையால் அடித்த அந்த இரண்டு பெந்தெகொஸ்தே தீர்க்கதரிசிகளை கொலை செய்து விடுகிறான். (ஆம் ஐயா!) தம்பி, அவர் அந்த சபையை சபித்து, அவளை நெருப்பினால் சுட்டெரிக்கிறார். கப்பல் மாலுமிகளும் தூரத்தில் நின்று, “இந்த மகத்தான அழியாத நகரமாகிய ரோமாபுரி ஒரு நாழிகையிலே ஒழிந்து போனாளே'' என்று கதறுவார்கள் (வெளி. 18:18,19) அவள் வெடித்து சிதறிப் போவாள். காரியங் களை எவ்வாறு செய்வதென்பதை தேவன் அறிவார். தூதர்களில் ஒருவன் நோக்கிப் பார்த்து, ''கிறிஸ்துவுக்காக நின்றவர்களை அவள் கொலை செய்தாளே, அந்த இரத்த சாட்சிகளின் ஒவ்வொரு வருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது” என்று கூறினான். அவளுடைய வஞ்சனையானது எங்கும் பரவிச் சென்று, ஸ்தாபனத்தை உண்டாக்கி, சபையை எல்லாவித தீட்டினாலும் தீட்டுப்படுத்தி, தவறானவைகளை உள்ளே கொண்டு வந்து, சத்தியத்தை உறுதியாக கடைப்பிடித்த அவர்களை வெளியே கொண்டுவர முயன்றவர்களைக் கொலை செய்தது. மகிமை! ஓ, எனக்குக் தெரியாது. நான் பிரயாணம் செய்வதை போல் உணருகிறேன். 91சூரிய ஒளிக்காக நீங்கள் சந்தோஷமாக இருக்கவில்லையா? சூரிய ஒளியில் நடக்கிறோம். சகோதரரே, நாம் எங்கே இருக்கிறோம்? அது எந்த வேளையிலும் சம்பவிக்கும். நாம் இதோ இங்கே இருக்கிறோம். கடைசியாயுள்ள சபைக்கு செய்தியானது புறப்பட்டுப் போய்விட்டது. சபையானது தனது கிறிஸ்துவை புறக்கணித்து விட்டது நாற்பதாண்டுக் காலமாக யூதர்கள் தங்களுடைய சுய தேசத்திலே வந்து சேர்ந்திருக்கிறார்கள். புதிய நகரமானது கட்டப்பட்டுவிட்டது. அவர்கள் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? மேசியா வரப்போவதைத்தான். அது எப்போது இருக்கும்? எனக்கு தெரியாது. அந்தக் கல்லானது அந்த சிலையை அடிக்கும் போது, அவள் போய்விடுவாள். அப்போது யாவும் முடிவு பெற்றுவிடும். வாரத்தின் மத்தியிலே - அது மூன்றரை நாட்களாகும்அல்லது மூன்றரை வருடங்களாகும், அவன் உடன்படிக்கையை முறித்து, அவர்கள் ஏற்கெனவே ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பலியையும் காணிக்கையையும் ஒழியப் பண்ணுவான். ஏனெனில் அவர்கள் திரும்பிச் சென்று, “இப்பொழுது பாருங்கள், நீங்கள் யாவரும் சபைகளாயிருக்கிறீர்கள்; மிருகத்தினிட மாக இந்த சொரூபத்தின் வாயிலாக நீங்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியும். நாம் ஐக்கியம் கொள்ளுவோம்; நாம் கம்யூனிஸத் திலிருந்து விடுபடுவோமாக. கம்யூனிஸத்தையே ஒழித்துக் கட்டிவிடுவோம்'' என்று கூறுவார்கள். அவர்களால் அதைச் செய்ய முடியும். கண்டு கொண்டீர்களா? அவர்கள் அதைச் செய்துவிடுவார்கள். ஆனால் இப்பொழுது கவனியுங்கள். ஆலயமானது திரும்பக் கட்டப்படுகையில் அன்றாடக பலி நகரத்தில் ஏற்படுத்தப்படும். வரப்போகிற ஜனத்தின் அதிபதியானவன், வாரத்தின் நடுவிலே வருவான், அவன் உடன்படிக்கையை முறிப்பான், பலியையும் ஒழியப்பண்ணுவான். நான் கூறின பிரகாரமாக, அவன் அதைச் சிதறடிப்பான், அவன் செய்வதெதுவோ, அது முடிவு மட்டும் நீடித்திருக்கும். 92பரவப்போகும் பாழாக்கும் அருவருப்பைக் குறித்து கவனியுங்கள், அருவருப்பு பரவுதல். அருவருப்பு என்றால் என்ன? 'அசுத்தம்' என்பதாகும். பாழ்கடிப்பு உண்டாகுதல்- அதன் அர்த்தம் என்ன? 'அதற்கு முடிவுண்டாகுதல்' என்பதாகும். அது எங்கும் பறந்து அதற்கு முடிவு உண்டாக்குதல் என்பதாகும். நித்திரை செய்யும் புத்தியில்லாத கன்னியர், யூதர்கள் ஆகிய யாவரையும் மேற்கொண்டு ஜெயிக்கும். ரோமாபுரியின் வல்லமை எங்கும் பரந்து விரிதல் உண்டாகும். நாம் யாவரும் ரோமாபுரியைச் சார்ந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் நாம் ஒன்றும் இல்லாமற் போய் விடுவோம் என்பார்கள். அவன் வாரத்தின் மத்தியிலே உடன்படிக்கையை முறித்துப் போடுவான். அருவருப்பு எங்கும் பரந்து விரிவடைதல்... இயேசுவின் காலத்தில் அங்கே தனது பிரச்சார முழக்கதோடு ரோமாபுரி யானது இருந்திருக்கிறதென்றால், மீண்டும் வரப்போவது ரோமாபுரியேயாகும். சபைக்கு அருவருப்பை மீண்டும் கொண்டு வருவது அதுதான். அது பாழாக்கப்படுகிறவரை யிலும் முடிவுவரையிலும் அது அங்கே இருந்து கொண்டுதான் இருக்கும். அவன் என்ன செய்வான்? அவன் தனது செயலை முடிவுபரியந்தம் செய்துகொண்டுதான் இருப்பான். அப்போது முடிவு வரும். 93யூத மார்க்கம், ரோம மார்க்கம், ப்ராடெஸ்டெண்ட் மார்க்கம் ஆகியவைதான் நித்திரை செய்யும் புத்தியில்லாத கன்னியர் ஆவர்; அவர்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு சபைகளின் சமஷ்டி சங்கமாக ஆகிவிடுவார்கள். அது இயேசு மத்தேயு 24-இல் கூறியது போலவும், வெளிப்படுத்தின விசேஷம் 13:14-இல் கூறப்பட்டுள்ளது போலவும் இருக்கும். நாம் இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 13:14ஐ எடுத்துக் கொள்வோம். எவ்வாறு அது இருக்கிறது என்பதைக் காண் போம். நான் அது என்ன என்பதைக் குறித்து கண்டறிவதற்காக இங்கே குறித்து வைத்துள்ளேன். வெளி 13:14 நல்லது, அது சரி, ஐயா. மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே... (தனது சபைகளை அவன் ஒருங்கிணைத்துக்கொள்ளுவான்)... பூமியின் குடிகளை மோசம் போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ண வேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல் லிற்று. வெளி.13:14 அந்த மிருகம் யார் என்பதையும், சாவுக்கேதுவாகக் காயப் பட்டு பிழைத்த அந்த மிருகத்தினுடைய வல்லமை இன்ன தென்பதையும் பற்றி சந்தேகத்தின் நிழல் ஏதுமின்றி நாம் நன்று அறிவோம். காயப்பட்ட அம்மிருகம் அஞ்ஞான ரோமாபுரி தான் என்பதையும், அதாவது அஞ்ஞான ரோமாபுரியில், சத்து வமானது அழிக்கப்பட்ட போது, போப்பு மார்க்க ரோமாபுரி யானது அதனுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டு, அவ்வித மாக காயப்பட்ட அம்மிருகமானது மீண்டும் பிழைத்தது. 94இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 13:14.இயேசு மத்தேயு 24ம் அதிகாரத்தில் அவர்களை அதைக் குறித்து எச்சரித்தார். “மிருகத்திற்கு ஒரு சொரூபம் செய்யப்படுதல்” தெசலோனிக்கேயர் 2ம் அதிகாரத்தில் 3,4 ஆகிய வசனங் களிலே பவுலும் கூறுகிறான். நாம் அதை எடுத்துக் கொள்வோம். அங்கே பவுல் என்ன கூறுகிறான் என்பதை நாம் காண்போமாக. மகத்தான பரிசுத்த ஆவியானவர், இங்கே கர்த்தருடைய இந்த மகத்தான தீர்க்கதரிசியின் மேல் இருந்தவர், என்ன கூறுகிறார் இந்தக் கடைசி சாட்சிகளைப் பற்றி என்பதை நாம் பார்ப் போமாக. 2 தெசலோனிக்கேயர் 2ம் அதிகாரத்திலிருந்துதான் அது கூறப்பட்டுள்ளது. நல்லது ஐயா. நம் வசனத்திலிருந்து துவங்குவோமாக. அந்த வசனம் தான் என்று நான் நினைக் கிறேன். நல்லது, இப்பொழுது நாம் அதை வாசிப்போமாக. யாவரும் மிகவும் கவனமாகக் கேளுங்கள். பவுல் பரிசுத்த ஆவியால் நிரப்பட்டவனாக இருந்தான் என்பதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? இங்கே கவனியுங்கள். ''எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம் போக்காத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுசவாச துரோகம் முந்தி நேரிட்டு... (அப்பொழுதே கர்த்தர் வரப் போகிறார் என்ற தவறான கருத்தை அவர்களுடைய சிந்தையை விட்டு அகற்ற பவுல் அங்கே முயன்று, இந்த கடைசி கால சபையாகிய லவோதிக் கேயாவின் காலத்தில் தான் விசுவாச துரோகம் நேரிடும் என்றும், முதலாவதாக விசுவாச துரோகம்தான் நேரிட வேண்டும் என்றும் அவன் கூறுகிறான்)... கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது (பாவ மனுஷன் - பரிசுத்த ஆவியின் பேரில் அவிசுவாசங் கொண் டவன் - அவிசுவாசம் - யூதாஸைப் போல சபையின் பொக் கிஷதாரி). அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெ துவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிற வனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல் உட்கார்ந்து தன்னைத் தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்...... (சகோதரனே! அது வாடிகனில் உள்ளவனைத் தவிர இந்தப் பூமியில் வேறே யாராவது எங்காவது அவ்வாறு செய்கிறவன் இருக்கிறானா?) (2 தெச 2:3-4). 95இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 13ம் அதி காரத்தை எடுத்துக்கொண்டு, அங்கே அந்த மனிதன் ஏழு மலை களின் மேல் உள்ள ஒரு நகரத்தில் வீற்றிருக்கிறான் என்பதைக் காண்பிப்பேன். அந்த மிருகத்தின் இலக்கமாகிய 666 இலத்தீன் பாஷையில் எழுதப்பட்டுள்ளது. அது ரோம பாஷையில் அகர வரிசையில் 666 என்ற இலக்கத்தைக் கொண்டதாக, ''வைகாரியஸ் ஃபிலியை டியை'' (Vicarius Felei Dei) என்பதாக உள்ளது. அதற்கு 'தேவ குமாரனுக்கு பதிலாள்'' என்று அர்த்தமாம். இவ்வாறு போப்பின் சிம்மாசனத்தில், முக்கூறான கீரிடத்தில் எழுதப்பட்டுள்ளது. போப்புக்கு ஒரு முக்கூறான கிரீடம் உள்ளது. இதோ என்னுடைய கரமானது எவ்வாறு என் முகத் திற்கு மிக அருகாமையில் உள்ளதோ அந்த அளவு நெருக்கமாக நின்று நானே அந்த கிரீடத்தை பார்த்திருக்கிறேன். வாடிகனில் நானே போப்பின் அந்த அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தை, நான் அதைப் பற்றி என்ன சொல்லிக்கொண்டிருந்தேனோ அதை உறுதி செய்து கொள்ளத்தக்கதாக கவனித்துப் பார்த்தேன். அவன் எதிர்த்து நிற்கிறவனாகவும், தேவனென்னப்படுவதெ துவோ அதற்கெல்லாம் மேலாக அவன் தன்னை உயர்த்திக் கொள் கிறவனாயும், தேவ மனிதருக்கெல்லாம் மேலாக தன்னை உயர்த் திக் கொள்கிறவனாயும் இருப்பான். அவன் தன்னை யாவருக்கும் மேலாக பரிசுத்தவானாகக் காண்பித்துக் கொள் கிறான். அவன் தன்னைத் தேவன் என்று காண்பித்துக் கொண்டு தேவாலயத்தில் உட்கார்ந்திருக்கிறவனாயும், பூமியில் பாவங் களை மன்னிக்கிறவன் போல் காண்பித்துக்கொண்டு இருக்கிறான். நிச்சயமாக அப்படித்தான் செய்கிறான். 96விசுவாசத் துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் வெளிப்பட வேண்டும் என்று பவுல் கூறினான். நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா? தெச. 2:5. அதைக்குறித்து பவுல் அந்நாளிலே பிரசங்கித்தபோது நானும் அங்கே அமர்ந்திருந்து அதைக் கேட்க விரும்புவேனே. நீங்கள் அவ்வாறு விரும்பமாட்டீர்களா? ஓ, நானும் அவன் பிரசங்கத்தை கேட்க எவ்வளவாய் விரும்புவேன்! இப்போது அவன் என்ன செய்யப் போகிறான்? மிருகத் திற்கு ஒரு சொரூபம் செய்ய வேண்டும் என்பான். 2 தெசலோ னிக்கேயர். இப்பொழுது கேளுங்கள். இப்போது மிகவும் கவனமாக செவிகொடுங்கள். ஒரு போப் வருவதைக் குறித்து சபையானது ஏற்கெனவே உணர்ந்து கொண்டிருந்தது. அது என்ன? அதுதான் அந்த சபைக் காலத்தின் முடிவாகும்பவுலுடைய இந்த நிக்கொலாய் மதஸ்தருடைய போதகமானது எழும்பி வருவதை அவர்கள் அந்நாளிலேயே கண்டார்கள். அவர்கள் ஒரு பரிசுத்த மனிதனை தங்களுக்கென உண்டாக்கிப் கொள்வதையும் கண்டார்கள். எதற்காக? போப்பைத்தான். லௌகீகமும் பேரறிவாளர்களும் சபைக்குள் ஊடுருவி, ஆராதனை முறைமைகளை மாற்றிக்கொண்டிருந்தனர். பரிசுத்த ஆவியைப் பெற்ற பவுல் அதைப் பற்றி ஆவியில் கண்டு கொண்டான். புலமை வாய்ந்த கலைஞர்களையும், மதிப்பு மிக்க பிரமுகர்களையும் சபையானது தன்னிடம் கொண்டதாய் இருந் தது. ஒருவிதமான காரியம் வருவதை அவர்கள் கண்டார்கள். பரிசுத்த ஆவியானவர் கடைசி நாட்களைக் குறித்து அவர்களை எச்சரித்தார். நிக்கொலாய் மதஸ்தருடைய கிரியைகள் எவ்வாறு இறுதியில் ஒருபோதகமாக மாறும் என்றும், பிறகு ஒரு ஸ்தாபனமாக மாறும் என்றும் இயேசு கூறியது உங்களுக்கு நினை வில்லையா? சகோதரரே, நாம் இப்போது இருளில் இருக்க வில்லை என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள். புரிந்து கொண் டீர்களா? இதோ நாம் அந்தக் கட்டத்தில் இங்கே இருக்கிறோம். 97நிக்கொலாய் மதஸ்தருடைய கிரியைகள், பிறகு ஸ்தாப னமாக ஆயிற்று. பெரிய முக்கிய பிரமுகர்கள் சபையை மேற்கொண்டார்கள், பிறகு கத்தோலிக்க சபையை உருவாக் கினார்கள். உண்மையான பெந்தெகொஸ்தே விசுவாசத்தை விட்டு வழுவிப்போகுதல் முந்தி உண்டாயிராமல் முடிவு காலம் வந்திடாது என்று பவுல் கூறினான். பெந்தெகொஸ்தே விசுவாசம் ஒழிக்கப்பட்டு, உலகப்பிரகாரமான முக்கிய பிரமுகர்கள் சபையைக் கைப்பற்றிக்கொள்ளுவார்கள். தேவனுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ளுகிறவனாயும், தேவாலயத்தில் உட்கார்ந்து இருக்கிறவனாயும், எல்லா ஜனங்களையும் எதிர்த்து நிற்கிறவனாயும், இருக்கக்கூடிய ஒரு மனிதனை அவர்கள் உடையவர்களாயிருப்பார்கள். அது என்ன என்பதை பாருங்கள். நிக்கோ, ''சபையை மேற்கொள்ளுதல்' தேவனென்னப்படு தெதுவோ அதற்கு மேலாக தன்னை உயர்த்திக்கொள்ளுகிற வனாயும், தேவாலயத்தில் தேவன் போல் உட்கார்ந்திருக் கிறவனாயும் அவன் இருப்பான். கடைசி நாட்களிலே விசுவாசத் துரோகம் முந்தி நேரிடும் என்று பவுல் கூறினான். அந்தக் குறிப்பிட்ட காலத்தில் இங்கே நாம் இப்போது இருக்கிறோம். விசுவாசத் துரோகம் நேரிடுவதையும் காண்கிறோம், சபை யானது இன்னும் அதிகமதிகமாக வழுவி விலகிப் போய்க் கொண்டேயிருப்பதையும் காண்கிறோம். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். 98இப்போது, இந்த அறுபத்தொன்பது வாரங்கள் சரியாக கணக்குப்படி நிறைவேறிவிட்டது என்றால், யூதர்கள் இப்போது தங்களுடைய சுயதேசத்தில் இருக்கிறார்களென்றால், புறஜாதி சபையானது சரியாக கடைசி காலத்தில், இந்த நிக்கொலாய் மதஸ்தருடைய காலத்தை அல்லது லவோதிக்கேயாவின் காலத்தை வந்தெட்டியிருக்கிறது என்றால், கர்த்தருடைய வருகைக்கும் யாவற்றின் முடிவுக்கும், இந்த யுகத்தின் முடி வுக்கும், எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு எவ்வளவு சமீபமாய் நாம் வந்துள்ளோம்? எழுபதாவது வாரத்தை, அல்லது அந்த ஏழு ஆண்டுகளை அவர் எப்போதும் துவக்கப் போகிறாரோ, அந்த க்ஷணமே சபையானது மகிமைக்குள் போய்விடும். சிநேகிதரே, உங்களால் அதைக் காண முடிகிறதா? அதை உங்களால் காண முடிந்திருக்கிறதென்றால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள் பார்க்கலாம். நாம் இனிமேலும் குழந்தைகளாயிருக்க வேண்டாம். இனி மேலும் நாம் விளையாடிக் கொண்டிருக்க வேண்டாம். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். ஏதோ ஒன்று நடக்கப் போகி றது. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். அந்த வேளைக்குள் இங்கே நாம் வந்து விட்டோம். 99இந்த அறுபத்தொன்பது வாரங்கள் சரியாக நிறைவேறி விட்டன. யூதர்கள் திரும்பிப் போவது சரியாக நிறைவேறி விட்டது. சபைக் காலங்கள் சரியாக நிறைவேறிவிட்டன. நாம் முடிவுக் காலத்தில் இருக்கிறோம். லவோதிக்கேயா சபையின் காலத்தின் முடிவில் வந்துவிட்டோம். நட்சத்திர செய்தியாளர் கள் - தூதர்கள் யாவரும் தங்களுடைய செய்தியைப் பிரசங்கித்து விட்டனர். அது புறப்பட்டுச் சென்றுவிட்டது. நாம் கரையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். கடந்த நாற்பதாண்டுக் காலமாக யூதர்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய சுயதேசத்தில் இருக்கிறார்கள். அடுத்து என்ன சம்பவிக்க வேண்டும்? கல்லானது வரவேண்டியதா யிருக்கிறது. அந்தக் கட்டத்தில் நாம் இருக்கிறோம். அது எந்த சமயத்தில் சம்பவிக்கும்? எனக்குத் தெரியாது. ஆனால், சகோத ரனே, என்னைப் பொருத்தமட்டில், நான் ஆயத்தமாயிருக்க வேண்டுமென விரும்புகிறேன். என்னுடைய வஸ்திரங்கள் யாவும் ஆயத்தமாக இருக்க நான் விரும்புகிறேன். இப்போது நமக்கு இன்னும் சில நிமிடங்கள் மாத்திரமே உள்ளன. சற்று ஒரு நிமிட நேர நீங்கள் அமைதியாக செவி கொடுக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். எழுபதாவது வாரத்தை, அல்லது கடைசி ஏழு ஆண்டுகளை, அவர் துவங்கும் அந்த க்ஷணமே சபையானது போய்விடும். இப்பொழுது செவி கொடுங்கள். நான் இப்போது, மீண்டும் மேற்கோள் காட்டு கிறேன். நீங்கள் மறக்காமலிருக்கும்படியாக. நான் எழுதிக் கொண்டிருக்கையில், இதைத்தான் பரிசுத்த ஆவியானவர் என்னுடைய பேனாவைப் பிடித்து எழுத வைத்தார். நாம் லவோதிக்கேயாவின் காலத்தில் இருக்கிறோம். கிறிஸ்துவான வர் தமது சொந்த சபையாலேயே புறக்கணிக்கப்பட்டு விட்டார். இக்காலத்தின் நட்சத்திரத்தின் செய்தியானது புறப்பட்டு போய் விட்டது. இஸ்ரவேல் தனது சொந்த தேசத்திற்குள் வந்து விட்டாள். நாம் எங்கே இருக்கிறோம் என்பதை கண்டீர்களா? நாம் முடிவில் இருக்கிறோம். இன்னும் ஒன்றிரண்டு விளக் கங்கள். 100இப்போது நாம் காண்கிறயாவும், அவருடைய கிருபை னாலே, கடைசியான இந்த ஏழு முத்திரைகளை நாம் அணுக நாம் நன்முயற்சி செய்கையில், நமக்கு உதவி செய்திடும். அதை நாம் எங்கே காணத் தவறிவிட்டோம்? வெளிப்படுத்தின விசேஷம் 6:1 முதல், வெளிப்படுத்தின விசேஷம் 19:21 வரையிலும் உள்ள வைகளில் நாம் அதை இழந்து விட்டிருப்போம். ஏனெனில், நாம் அதை இங்கே புறஜாதிகளின் காலத்தோடு சம்மந்தப் படுத்த முயற்சி செய்து கொண்டிருந்ததால் தான். புறஜாதிகளின் காலம் இந்தக் காலத்துடன் முடிந்து விடுகிறது. கவனித்தீர்களா? நாம் அதை, தேவனுடைய வார்த்தையைக் கொண்டும், வரலாற் றைக் கொண்டும், யாவற்றைக்கொண்டும், காலங்களின் அடையாளங்களைக் கொண்டும், நாட்களைக்கொண்டும், நிரூபித் திருக்கிறோம். இனிமேலும் சம்பவிப்பதற்கு வேறொன்றும் இல்லை. நாம் புறஜாதிகளின் காலத்தின் முடிவுக் கட்டத்தில் இருக்கிறோம். அதைக் குறித்து நாம் என்ன செய்யப்போகி றோம்? அது என்னுடைய ஆத்துமாவையும், உங்களுடைய ஆத்துமாவையும் பொறுத்தது; அது என்னுடைய ஜீவியத் தையும் உங்களுடைய ஜீவியத்தையும் பொறுத்ததாகும். நமது பிரியமுள்ளவர்களின் ஜீவியங்களுக்கு சம்மந்தமுள்ள தாகும் அது. நாம் மிகவும் அதிகமாக சீராட்டப்பட்டிருக் கிறோம். நமக்கு அநேகமாக காரியங்கள் சொகுசாக அமைந்து விட்டது. நாம் முன்னே செல்வோமாக. நீங்கள் நினைப்பதைவிட நேரம் பிந்திவிட்டது. இதை ஞாபகத்தில் கொள்ளுங்கள். 101நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால், இப்பொழுது கவனத்தை ஈர்க்கிற ஒரு அறிக்கை இதோ. தயவு செய்து மிகவும் கவனமாக கேளுங்கள். இது என்னுடைய இறுதியான கருத்து, அதற்கு அடுத்ததாக, ஒரு சிறு குறிப்பின் பேரில் நான் பேச விரும்புகிறேன். சற்று ஒரு கணம் இளைப்பாறிக்கொண்டு, கவன மாக செவிகொடுங்கள். இதற்கு சம்மந்தமுள்ள கவனத்தை ஈர்க்கிற ஒரு விஷயத்தை நான் உங்களுக்குக் கொடுக்கப் போகி றேன். இக்காலத்தின் முடிவுக்கும், கிறிஸ்துவின் வருகைக்கும் இடையில், ஒரு கத்தியின் முனையில் அகலம் கூட இல்லை யாவும்... இனிமேல் வேறொன்றும் இல்லை. இஸ்ரவேல் தனது சுயதேசத்தில் வந்து சேர்ந்துவிட்டதா? அதை நாம் அறிவோம். நாம் லவோதிக்கேயாவின் காலத்தில் இருக்கிறோமா? இந்த பெந்தெகொஸ்தே யுகத்தின் செய்தியானது மக்களை மீண்டும் மூல பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்திற்கு திரும்ப கொண்டு வரத்தக்கதாக அசைத்துள்ளதா? ஒவ்வொரு காலத்தின் செய்தி யாளனும் சரியாக அவரவர் காலத்திலே வந்துவிட்டனரா? தேசங்களுக்கு விரோதமாக தேசங்கள் உள்ளனவா? வாதைகளா? தேசத்தில் இன்றைக்கு பஞ்சம் இருப்பதால், உண்மை யான சபையானது தேவனுடைய வார்த்தையைக் கேட்பதற் கென நூற்றுக்கணக்கான மைல்கள் தூரம் பிரயாணம் செய்து வந்து கொண்டிருக்கிறதா? அப்பத்திற்காக மாத்திரமல்ல, தேவனுடைய வார்த்தையை கேட்பதற்கான பஞ்சமானது ஏற்படும். அப்படித்தானே நடக்கும்? ஏன் அப்படிபட்டதான காலத்தினுள்ளே சரியாக நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிறோம். நாம் எங்கே இருக்கிறோம் என்பதைக் காணுங்கள். அந்தக் கல் வருவதற்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். 102கவனத்தை ஈர்க்கிற ஒரு அறிக்கை: ஆபிரகாமுக்கு தேவன் வாக்குரைத்த காலத்திலிருந்து, (இதைகாணத் தவற வேண் டாம்) ஆபிரகாமுக்கு தேவன் வாக்குரைத்த சமயம் முதற்குஅது ஆதியாகமம் 12:3 - யூதர்களால் கிறிஸ்து கி.பி.33-ல் புறக்கணிக்கப்பட்டது வரையிலும், கலாத்தியர் 3:16,17 வசனங்களின்படியும், அஷர் (Usher) என்பவரின் காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டு எழுதப்பட்ட எபிரேயர்களைப் பற்றி சம்பவங்களின் குறிப்பேட்டின் (கால வர்த்தமானக் குறிப்பு - தமிழாக்கியோன்) படியும் யூதர்களோடு தேவனுடைய வல்ல மையானது சரியாக 1954 ஆண்டுக் காலம் இருக்கிறது. யூதர்களைப் பற்றி உள்ள கால வர்த்தமானக் குறிப்பின்படியும் கலாத்தியர், 3:16,17 இன்படியும், தேவன் யூதரோடு 1954 ஆண்டுக் காலம் இடைப்பட்டிருக்கிறார். மேற்படி வசனமல்லாமல் இன்னும் அநேகம் வேத வாக்கியங்களை நான் குறித்து வைத்துள்ளேன். ஆனால் இவ்வசனத்தை மாத்திரம் தருகிறேன். அவர்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்த பிறகு, அவர் தமது நாமத்திற்கென ஒரு கூட்டம் ஜனத்தை தெரிந்தெடுப்பதற்காக புறஜாதிகளிடமாகத் திரும்பினார். அதைப் பற்றி கூறுகிற வேத வாக்கியம் உங்களுக்கு வேண்டுமா? அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகம் 15:14. 103காலத்தைக் கணக்கிடுவதினாலே, நமக்கு பதினேழு ஆண்டுகள் இன்னும் மீதியாக உள்ளன என்று நாம் காண்கிறோம். தேவன் அவர்களோடு இடைப்பட்ட கால வரையறைளவு 1954 ஆண்டுகள் ஆகும். கி.பி 33-முதல் கி.பி. 1977 முடிய உள்ள காலத்தில் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் தேவன் நம்மோடு இடைப்பட்ட கால அளவும் அதே அளவுதான். அதே காலவரையறைளவு 1954 ஆண்டுகள். தேவன் யூதரோடு இடைப்பட்டது போலவே நம்மோடு இடைபடுகிறார். அதைப் பற்றி என்ன? நான் உங்களுக்குக் கொடுக்க விரும்புகிற ஒரு சிறு வேதவாக்கியத்தை நீங்கள் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். லேவியராகமம் 25ம் அதிகாரம் 8ம் வசனம் தொடங்கி, தேவன் ஒவ்வொரு நாற்பத்தியொன்பது ஆண்டுகளின் முடிவிலும் ஒரு யூபிலியைக் கட்டளையிட்டார். ஐம்பதாவது ஆண்டிலே யூபிலியாக அது இருந்தது. அதை நாம் அறிவோம். லேவியராகமம் 25:8-இல் ஆரம்பித்த முதலாம் யூபிலி, 1977ம் ஆண்டில் எழுப தாம் யூபிலியாக இருக்கின்றது. அது சரியாக 3,430. ஆண்டுகள் கணக்காகிறது. யூபிலி என்றால், விடுவிக் கப்பட்டு போகுதல் என்று அர்த்தமாம். ஆனந்தமிகு ஆயிரமாண்டு அரசாட்சி நாளுக்காக நாம் காத்திருக்கிறோம் அப்போது துதிக்கப்பட்ட நமது கர்த்தரும் வந்து காத்து நிற்கும் மணவாட்டியை எடுத்துச்செல்வாரே ஓ, இனிமையான அவ்விடுதலையின் நாளுக்காய் உலகமானது ஏங்கித் தவிக்கிறது அந்நாளிலே நமது இரட்சகரும் பூமிக்கு மீண்டும் வருவாரே, 104அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? தேவன் ஆபிரகா முக்கு வாக்குக் கொடுத்த நாள் முதல், கி.பி. 33-இல் மேசியா புறக்கணிக்கப்பட்ட வரையிலும் உள்ள கால அளவு 1954 ஆண்டுக் காலமாகும். அதே அளவுக் காலம் தான் நம்மோடு தேவன் இடைபடுவதாக இருக்கும். நமக்கு இன்னும் பதினேழு ஆண்டுகளே உள்ளன. நமக்கு சுமார் 1930 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1977 வரையிலும் உள்ள காலத்திற்கு இன்னும் பதினேழு ஆண்டுகளே மீதம் உள்ளன. யூபிலி ஆண்டு தொடங் கியது முதற்கு, 77ம் ஆண்டில் எழுபதாவது யூபிலியாக இருக் கும். அப்போது அது என்னவாக இருக்கும்? ஓ, சகோதரனே! இப்போது கவனமாக விழித்திருங்கள். இதைத் காணத் தவற வேண்டாம். புறஜாதி மணவாட்டியோடு உன்னதத்திற்கு ஏறிச் செல்லும் யூபிலியாக அது இருக்கும்; கிறிஸ்து யூதரிடமாகத் திரும்பி வருதலாகவும் அது இருக்கும். அந்நாள் அவர்கள் தங் கள் கட்டிலிருந்து விடுபடும் நாள். ஆமென்! நீங்கள் அதைக் காணவில்லையா? அந்நாளுக்காகத்தான் அவர்கள் உலகின் எல்லாப் பாகங்களிலிருந்தும் அங்கே கூடியிருக்கிறார்கள். ஓ, என்னே! நாம் எங்கேயிருக்கிறோம் என்பதை கண்டு கொண் டீர்களா? எந்த நேரத்தில் அது சம்பவிக்கும் என்பதை நாம் அறியோம். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். 105இப்போது கவனியுங்கள். இந்த சபையில் நீண்ட கால மாக இருந்து வரும் பழம் பெரும் விசுவாசிகளே, உங்களுக்கு இதை நான் கூறுகிறேன். ஒரு காரியத்தை நீங்கள் கவனிக்கும் படி நான் விரும்புகிறேன். இதை நேற்று வரையிலும் நான் கற்றிருக்கவில்லை. பவுல் பாய்ட் என்ற வரலாற்றாசிரியர் எழுதினவைகளின் வாயிலாகவும், வேத வாக்கியங்களின் வாயிலாகவும் இதை நான் பெற்றுக் கொண்டேன். இங்கே வேறு சில தேதிகளைப் பற்றி குறிப்பை எடுத்து அவைகளை கருத்தாய் ஆராய்ந்து பார்த்தேன். 1933ஆம் ஆண்டிலே, நாங்கள் அந்த மேசன்களின் ஆலயத்தில் ஆராதனை நடத்திக்கொண்டிருந்தோம். அக்கட்டிடத்தில் இப்போது சர்ச் ஆஃப் கிரைஸ்ட் என்ற ஸ்தாபனம் உள்ளது. அது ஒரு ஏப்ரல் காலையாகும். நான் வீட்டை விடு வதற்கு முன்பு, எனது மோட்டார் வாகனம் ஒன்றை கர்த்த ருடைய ஊழியத்திற்கென்று பிரதிஷ்டை செய்து கொண்டி ருந்தேன். என்னிடம் இருந்தது 33ம் ஆண்டு மாடல் காராகும். அப்போது எனக்குக் கிடைத்த ஒரு தரிசனத்திலே முடிவு காலத்தைக் குறித்து கண்டேன். அது எவ்வளவாய் கவனத்தை கவருகிறதாக இருக்கிறது என்பதைப் பாருங்கள். அப்போதுள்ள அக்காலத்தில் நான் ஒரு இளைஞனாயிருந்தேன். 1933ம் வருட மாடல் கார் எப்படியிருந்திருக்கும் என்பதை நீங்கள் சற்று கற்பனை செய்து பாருங்கள். நான் அந்த மேசன்களின் ஆலயத்திற்கு சென்றேன். அங்கே... இங்கேயிருக்கும் பழங் காலத்தவருக்கு அது ஞாபகத்திலிருக்கும். வீட்டிலே ஒரு பழைய தாளிலே அது எழுதப்பட்டுள்ளது. அது ஏற்கெனவே அச்சாகி, உலகமெங்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. பார்த்தீர் களா? அது 1933ம் ஆண்டில் நடந்ததாகும். 1977 ஆம் ஆண்டுக்கு முன்பாகவோ அல்லது 1977ம் ஆண்டிலோ அமெரிக்காவுக்கு மிகவும் சோகமயமான காரியம் ஒன்று சம்பவிக்கும் என்று நான் அப்போது முன்னுரைத்தேன். அதை நான் கூறியதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? உயர்த்தப்பட்ட கரங்களை பாருங்கள். நிச்சயமாக. 106இந்த மகத்தான முடிவுக்காலம் ஏற்படும் முன்னர் அமெரிக் காவில் அந்த பயங்கரமான சம்பவம் நடைபெறு முன்னர், சம்பவிக்க வேண்டிய ஏழு காரியங்களைப் பற்றி நான் முன்னு ரைத்திருந்தேன். இப்போது கவனியுங்கள். நான் கூறினேன். இப்போது ஞாபகத்தில் கொள்ளுங்கள். அது துவங்குவதற்கு முன்பே, நாம் இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுவோம் என்றேன். அதைப் பற்றி நான் கூறியதை நினைவில் வைத்திருந்தவர்கள் “ஆமென்'' என்று கூறுங்கள் (சபையார் 'ஆமென்'' என்று பதிலளிக்கிறார்கள் - ஆசி). ஒரு இரண்டாம் உலக யுத்தம். நான் அப்போது கூறினேன். ”இப்போது இருக்கிற இந்த நமது ஜனாதிபதி - அவர் ப்ராங்களின் டி. ரூஸ்வெல்ட் ஆவார் (அது யார்; என்பதை எத்தனை பேர்கள் நினைவில் வைத்திருக்கிறீர் கள்?) அப்போது அவர் முதல் தடவையாகக் கூட ஜனாதிபதி யாக இருந்தார், ''அவர் நான்காவது தடவையாகக் கூட ஜனாதி பதி தேர்தலுக்கு நிற்பார்'' என்று கூறினேன். அவர் நான்காவது தடவையாக கூட பதவி வகிப்பார். நமது நாடு இரண்டாம் உலகப் போரில் ஈடுபடும்படி இழுக்கப்படுவோம்'' என்று கூறினேன். 107இப்போது, இத்தாலி தேசத்தில் எழும்பிக்கொண்டிருக்கும் சர்வாதிகாரி (அது முஸோலினி) எத்தியோப்பியாவின் மேல் படையெடுப்பான் என்றும், எத்தியோப்பியா அவன் காலடியில் வீழும்'' என்றும் கூறினேன். நான் அன்று ''ரெட்மேன்ஸ் ஹால்'' என்ற இடத்தில் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்த போது, அன்றிரவிலே நான் அதைப் பிரசங்கித்ததற்காக என்னை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென்று எண்ணி ஒரு கூட்டம் மக்கள் அங்கே குழுமியிருந்தனர் என்பதை அறிந் திருக்கிற மக்கள் இங்கே அமர்ந்திருக்கின்றனர். அதை பிரசங் கிப்பதற்காக நான் அந்த 'ரெட்மேன்ஸ் ஹால்'' என்ற இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. ஆம், திருமதி வில்சன் அவர்களும் கூட நான் அதை கூறிய போது அங்கே இருந்தார்கள். என்பதை நான் அறிவேன். அது சரிதான். அவன் அதைச் செய்தானா? ''அவன் அவமானகரமான முடிவை அடைவான்'' என்று நான் கூறினேன். அவ்வாறே அவனும் செய்தான். அவனும் அவனுடைய காதலியும் தலைகீழாக வீதியிலே தூக்குப் போடப்பட்டு அவர்களுடைய ஆடைகளெல்லாம் கீழே கலைந்து விழுந்து தொங்கி கொண்டிருக்கிற நிலையில், இறந்து கிடந்தனர். நல்லது, அது அப்படியே நிறைவேறிற்று. பிறகு நான், “ஸ்திரீகள் வோட்டுப்போட அனுமதிக்கப் பட்டுள்ளனர். அப்படிப்பட்ட செயலானது இத்தேசத்திற்கு ஏற்பட்ட மிகவும் அவமானகரமான செயலாகும். அவ்வாறு வோட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பதில், அவர்கள் ஒரு நாளில் தவறான நபரைத் தேர்ந்தெடுப்பார்கள்'' என்று நான் கூறினேன். கடந்த தேர்தலிலே அப்படிப்பட்ட காரியத்தை அவர்கள் செய்து விட்ட னர். 108நான்காவதாக: “விஞ்ஞானமானது மிக வேகமாக முன் னேற்றமடையும்'' என்று நான் கூறினேன். இல்லை, இங்கே மூன்றாவது ஒன்று உள்ளது. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இங்கே அடுத்ததான இது இப்போது கூறுகிறேன். நான்காவதாக: “நமது யுத்தம் ஜெர்மனியோடு இருக்கும் என்றும், அவர்கள் பெரிய காங்க்ரீட்டினாலான ஒரு மதில் சுவரைக்கட்டி மதிலிடுவார்கள் என்றும், அமெரிக்கர்களுக்கு பெரிய மடங்கடிப்பு ஏற்படும்'' என்றும் நான் கூறினேன். இப்போது சர்வவல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக நான் நிற்கிறேன், அவர் அதை அறிவார், அமெரிக்கர்களை அந்த மதிலண்டையிலே அந்த சுயாதீன நாஜிகள் அவ்வாறு உதைத் துத் தள்ளுவார்கள் என்பதை நான் கண்டேன். அது என்ன என்பதை அறிந்திருக்கிற அந்த சீக்ஃப்ரெட்லைன் என்ற மதில் கட்டப்படுவதற்கு பதினொரு ஆண்டுகளுக்கு முன்பாக நான் அதைப் பற்றி முன்னுரைத்திருந்தேன். தேவன் உண்மையுள்ள வராயிருக்கிறாரா? இப்போதும் அவர் நடக்கப்போகிறவை களைப் பற்றி முன்னுரைக்கிறாரா? கவனியுங்கள். அது நான் காவதாக உள்ளது. 109ஐந்தாவதான காரியம் என்னவெனில்: ''மோட்டார் வாகனங்கள், ஸ்டிரியங்கைப் பிடித்து மனிதன் ஓட்டாமல் தானாகவே ஓடுமளவுக்கு விஞ்ஞானமானது மிகவும் முன்னேற்ற மடையும். கார்கள் முடிவு பரியந்தம் முட்டை வடிவத்தில் வடிவமைக்கப்படுவது தொடர்ந்து நடைபெறும்'' என்று கூறினேன். அமெரிக்க குடும்பம் அகன்ற நெடுஞ்சாலையில் தங்களது காரில், ஸ்டியரிங் வீல் எங்கே இருக்குமோ அதற்கு நேராக தங்கள் முதுகுகளை காண்பித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டு செக்கர்ஸ் அல்லது சீட்டாட்டம் ஏதோ விளையாடிக் கொண்டே அந்த காரில் சவாரி செய்து கொண்டு செல்லுவதை நான் கண்டேன். இப்போது அந்தவிதமான காரானது வந்து விட்டது. அதைப் பற்றி தொலைகாட்சியில் காட்டப்பட்டது. 'பாபுலர் சயன்ஸ்'' “மெக்கானிக்ஸ்'' ஆகிய பத்திரிக்கை களிலே அதைப்பற்றி செய்தி வெளியாகியுள்ளது. அது தொலை விலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒருவகை ராடாரினாலே இயக்கப்படுவதாக இருக்கிறது. அவர்களுக்கு இனிமேல் தங்கள் காரிலே ஸ்டியரிங் வீலே தேவைப்படாது. நீங்கள் தொலைபேசியில் டயல் செய்வதைப் போன்று, வாகனத்தில் டயலை ஒழுங்குப்படுத்திக்கொண்டால் போதுமானது, அந்த கார் உங்களை விபத்து ஏதுமின்றி, எங்கும் மோதாமல் பத்திரமாக எடுத்துச்செல்லும். காந்த சக்தியினாலே, வேறு எந்த வாகனமும் உங்கள் வாகனத்தில் மோதாமல் இருக்கும்படி செய்து, பத்திர மாகச் செல்லும். அவ்விதமான வாகனத்தை அவர்கள் உரு வாக்கியுள்ளார்கள் இப்போது ஓ, என்னே! அதைக் குறித்து எண்ணிப் பாருங்கள். இது சம்பவிப்பதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்பாக முன்னுரைக்கப்பட்டது. 110ஜனாதிபதி கென்னடி அவர்கள் தெர்தெடுக்கப்பட்ட தேர்த லுக்கு இது நம்மை கொண்டு வருகிறது. இப்போதுதான் இந்த காரானது காட்சியில் தோன்றியுள்ளது. ஆகவே ஏழு சம்ப வங்களில் ஐந்தாவது சரியாக நிறைவேறிவிட்டது. பிறகு நான் முன்னுரைத்துக் கூறியதாவது: “நான் ஒரு பெரிய அழகான ஸ்திரீயை மிகவும் ராஜரீக பாணியில் இரத்தாம்பரம் போல் உடையுடுத்தினவளாய் கண்டேன்.'' அதை இங்கே வளை அடைப்புக் குறிக்குள் எழுதி வைத் துள்ளேன். 'அவள் அமெரிக்காவில் ஒரு பெரிய ஆளுகை செய்கிறவளாய் இருந்தாள். அவள் ஒரு வேளை கத்தோலிக்க சபையைக் குறிக்கக்கூடும்” என்று கூறினேன். ஒரு ஸ்திரீ, ஏதோ ஒரு ஸ்திரீ... அது கத்தோலிக்க சபையாகத்தான் இருக்கும் என்ப தாக எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாது. என்னால் கூற இயலாது. நான் கண்டதெல்லாம், ஒரு ஸ்திரீயை, அவ்வளவு தான். ஆனால் இது ஒரு ஸ்திரீயின் தேசமாகும். தீர்க்கதரிசனத் திலே இத்தேசம் பதின்மூன்று என்ற எண்ணைப் பெறுகிறது. அவளுக்கு பதிமூன்று கோடுகள் அவளது கொடியில் உள்ளன. பதின்மூன்று நட்சத்திரங்கள், அவள் பதிமூன்று காலனிகளை ஆரம்பித்தாள். எல்லாம் பதிமூன்று பதிமூன்று என்பதாகத்தான் இருக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் பதின்மூன்றாம் அதிகாரத்திலும் அவள் தோன்றுகிறாள். அவள் பதின்மூன்று என்ற எண்ணையுடையவளாயிருக்கிறாள். எனவே அவள் ஒரு ஸ்திரீயின் தேசமாயிருக்கிறாள். 111ஏனைய தேசங்களை விட அமெரிக்கா தான் தன்னுடைய விவாகரத்து நீதிமன்றங்களின் வாயிலாக அதிகமதிகமான விவா கரத்துக்களை உண்டாக்குகிறது. நமது தேசத்தின் ஒழுக்கப் பண்புகள் மிகவும் தாழ்ந்து காணப்படுகிறது. ஃபிரான்ஸ், இத்தாலி ஆகிய தேசங்களைக் காட்டிலும் அதிகமான விவாகரத் துக்கள் நமது தேசத்தில் காணப்படுகிறது. அத்தேசங்களில் வீதிகளிலே விபச்சாரம் மலிந்து காணப்படுகிறது. ஆனால் அவர் கள் விபச்சாரிகள்தான். ஆனால் நமது தேசத்திலோ நமது பெண் கள், விவாகமான பெண்களாயிருந்து கொண்டு, கணவனை யல்லாமல், வேறு பல மனிதரோடும் வாழ்கிறவர்களாய் காணப்படுகிறார்கள்; அதே போல் விவாகமான ஆண்கள் தங் களுடைய மனைவியில்லாத வேறு ஸ்திரீகளோடு வாழத் தலைப்பட்டிருக்கிறார்கள். பலதார மணம் அனுமதிக்கப்பட்டுள்ள தேசங்களில் இதைவிட ஆயிரம் மடங்கு சிறந்து காணப்படுகிறது. ஆயினும் பல தார மணமானது தவறானது என்பதை நாம் அறிவோம். ஆனால், நாம் எத்தனையாய் தரம் தாழ்ந்து காணப் படுகிறோம் என்பதைக் காண்பிப்பதற்காக இங்கே என்னிடம் ஒரு செய்தித்தாளிலிருந்து கத்தரித்து எடுக்கப்பட்ட ஒரு செய்திக் குறிப்பு உள்ளது. அதில், நமது அமெரிக்க வாலிபர்கள் வெளிநாட்டிற்கு, போன யுத்தத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது, எழுபத்தைந்து சதவீதமான பேர்கள்... ஒரு நிமிடம் பொறுங்கள், வெளி நாட்டில் யுத்தத்திற்கு சென்று விட்டு நமது வீரர்கள் திரும்பி, வந்த போது அவர்களில் நான்கில் மூன்று பேர்களுடைய மனைவிகள் அவர்களை விவாகரத்து செய்து விட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. பெரிய செய்தித் தலைப்பு களில், “நமது அமெரிக்கா ஜனங்களின் ஒழுக்கப்பண்புகளுக்கு என்ன நேர்ந்து விட்டது?'' என்று கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதை படித்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் யாவருமே அதைப் படித்திருக்கிறீர் கள் என்று நான் கருதுகிறேன். நமது அமெரிக்க ஸ்திரீகளின் ஒழுக்கப் பண்புகளுக்கு என்ன நேர்ந்துவிட்டது. வேற்று ஆண்க ளோடு அவர்கள் சமமாக தொழிற்சாலைகளில் பணிபுரிகிறார்களே. இது ஒரு ஸ்திரீகளின் தேசமாயிருக்கிறது. அவள் என்னத் தைப் பெற போகிறாள்? ஒரு பெண் தேவதையைத்தான். 112இதன்பிறகு, நான் திரும்பிப் பார்த்தேன்; அப்போது இந்த அமெரிக்க ஐக்கிய நாடுகள் எரிந்து புகைக்காடாய் போனதா கவும், பாறைகள் வெடித்து சிதறியதாகவும் கண்டேன். குவித்து வைக்கப்பட்டுள்ள பெரிய மரக்கட்டைகளிலே தீப்பிடித்துக் கொண்டு எரிந்தால் எப்படியிருக்கிறதோ, அவ்விதமாக அமெரிக்கா எரிந்துகொண்டிருந்தது. நான் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பார்த்தபோது, அது முழுவதும் வெடித்து தகர்ந்து போயிருந்தது. அப்போது அத்தரிசனம் என்னை விட்டு அகன்று போனது. ஏழு காரியங்களில் ஐந்து ஏற்கெனவே நிறைவேறிவிட்டன. இங்கே அது சுற்றி வந்து காண்பிக்கிறதென்னவெனில், பிறகு நான் முன்னுரைத்தேன். கர்த்தர் அதை என்னிடம் கூறினார் என்று நான் கூறவேயில்லை. ஆனால் அன்று காலையிலே சபை யிலே நின்று நான் கூறியதாவது: சுவற்றின் ஒரு முனையிலிருந்து மறுமுனைரைக்கும் நான் சென்றுவிட்டு நான் கூறினேன். ''இவ்வாறு சம்பவங்கள் ஒவ்வொன்றாக நடைபெற்று முன் னேறிக் கொண்டே வந்து எல்லாம் 1933க்கும் 1977க்கும் இடை யிலே சம்பவித்து முடிந்துவிடும் என்று முன்னுரைக்கிறேன். ஆனால் நான் ஏன் இதை கூறுகிறேன் என்பது எனக்குத் தெரியாது'' என்று கூறினேன். தேவன் என் இருயத்தை அறிவார், அதை நான் எப்படிக் கூறினேன் என்பதை, நேற்று வரையிலும் நான் அறியவில்லை. நேற்றுத்தான் 1977ம் ஆண்டு தான் எழுபதாவது யூபிலி ஆண்டாகும் என்பதை அறிந்து கொண்டேன். இஸ்ரவேலுக்கும் ஆண்டவர் அந்த அளவு காலம் கொடுத்திருந்தார். இப்போது முடிவு காலத்திலும் அவ்வாறே காரியமானது இருக்கும். எனவே நாம்... இங்கே நாம் இக்காலத்தின் முடிவில் வந்துவிட்டோம். எழுபதாவது வாரம் வரப்போகிற கட்டத்தில் நாம் இருக்கிறோம். சபையானது எந்த வேளையில் போய்விடும் என்பதை நாமறியோம். ஓ, என்னே! நாம் என்ன செய்யமுடியும், நண்பர்களே! நாம் எங்கே யிருக்கிறோம்? 113நாம் இப்போது எங்கேயிருக்கிறோம் என்பதை நீங்கள் காண்கிறீர்களா? தானியேலின் எழுபதாவது வாரத்தை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? இப்போது பாருங்கள், நாம் இந்த முத்திரைகளின் செய்திக்குள் கடந்து செல்லுகையில், முத்திரை களை உடைக்கப்போகையில், முதலாவதாக வருவது அந்த வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்து வருபவன்தான். அவனது கையில் ஒரு வில் உள்ளது. அந்த ஆள் யார் என்பதைக் கவனியுங்கள். அவனுக்குப் பிறகு வரும் மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் வருகிறவனைக் கவனியுங்கள். அவன் யார் என்பதை கவனித்து, அவன் எவ்வாறு வருகிறான் என்பதையும் பாருங்கள். அந்த 1,44,000 பேர்களைக் கவனியுங்கள். நித்திரை செய்யும் அக்கன்னியரை அவர் வருகையில் கவனியுங்கள். பிறகு நடக்கப்போகும் யாவற்றையும் கவனியுங்கள்; கோபக் கலசங்கள் ஊற்றப்படுதல், அந்த 'ஐயோக்கள், தவளைகளைப் போன்ற அம்மூன்று ஆவிகள் ஆகியவைகள் எவ்வாறு சரியாக பொருந்துகின்றன என்பதைக் கவனியுங்கள். சரியாக அந்த வாதைகள் ஊற்றப்படுதலைக் குறித்தும் கவனியுங்கள். ஒவ் வொரு முத்திரையும் திறக்கப்படும் போதெல்லாம், ஒரு வாதை யானது ஊற்றப்படுவதையும், ஒரு அழிவு வருவதையும் கவனியுங்கள், இந்தக் கடைசி காலத்தில் என்ன சம்பவிக்கிறது என்பதையும் கவனியுங்கள். 114ஓ, இந்த மூன்று தீர்க்கதரிசிகளையும் கவனியுங்கள் - இல்லை, இந்த இரண்டு தீர்க்கதரிசிகளையும் அவர்கள் இங்கே எழும்புகையில் கவனியுங்கள். வாரத்தின் மத்தியிலே அவ்விருவரும் கொல்லப்படுவார்கள், அதன்பிறகு, அர்மகெ தோன் யுத்தமானது துவங்கும், அப்போது, தேவன் தாமே பேசத் துவங்குவார். அப்போது அவரே நின்று யுத்தம் செய்ய ஆரம்பிப்பார். அத்தீர்க்கதரிசிகள் வாதைகளினால் பூமியை அடிப்பார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பிரசங்கிப்பார்கள். அவர்கள் அதேவிதமாகத்தான் ஞானஸ் நானமும் கொடுப்பார்கள். ஆதி அப்போஸ்தலப் பிதாக்கள் செய்த அதே காரியங்களை இவர்களும் செய்வார்கள்; அவர்களை அநேகர் பின்பற்றுவார்கள். ஆனால் ஒரு பெரிய சமஷ்டியாக கூடிக்கொண்டுள்ள ஸ்தாபனங்கள் தொடர்ந்து அதற்கெதிராக இருக்கும், ஆயினும் அத்தீர்க்கதரிசிகளான் வல்லமையை அவைகளால் முறியடிக்க இயலாது போகும். இறுதியாக அவர்கள் கூறுவார்கள்: “நாம் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, ஒரே ஸ்தாபனமாக ஆக்குவோம்'' என்பார்கள். அப்போது அவன் என்னத்தை உள்ளே கொண்டு வருவான்? அவன் உள்ளே அருவருப்பை, ரோமனியக் கொள்கைகளை கொண்டு வருவான். பாழாக்குதலை உண்டாக்கும் காரியத்தை எங்கும் பரந்து விரிந்து இருக்கும்படி அவன் செய்வான். அருவருப்பு பாழாக்குதலை உண்டாக்கும். அது அசுத்தம் ஆகும். 115ஒரு மிருகத்தின் மேல் அமர்ந்திருக்கிறவளாய், இரத்தாம் பரம் உடுத்தினவளாய் இருக்கும் அந்த வேசித்தாயை உங்க ளுக்கு நினைவிருக்கிறதா? அம்மிருகத்திற்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் உண்டாயிருந்தன என்பதும் நினைவிருக்கிறதா உங்களுக்கு? அவளுடைய வேசித்தனமான அருவருப்பு களினால் நிறைந்த ஒரு பாத்திரத்தை அவள் தன் கையில் பிடித் திருந்தாள். அதுதான் அவள் தன் ஜனங்களிடத்தில் உட் செலுத் திய அவளுடைய போதகமாகும். என் சகோதரரே, அங்கேதான் விஷயம் உள்ளது. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். சிறுபிள்ளைகளே, நமக்குத் தெரியாது. இன்றிரவில், நாம் மீண்டும் திரும்பி வருவதற்கு இயலாதபடி நாம் ஒரு வேளை ஜீவித்திருக்காமல் போகக்கூடும்; ஒருவரையொருவர் மீண்டும் சந்திக்க இயலாதபடி நாம் ஜீவித்திருக்காமல் இருக்கக்கூடும். நான் அறியேன். ஆனால் முடிவானது மிகவும் அருகாமையில் உள்ளது. முடிவானது மிக அருகாமையில் உள்ளது. இங்கே யொரு வேதவாக்கியம் உள்ளது. அங்கே அது முழுவதுமாக பூரணமாக, வேதப்பூர்வமான அத்தாட்சியாக உள்ளது. உங்களுக்கு புரிந்துகொள்ள இயலாத காரியம் ஏதேனும் இருப்பின், ஒரு குறிப்பின் மூலம் அதைப்பற்றி எனக்கு எழுதித் தெரியப்படுத்துங்கள். ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். ஒலிநாடாக்கள் மூலம் இச்செய்தியை உலகின் பல்வேறு பாகங் களிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிற சகோதரரே, உங்களுக்குப் புரியாதவைகள் ஏதும் இருப்பின், எனக்கு அதை தெரியப் படுத்துங்கள். நான் உங்களுக்கு உதவ முடியும். நான் கூறுப வைகளை நீங்கள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கக்கூடும். உங்களு டைய ஸ்தாபனத்தோடு நான் ஒத்துக்கொள்ளாமலிருக்கக் கூடும். உங்களையல்ல, ஆனால் உங்களுடைய ஸ்தாபன அமைப் போடு நாள் கருத்தொருமித்திருக்க முடியாது. கத்தோலிக்க மக்க ளோடு நான் இசையாதிருக்கவில்லை. கத்தோலிக்க மக்களை நான் விரும்பவில்லை என்று நான் கூறவில்லை. ஸ்தாபனத்திலுள்ள மக்களை நான் விரும்பவில்லை என்று நான் கூறவில்லை. அவ் வாறல்ல. நான் எல்லா ஜனங்களையும் நேசிக்கிறேன். ஆனால் உங்களை கட்டி வைத்திருக்கிற ஸ்தாபன அமைப்போடுதாள் நான் இசைவு கொள்ளாதிருக்கிறேன். அதனுடைய அமைப் பைத் தான் ஏற்றுக்கொள்ளவில்லை. 116நான் ஜெர்மனிக்கு எதிராக விரோதப் போக்கைக் கொண்ட வனல்ல. ஆனால் அந்த நாஜிக் கொள்கைக்கு எதிராகத்தான் கருத்து கொண்டுள்ளேன். இத்தாலியருக்கு எதிராக உள்ள வனல்ல நான். பாசிசக் கொள்கைகளுக்கெதிராகத்தான் நான் கருத்து வேறுபாடு கொண்டவனாயிருக்கிறேன். அந்தக் காலத் தில் நான் இன்னொரு காரியத்தைக் குறித்து முன்னுரைத்திருந் தேன். முன் காலத்தவருக்கு அது நினைவிருக்கும். மூன்று பெரிய “இஸம்''கள் உள்ளன. அது உலகை இன்றைக்கு தனது ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள முயலுகிறது. அவையாவன: பாசிசக் கொள்கை, நாஜிக் கொள்கை, கம்யூனிசம்”, நான் அவைகளைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறேன்? யாவும் கம்யூனிசக் கொள்கையில் போய் முடிவுறும் என்றேன். பிறகு, நான் உங்களையெல்லாம் அப்போது என்னோடு சேர்ந்து திரும்பக் கூறும்படி வைத்தேன். அதென்னவெனில், “உங்கள் கண்களை ருஷியாவின் மேல் வையுங்கள்'' என்பது தான். உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? ”ருஷியாவின் மேல் உங்கள் கண்களை வையுங்கள்'' அவைகள் யாவும் கம்யூனிசத்தில் போய் முடிவுறும். அதன்பிறகு, அதுவெல்லாம் கத்தோலிக்க மார்க்கத்தில் போய் சங்கமமாகும். கடைசி காலத்தில் அதுவெல் லாம் கத்தோலிக்க கொள்கையில் போய் சங்கமமாகிவிடும் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அது சரியாக அப்படித்தான் நடக்கும். கிறிஸ்துதாமே வருகையில், அது அர்மகெதோன் யுத்தக் களத்தில் இருக்கும். 117ஆனால் இந்த மூன்று தீர்க்கதரிசிகள் அல்லது இந்த மூன்ற ரை வருடங்கள், அது வெளிப்படுத்தின விசேஷம் 11:3-இல் உள்ளது, அதை நீங்கள் அநேக தடவைகள் வாசித்திருக்கிறீர்கள். “என்னுடைய இரண்டு சாட்சிகளும், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனம் சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.” ஆயிரத்து இருநூற்றறுபது நாட்கள் என்பது எத்தனை ஆண்டுகள். மூன்றரை ஆண்டுகள். எழுப தாவது வாரத்தில் மத்தியிலே அவர்கள் தெருக்களிலே கொல் லப்படுவார்கள். ஆகவே, தானியேலின் எழுபது வாரங்கள் எங்கே உள்ளன என்பதை கவனித்தீர்களா? நாம் எந்த சமயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் கண்டீர்களா? நாம் முடிவான நேரத்தில் இருக்கிறோம், எனது இனிய நண் பர்களே, நாம் முடிவான நேரத்தில் இருக்கிறோம். இந்த நாட்கள்..... தேசங்கள் உடைகின்றன; இஸ்ரவேல் விழித்தெழும்புகிறது; தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்கள் நிறைவேறின (அந்தக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்) புறஜாதி நாட்கள் எண்ணப்படுகின்றன (இதோ இங்கே) பயங்கரங்கள் நேரிடுகின்றன, சிதறிப் போனவரே, உம் மந்தைக்கு திரும்புவீர். நாம் பாடுவோமாக: மீட்பின் நாள் நெருங்குதே மானுடரின் இதயம் பயத்தால் சோருதே, ஆவியால் நிரம்பியிருப்பீர், உம் விளக்குகள் தூண்டிவிட்டு எரியச் செய்வீர் தலையை நிமிர்த்திப் பார்ப்பீர், உம் மீட்பு சமீபமே ஓ! அது அற்புதமாயிருக்கவில்லையா? தேசங்கள் உடைகின்றன; இஸ்ரவேல் விழித்தெழும்புகிறது தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்களின்படி, புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன பயங்கரங்கள் நேரிடுகின்றன, மந்தையைவிட்டு சிதறியோரே, திரும்புவீரே உம் சொந்த மந்தைக்கு இப்பொழுது, யாவரும் சேர்ந்து; மீட்பின் நாள் நெருங்குதே மானுடரின் இதயம் பயத்தால் சோருதே, ஆவியால் நிரம்பியிருப்பீர், உம் விளக்குகளை தூண்டி எரியச் செய்வீர் உம் மீட்பு சமீபமானதால் உம் தலைகளை உயர்த்துங்கள் நான் ஒரு சரணத்தை உங்களுக்கு பாடுவேனாக. கள்ளத் தீர்க்கதரிசிகள் பொய்யுரைக்கின்றனர்; இயேசு கிறிஸ்து நமது தேவனென்ற தேவ சத்தியத்தை அவர்கள் மறுதலிக்கின்றனர். (அவர்கள் மூன்று ஆட்கள் என்ற தத்துவத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால் அவர் அப்படியல்ல, அவரே நமது தேவன்).... அப்போஸ்தலர் நடந்த பாதையிலே நாம் நடப்போமாக மீட்பின் நாள் நெருங்குவதால், மனிதரின் இதயங்கள் பயத்தால் சோருதே, ஆவியால் நிரம்பியிருப்பீர். உமது விளக்குகளை தூண்டிவிட்டு எரியச் செய்வீர் உம் மீட்பு சமீபமானதால் தலைகளை உயர்த்துங்கள் நீங்கள் சந்தோஷமாயிருக்கவில்லையா? செய்திக்கு திரும்பி வாரீர், சகோதரனே! மூல உபதேசத்திற்கு திரும்புவீர், சகோத ரனே! பெந்தெகொஸ்தேக்கு திரும்புங்கள்! உண்மையான ஆசீர் வாதத்திற்கு திரும்புவீர்! இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்குத் திரும்புவீர்! பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்குத் திரும்புவீர்! அற்புத அடையாளங்களுக்குத் திரும்புவீர்! பெந்தெகொஸ் தேக்கு திரும்புவீர். உங்கள் ஸ்தாபனங்களை விட்டு விலக்குங் கள். பரிசுத்த ஆவிக்கு திரும்புவீர். அவரே நமது போதகர். மீட்பின் நாள் நெருங்குவதால் மானுடரின் இதயம் பயத்தால் சோருதே, ஆவியால் நிரம்பியிருப்பீர், உம் விளக்குள் தூண்டிவிட்டு எரியச் செய்வீர் உம் மீட்பு நெருங்குவதால் தலையை நிமிர்த்துங்கள் 118அது அற்புதமாயிருக்கிவில்லையா? தீர்க்கதரிசி என்ன கூறினான்? ஒரு சமயம் உண்டாகும். அது இரவுமல்ல, பகலு மல்ல. அது எவ்வாறிருக்கும் என்பதை பாருங்கள். கவனித்தீர் களா? சபைக் காலங்கள் நெடுக மிகவும் மோசமாக இருந்திருக்கிறது. ஆனால் அது.... மாலை நேரத்திலே வெளிச்சம் உண்டாகும் மகிமைக்குப் போகும் பாதை நிச்சயம் கண்டடைவீர் தண்ணீர் வழியிலே இன்று ஒளியுண்டு இயேசுவின் விலையேறப் பெற்ற நாமத்திலே அடக்கம் பண்ணப்படுவீர் வாலிபரே, வயோதிபரே பாவங்களை விட்டு மனந்திரும்புவீர் அப்போது பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் பிரவேசிப்பார். இச்சாயங்கால வெளிச்சங்கள் வந்துவிட்டன, தேவனும் கிறிஸ்துவும் ஒருவர்தான் என்பது சத்தியம் சாயங்கால நேரத்திலே (யாவரும் சேர்ந்து பாடுவோம்) வெளிச்சம் உண்டாகும்; மகிமைக்குப் போகும் பாதையை நிச்சயம் நீர் கண்டடைவீர் தண்ணீர் வழியிலே இன்று ஒளியுண்டு இயேசுவின் நாமத்திலே அடக்கம் செய்யப்படுவீர் வாலிப வயோதிபரே, பாவத்தை விட்டு மனந்திரும்புவீர் பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் பிரவேசிப்பார் சாயங்கால வெளிச்சங்கள் வந்துவிட்டன தேவனும் கிறிஸ்துவும் ஒருவர்தான் என்பது சத்தியமே (மூவரல்ல, ஒருவர்தான்) 119செய்திக்கு திரும்புவீர்! ஆதிக்குத் திரும்புவீர்! பவுல் என்ன போதித்தானோ அவற்றுக்கு திரும்புவீர். அவன் கொடுத்த ஞானஸ்நானத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட, ஞானஸ் நானத்திற்குத் திரும்புவீர். தவறான விதமாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டவர்களை அவன் கண்டபோது, மீண்டும் சரியாக ஞானஸ்நானம் பண்ணப்படுங்கள் என்று அவர்களுக்குக் கூறினான். பரலோகத்திலிருந்து ஒரு தூதன் வந்து வேறு எதை யாவது பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன் என்று கூறினான். ஆகவே அது மீண்டும் செய்திக்கு திரும்புதலாகும். நண்பர்களே. இது சாயங்கால வேளையாகும். ஓ, நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கிறீர் களா? இப்போது எத்தனை பேர்கள், தானியேலின் எழுபது வாரங்களையும், இந்த எழுபதாவது வாரம் என்ன என்பதையும் கண்டு கொண்டீர்கள்? எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர் களோ, ஆமென் என்று சொல்லுங்கள். (சபையார் 'ஆமென்'' என்று பிரதியுத்தரம் சொல்லுகிறார்கள் - ஆசி). தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 120இப்போது, அடுத்த காரியம் என்ன? ஏழு முத்திரைகள், கர்த்தர் அனுமதிக்கும்போது அதைப்பற்றி நாம் உடனே பார்க்க லாம். அது எப்போது; என்பது எனக்குத் தெரியாது. எப்போ தெல்லாம் அவர் அதை நமக்கு அளிக்கிறாரோ, அப்போதெல் லாம் அவைகளைக் குறித்து காண்போமாக. அப்போது நமக்கு நீண்டதொரு கூட்டமானது உண்டாயிருக்கும், ஏனெனில், நாம் 6ம் அதிகாரத்திலிருந்து 19ம் அதிகாரம் வரையிலும் எடுத்துக் கொள்ளப்போகிறோம். எவ்வளவு மெதுவாக அதைப் பற்றி நாம் பார்க்கலாமோ, அந்த அளவுக்கு நாம்... இப்போது, இதை யாரும் தவறாகப் புரிந்து கொண்டு போகும்படி நான் விரும்பவில்லை. ஒலிநாடாக்கள் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. எவரும் அதைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாதென்று நான் விரும்புகி றேன். இப்போது தவறாகப் புரிந்து கொண்டுவிட்டு, “சகோதரன் பிரான் ஹாம் 1977-இல் இயேசு வருவார் என்று கூறினார்'' என்று பின்னால் சொல்லப்பட நான் விரும்பவில்லை. நான் ஒருபோதும் அவ்விதமான காரியத்தைக் கூறவேயில்லை. இன்றைக்குக்கூட இயேசு வரலாம். நான் தரிசனத்தில் நடைபெறப் போவதாகக் கண்ட காரியங்கள் 1933க்கும் 1977க்கும் இடையில் நடைபெறும் என்றும், ஏதோ ஒன்று சம்பவிக்கும் என்றுதான் நான் முன்னு ரைத்தேன். நான் கண்டவைகளில் ஏழில் ஐந்து ஏற்கனவே நிறை வேறிவிட்டன. 121நம்மிடம் இப்போது இருக்கிற அணுசக்தி சம்மந்தமான காரியங்களைக்கொண்டு, நாம் நம்புவது என்னவெனில் ..... தற்போது நமது ஜனாதிபதி என்ன சொன்னார் என்பதை கவனித் தீர்களா? இன்னொரு யுத்தம் வரவேண்டுமாம். பெர்லினைக் கொண்டு ஒரு உதாரணம் ஏற்படுத்த வேண்டுமென தான் விரும்புவதாக அவர் கூறினார். ஒரு எடுத்துக்காட்டை ஏற்படுத்த அவர் விரும்புகிறார். நமது கொல்லைப்புறத்தில் இருக்கிற இங்கேயுள்ள இந்த க்யூபாவைக் குறித்து என்ன? அதைக் கொண்டு ஒரு உதாரணத்தை ஏற்படுத்த வேண்டுவது ஏன்? அதைக் குறித்து என்ன? ஓ, அவ்வாறு பேசுவது அபத்தமானது! பார்த்தீர்களா? ஓ, சகோதரரே, நாம் சரியாக முடிவின் சமயத்தில் இருக்கி றோம். எவ்வாறு இருக்கும் என்று தேவன் சொன்னாரோ அதே விதமாகத்தான் அது சம்பவிக்கப்போகிறது. ஆகவே, அவர் கூறியவைகளைப் படித்து, சீர்படுத்திக்கொண்டு, அதற்காக ஆயத்தப்படுத்திக்கொண்டு, அது வரட்டும் என்று கூறி இவ்வித மாக இருப்பதை தவிர்த்து வேறு எதையும் செய்வதில் என்ன உபயோகம் இருக்கிறது? நாம் அதற்காக காத்துக் கொண்டிருக் கிறோம். ஆனந்தமிகு ஆயிரமாண்டு அரசாட்சியின் நாள் வருவதை எதிர்பார்த்திருக்கிறோம் அப்போது நமது துதிக்கப்பட்ட கர்த்தரும் வந்து, காத்து நிற்கும் தமது மணவாட்டியை அழைத்துச்செல்வாரே இனிமையான விடுதலையின் நாளுக்காய் பூமி ஏங்கி தவித்து கதறுகிறதே அந்நாளிலே நம் இரட்சகரும் பூமிக்கு திரும்ப வந்திடுவாரே ஓ, நமது கர்த்தர் பூமிக்குத் திரும்பி வருகிறாரே ஆம், நமது கர்த்தர் பூமிக்குத் திரும்பி வருகிறாரே ஓ, சாத்தான் ஆயிரமாண்டு கட்டப்படுவான் இயேசு பூமிக்குத் திரும்பி வந்த பிறகு, நமக்கு சோதனைக்காரன் இருக்கமாட்டான் எத்தனை பேர்கள் ஆயத்தமாயிருக்கிறீர்கள்? உங்கள் கரங் களை உயர்த்துங்கள் ஓ, என்னே ! ஓ, நமது கர்த்தர் பூமிக்குத் திரும்பி வருகிறாரே (நாம் எழுந்து நின்று ஒருவரோடொருவர் கைகுலுக்கிக் கொள்வோம்) ஆம், நமது கர்த்தர் பூமிக்குத் திரும்பி வருகிறாரே ஓ, சாத்தான் ஆயிர வருடம் கட்டப்படுவான் இயேசு பூமிக்குத் திரும்பி வந்த பின், நமக்கு சோதனைக்காரன் இருக்கமாட்டான் ஓ, நமது கர்த்தர் பூமிக்குத் திரும்பி வருகிறாரே ஆம், நமது கர்த்தர் பூமிக்குத் திரும்பி வருகிறாரே ஓ, சாத்தான் ஆயிர வருடம் கட்டப்படுவான் இயேசு பூமிக்குத் திரும்பி வந்த பின், நமக்கு சோதனைக்காரன் இருக்கமாட்டான். நமது வருத்தம், கதறுதலுக்கெல்லாம் இயேசு திரும்பி வருதலே தீர்வாயிருக்கும் கர்த்தரை அறியும் அறிவு பூமியையும் சமுத்திரம், வானம் யாவையும் நிரப்பிடுமே வியாதி அனைத்தையும் தேவன் நீக்குவார் வருத்தம், கண்ணீர் யாவும் தீருமே இயேசு பூமிக்குத் திரும்பி வந்தபின். ஓ, நமது கர்த்தர் பூமிக்குத் திரும்பி வருகிறாரே ஆம், நமது கர்த்தர் பூமிக்குத் திரும்பி வருகிறாரே ஓ, சாத்தான் ஆயிர வருடம் கட்டப்படுவான் இயேசு பூமிக்குத் திரும்பி வந்த பின், நமக்கு சோதனைக்காரன் இருக்கமாட்டான். 122ஓ, என்னே! நன்றாக இருப்பதாக நீங்கள் உணரவில்லையா? சிந்தியுங்கள், சிநேகிதரே! இது பெந்தெகொஸ்தே! இது ஆராதனை. இது பெந்தெகொஸ்தே. நாம் நமது கைதட்டி பாடு வோமாக. பெந்தெகொஸ்தே மக்களே, யாவரும், உங்கள் பழைய மெதோடிஸ்ட் சம்பிரதாயங்களை உங்களை விட்டு அகற்றி விடுங்கள் இப்போது வாருங்கள். நாம் இப்பாடலை பாடு வோமாக. ஓ, நமது கர்த்தர் பூமிக்குத் திரும்பி வருவாரே ஆம், நமது கர்த்தர் பூமிக்குத் திரும்பி வருவாரே சாத்தான் ஆயிரமாண்டு கட்டப்படுவான் இயேசு பூமிக்குத் திரும்பிய பின், நமக்கு சோதனைக்காரன் இருக்கமாட்டான் ஓ, நமது கர்த்தர் பூமிக்குத் திரும்பி வருகிறாரே (வேதம் அவ்வாறு கூறுகிறது ) ஆம், நமது கர்த்தர் பூமிக்குத் திரும்பி வருகிறாரே சாத்தான் ஆயிரமாண்டு கட்டப்படுவான் இயேசு பூமிக்குத் திரும்பி வந்த பின், நமக்கு சோதனைக்காரன் இருக்கமாட்டான் நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நாம் நமது கரங்களை அவருக்கு நேராக உயர்த்துவோமாக. நான் அவரை தேசிக்கிறேன் அவர் என்னில் முந்தி நேசம் வைத்ததால் கல்வாரி மரத்திலே அவர் என் இரட்சிப்பை கிரயத்திற்குக் கொண்டாரே நான் அவரை நேசிக்கிறேன் அவர் என்னில் முந்தி நேசம் கொண்டதால் கல்வாரி மரத்திலே அவர் என் இரட்சிப்பை கிரயத்திற்குக் கொண்டாரே.